Thursday, April 10, 2008

எண்ணங்கள்

எண்ணங்களின் கூட்டுச்செயர்க்கையால் குழம்பி போகிறேன். வாழ்க்கைச்சூழ்நிலையில் எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் ஒரே சமயத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது இயலாத காரியம் என்று அறிந்தும் கூட ஏன் குழம்பி போகிறேன் ?

எந்த பிரச்சனைக்கும் தீர்வு என்னால் மட்டுமே என்பதாலா அல்லது மற்றவர்களின் வாழ்க்கை வெற்றிகளை என் வாழ்க்கை தோல்விகளோடு ஒப்பிட்டு நோக்கும் பார்வையினாலா ?
தொடர்ச்சியாய் எழுகின்ற அலைகள் போல என்மனத்தின் சஞ்சலங்கள்.
ஏன் வாழ்க்கையின் தோல்விகள் என்னை சோர்வடைய செய்கின்றன ?
காரணங்கள் எதுவாக இருக்கும் ?
என்னுடைய பெற்றோர்களா அல்லது என்னுடைய சுற்றுபுறமா, குறிப்பிட்ட எந்த காரணத்தினால் வாழ்க்கையின் போராட்டங்களுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் போகிறது.
அடிப்படையில் நான் பெற்றிக்கவேண்டிய குணங்கள் என்ன ? இனியும் நான் பெறவேண்டிய குணங்கள் என்ன ? வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நான் பெறக்கூடிய விளக்கங்கள் தான் எவை ? அவ்வாறு கிடைக்க கூடிய விளக்கங்கள் மூலமாக வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய தீர்மானங்கள் என்னவாக இருக்கும் ?
எந்த ஒரு செயலுக்கும் ஓர் விளைவா அல்லது பல விளைவுகளுடன் தொடர்புடையதா ...
என்னுடைய ஒரு செயலுக்கு நான் எதுவரையில் காரணமாக இருக்கமுடியும். அந்த குறிப்பிட்ட செயலின் இயல்பை புரிந்து கொள்வது எங்ஙனம் ?
வாழ்க்கையில் அறிந்தவை சில அறியதவைப் பலவாக இருந்தாலும் வாழ்க்கை என்பது விடுவிக்க முடியா புதிரா அல்லது அவிழ்ந்து விடும் முடிச்சா ... ...
( தொடர்வோம் ... )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails