Saturday, June 21, 2008

கருத்துமோதல்கள்

என்னுடைய கருத்துக்கள் யாவும் உன்னுடைய பார்வைகளுக்கு எதிரானதாக அமைந்துவிட்ட காரணத்தினால் உன்னுடைய சுயம் காயம்பட்டதால் என்மீது உன்கோபம்.

நீ போட்டிருந்த திட்டங்கள் அதை நிறைவேற்றுவதற்காக நீ போட்ட வேடங்கள், வேடங்கள் புனைந்து கொண்டு நீ செய்த செயல்கள் யாவும் தவறாக அமைந்துவிடுமோ என்ற பயம் காரணமாக என்மீது உன்கோபம்.

நீ செய்த செயல்கள் தகுந்தகலங்கள் வந்தவுடன் வெளிப்படும் விளைவுகளை எடுத்துரைக்க உன்னுடைய எதிபார்புகளுக்கு எதிராக அமைந்ததால் என்மீது உன்கோபம்.

நீ செய்யும் செயல் உன்னுடைய பார்வையில் மிகவும் சரியான ஒன்றாக தெரிய என்னுடைய பார்வை என்பது உன் நலனில் அக்கறை எடுத்து சொல்லப்பட்டது என என் மனதுக்கு தெரியும், உனக்கு தெரியுமா ?

சொல்கின்றபொழுது எல்லாம் உனக்கு தவறாக தோன்றலாம், எதிரானதாக தோன்றலாம் எதிர் எதிர் கருத்து மோதல்களின் விளைவாகத்தான் ஓர் செயலின் முடிவாக மற்றொரு செயலின் தொடக்கமாக அமைகிறது.

சங்கிலி தொடர் என ஓர் செயலின் விளைவுகள் பல செயல்களாக விரிந்து நிற்க இது உன்னுடைய வாழ்க்கை என்பது உனக்கு தெரியுமா ?

கருத்துமோதல்கள் தொடர்நிகழ்வாக அமைதுவிடுகையில் ஓர் செயல் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் உட்படுமா அல்லது சரியான பலனை தருமா என்பது அச்சத்திற்குரியதே. சரியான நேரத்தில் சரியான அளவில் ஏற்படும் கருத்துமோதல்கள் சரியான விளைவுகளை தரும் என்பதையும் மறந்துவிடலாகாது.

கருத்துமோதல்கள் வாழ்வின் அவசியமாக நம்முடைய கருத்துமோதல்கள் இயல்பனவையே.

என்மீது உன்கோபமும் நியாமானதே.

(தொடர்வோம்)







1 comment:

மங்கை said...

//நீ போட்டிருந்த திட்டங்கள் அதை நிறைவேற்றுவதற்காக நீ போட்ட வேடங்கள், வேடங்கள் புனைந்து கொண்டு நீ செய்த செயல்கள் யாவும் தவறாக அமைந்துவிடுமோ என்ற பயம் காரணமாக என்மீது உன்கோபம்.//

நெகிழ வைத்த வரிகள்.. பின்னூட்டம் இட்டே ஆகவேண்டும் என்று கட்டாயபடுத்தியது மனது...

Pls remove the word verification

LinkWithin

Related Posts with Thumbnails