Sunday, September 14, 2008

எனக்கும் எனக்குமான உறவு

நண்பருக்கும் எனக்கும் கடுமையான வாதம் ஓர் குறிப்பிட்ட விசயம் தொடர்பாகவாதத்தின் தொடக்கத்திலிருந்தே என்னுடைய உள்உணர்வு, டேய் நீ வாதம் செய்யவேண்டாம் என எச்சரிக்கை செய்ததையும் மீறி என் நண்பருடைய பேச்சுக்கு எதிர்வாதம் செய்து கொண்டிருந்தேன்.

அவர் பேச.. நான் பேச..

வாதம் முடிவில் எனை அமைதியிழந்த மனதுக்கு சொந்தகாரனாக்கியது.
பக்கத்து வயல்காரர் என்னிடம் நாற்றுகள் பாக்கி உள்ளது. நீ வாங்கி கொள் என்று சொல்ல அந்த சமயம் என் உள்உணர்வு இந்த நாற்று வேண்டாம் என்று சொல்ல..

நானும் வேண்டாம் என மறுத்துவிட

நடந்தது அவர் விட்டிருந்த நெல்நாற்று அந்த பருவத்திற்குரியது கிடையாது.எனக்கு வேறு இடத்தில் நாற்று வாங்கி நட்டு என்வயலில் கதிர்கள் வந்துவிட்டனஅவர் வயல் இன்னமும் பயிராக உள்ளது.
உள்உணர்வின் படி நடந்தேன் தப்பித்தேன்.

இதேபோல் ஒவ்வொரு சமயத்திலும் எனை உள்உணர்வு வழிநடத்தியுள்ளது. என் உள்உணர்வை அலட்சியம் செய்தபொழுது எனக்கு கிடைத்த முடிவுகள் துன்பத்திற்குரியன மதித்து நடந்தபொழுது முடிவுகள் நன்மையாக அமைந்தது.

எனக்கும் உள்உணர்வுக்கும் உள்ள உறவு நட்பு.

எனக்கும் உள்உணர்வுக்கும் உள்ள முரண்பாடு விரோதம்.

எனக்கும் எனக்குமான உறவு என் வாழ்வு.

(தொடர்வோம்)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails