Thursday, July 31, 2008

சிதறா மௌனம்

சிதறாத மௌனம்
இரு நிலைகள்
கடந்த ஒற்றையாய்
எல்லாம் அறிந்தது
சேர்ந்து
பிரிந்து
உருவாகி
அழிந்து
தன்னுள் தானாய்
உருமாறி
உருவகம் பெற
அழிந்து மாற்றம்
பெறும் எல்லாமாய்
சிதறா மௌனம்.








தேடுதல்கள்

சில செயல்கள் ஏன் நடைபெறவில்லை ? வாழ்க்கையின் நிகழ்வுகளில் கேள்விக்கான காரணங்களை தேடுகிறேன் தேடுதல் நிரந்தரமாய் என மனதில்.

என்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளின் முடிவுகளை முழுக்க முழுக்க எனது சார்பகவே கற்பனை செய்வதால் உண்மைகள் இதுதான் என்று தெரிந்த சில நிகழ்வுகளில் கூட எதார்த்தை ஏற்றுகொள்ள முடியாமல் ஏமாற்றங்களின் பிடியில் நான்.

ஒரு வழிப்பாதையாய் என் வாழ்வு நகருதல்களின் பயண முடிவு என்னவோ வேதனையும் விரக்தியும் தான்.

விரக்தியின் முடிவாய் நான் புலம்பும் சொற்கள் வாழ்வின் ஆதாரம் எது ? எதை நோக்கிய பயணமாய் என் வாழ்க்கை ? நான் பிறந்ததற்கான நோக்கம் என்ன ?

வினாக்கள் என்னமோ நான் முழுமையாய் வாழ்ந்து வாழ்க்கை இறுதிக்கு சென்ற அடையாளங்களாய் வேதனை என்னவோ சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பவர்களை பார்த்து நடக்க தெரிந்ததும் நடக்காமல் வேதனையடைந்த கதை தான்.

வெற்றியா தோல்வியா என்பது வாழ்க்கை இல்லை எந்த சுழலிலும் உயிர்ப்புடன் வாழும் தகுதியே வாழ்க்கை புரிதலுக்கு புரிதல்களுடன் கூடிய செயல்களே என நான் அறியும் வரையில் நான் புலம்பியது வாழ்வின் ஆதாரம் எது ?

நான் அடைந்தது என்னவோ வேதனை விரக்தியும் தான்.

(தொடர்வோம்)

Monday, July 28, 2008

தனிமை தவம்

மனிதர்கள் இல்லா
இடம் நோக்கிய
என் பயணம்
பல மனிதர்களின்
எண்ணங்களை
தக்கவைத்த என்மனது
தனி ஆளாய்
பல மனகுரலாய்
எனது பயணம்
அமைதியை தேட
ஓர் எண்ணம்
எனது முயற்சி
எழுகிறேன்
விழுகிறேன்
எழும் நேரம்
திருந்துகிறேன்
மனிதர்கள் நடுவில்
நான்
தனிமை தவமாய்
என் மனது ...

Monday, July 21, 2008

எதிர்ப்பு

நிலை நிறுத்தி
கொள்வதில் ஏற்படும்
இடையூறு எதிர்ப்பு .

Sunday, July 20, 2008

நட்பு

நல்லது கெட்டது
பகிர்வு இரண்டுக்கு
மட்டும் நட்பு .

Sunday, July 13, 2008

வரவேற்கிறோம் நாங்கள்

கடந்த வாரம் எங்க ஊர்ல கிடைச்ச பத்திரிக்கைல ஒரு செய்திங்க ...
அமெரிக்காவுல ஓரிகன் மாகாணத்து ஆண்மகனாம் பேர் என்னவோ தாமஸ் பீட்டி, பொம்பளைய்யா இருந்து ஆம்பளையா மாறி திரும்பவும் பொம்பளைய்யா மாறி குழந்தை பெத்துகிட்டாராம். ஆனாலும் சேதி ஆண்மகன் குழந்தை பெத்துகிட்டார். வரும் காலத்துல ஆண்களும் செயற்கையா கருப்பை வைச்சி புள்ள பெத்துகிலான்னு சொல்றாங்க ...

இயற்கைக்கு மாற இதெல்லாம் என்னங்க ...

நீங்க எழுதுங்க உங்க கருத்த ...

Sunday, July 06, 2008

வஞ்சகம்

வெளி ஆதரவாய்
உள் துரோகம்
வஞ்சகம் .

Friday, July 04, 2008

பசி

தொடர் இயக்க
தேவை
உணர்வு பசி .

விதண்டாவாதம்

தவறென தெரிந்தும்
தன் புரிதலை

வலியுறுத்தல் விதண்டாவாதம்

Thursday, July 03, 2008

வாதம்

பல புரிதல்கிடையே
தன் புரிதலை
வலியுறுத்தல் வாதம் .

Wednesday, July 02, 2008

நான் யார் ?

உன் மனபோக்கு
உன் பாதை
நான் யார் ?
சரியாய் உனக்கு
தெரிந்த பாதை
அது ...
சரியா ? தவறா ?
கருத்துகள் கூற
தகுதியில்லை எனக்கு
என் பாதையிலே
எத்தனை எத்தனை
மேடு பள்ளங்கள்
சமன் செய்ய
எத்தனை காலமோ
தெரியவில்லை எனக்கு
இன்னமும் தெரியா
என் பாதையிருக்க
உன் பாதையில்

நான் யார் ?
நீ போ
நான் போகிறேன் ...

LinkWithin

Related Posts with Thumbnails