Sunday, December 07, 2008

புதுசா போட்ட ஜீன்ஸ்

அவனுடைய 20 வயதில் ஆசைப்பட்டது. மற்றபையன்கள் போடுவது மாதிரி நாமும் ஒரு ஜீன்ஸ் போட வேண்டும். தன் குடும்பம் இருந்த சூழலில் ஜீன்ஸ் பேண்ட் கனவு அவனுக்கு கனவாகவே இருந்தது.

அவன் குடும்பத்தில் அவனை ச்சோ்த்து ஒன்பது போ். குடும்ப நிர்வாகம் புள்ளைகளின் தேவைகள் படுகஷ்டம்.
ஏதோ மானம் காக்க துணி உயிர் வாழ உணவு கிடைத்ததே பெரும்பாக்கியமாய் இருந்தது.

ஊதியம் சிறுதொகையாக கிடைக்கப்பெறும் வேலை அமையப்பெற்றான். ஊதியம் வீட்டுக்கும் அவனுடைய சிறுதேவைகளுக்கும் சரியாக இருந்தது. சில மாதங்களில் போதுமானதாக அமையவில்லை.

ஆசைப்பட்ட மனது நினைவுப்படுத்த தவறவில்லை.
ஏக்கமும் இயல்பாய் இருந்தது.

தன் கனவு பொருளான ஜீன்ஸ் பேண்ட் க்காக சேமிப்பான்.
அந்த தொகையும் திடீரென ஏற்படும் செலவினங்களுக்கு கொடுத்து விடுவான்.

ஒவ்வொரு வருடமும்தீபாவளிக்காக அவனுடைய நண்பர்களில்
ஒருவர் சட்டையோ, பேண்டோ எடுத்து கொடுப்பார். எடுத்து கொடுப்பதை வாங்கிகொள்வான்.

அவனுடைய ஆசை யும் கனவாகவே இருந்தது.

இந்த வருடம் தீபாவளி வந்தது. அவன் சற்றும் எதிர்பாராது அவனுடைய நண்பர் ஜீன்ஸ் பேண்ட் எடுத்துக்கொடுத்தார்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான், ஜீன்ஸ் அணிந்த அன்று அவன் மனதில் சந்தோஷ உணர்வுகள் பூத்துகொண்டே இருந்தது.

ஆனாலும் தான் சம்பாதித்து வாங்க முடியவில்லையே என்று தன்மனதில் வேதனை அடைந்தான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails