Saturday, December 20, 2008

வயல் நண்டும் கடல் நண்டும்

சிவப்பு, மஞ்சள் ,வெள்ளையில் ரோஸ், மேலே கருப்புமற்றும் வெள்ளை உருவங்கள் பசுமையாய் விரிந்திருந்த வயல்களுக்கு இடையே நகர்வதும் குனிவதுமாக இருந்தது.

குனிந்தவுடன் சிவப்பு மறையும் மஞ்சள் மறையும் பசுமை மட்டுமே விரிந்திருக்கும் சிறு இடைவெளி திடீரென சிவப்பும் மஞ்சளும் வெளித்தெரியும்.

என்ன பாக்குறிய…அன்பாய் விளிக்கும் குரலோசை நிமிடம் முகம் பார்த்து உடன் குனிந்து வளைகளுக்குள் கையை விடும்பாங்கு மிக கவனமாய் கண்கள் இரண்டும் உற்றுநோக்க இருவிரல்களால் பிடிக்கப்படும் வயல் நண்டு தான் கொண்டு வந்திருக்கும் பையில் போட்டு இறுக்கி பிடித்தாவாறு அடுத்த வளை நோக்கிய பயணம்.

போதும் என்ற எண்ணம் வரும்வரை பிடிக்கப்படும் வயல் நண்டுகள் குடும்ப நபர்களின் எண்ணிக்கை பொறுத்து அமையும்.

அன்றாட விவசாய கூலிகளின் அசைவ உணவு.

நண்டு எவ்வளவு கிலோ?

நூறு ரூபா…

என்னது நூறா.. பாத்து போட்டு குடும்மா அல்லது குடுப்பா..

நீ ..வேற..நண்டே கிடைக்கல..என்ன போட்டி தெரியுமா இதுக்கு..

சரி.சரி..ஒரு கிலோ குடும்மா, ப்பா…

இந்தா புடி ..எதாச்சும் குறைச்சுக்க…

ஊகும் குறைச்சே கேக்காதப்பா ..நீ நண்டுக்கு காசு குடுக்கல அந்தமணிக்கு எந்திரிச்சு போய் வாங்கிட்டு வரம்பார் அதுக்குதாப்பா..

நண்டு நல்லாருக்கும்மல..

நல்லா இருந்தாப்பா விக்கவே கொண்ட வருவேன்.

வாங்கும் திறன் உள்ளவர்களின் அசைவ உணவு.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails