Sunday, November 30, 2008

கட்டு அவிழ்த்த மாடு

கடை முடித்து வீடு திரும்புகையில் இரவு மணி பத்தாகியிருந்தது. வீடு எங்கள் ஊர் குளக்கரை வரை நடந்து சென்று திரும்ப ...

தெரு முடிவின் எதிர் புறம் நேர் கொண்ட பார்வையுடன் விரைவான நடை தெரு பாதையின் நடுவில் வந்து கொண்டிருக்கும் அந்த சிகப்பு மாடு இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஆள் இல்லா அந்த நேரம் நான் பயத்தில் ...

எண்ணற்ற கேள்விகளாய் என் மனது ஏன் இந்த வேகத்துடன் மாடு வருகிறது ? யாருடைய வயலில் போய் மேயப்போகிறதோ தெரியவில்லை என்கிற கவலை வேறு (என் வயலும் அதற்குள் அடக்கம்)

நான் யோசிக்க... மாடு நெருங்க ...

நடையின் வேகம் குறைந்து நின்று நிமிர்ந்த என்முகம் நோக்கிய மாடு அதன் இலக்கை திசை திருப்பி இரவின் பரப்புக்குள் எங்கேயோ ...

சரியான வழிகாட்டுதல் இல்லா மனசும் இப்படிதாங்க நாம தேடி போற இலக்கானது இடையில வர்ற தடையினலா திசை மாறி போயிருதுங்க சரியான வழிகாட்டுதல் அவசியங்க ...

இல்லாட்டினா சரியான வழிகாட்டிய தேடிபோறது அவசியங்க

(தொடர்வோம்)

2 comments:

mathynilaa said...

உங்கள் பதிவுகள் , ஓட்டங்கள்(subject) எனக்கு பிடித்து இருகின்றன
.தொடருங்கள் ,இன்று தான் பார்த்தேன். என் பதிவு : . (nilaablogspot.com)

தவறுகள் said...

தங்கள் வருகைக்கு நன்றி !

LinkWithin

Related Posts with Thumbnails