Thursday, October 30, 2008

சஞ்சலமாய் மனது

கண்களை கவர்ந்த
வண்ணம்
ஆடை உடுத்திய
கைநாடி பிடித்து
மருந்துவம் பார்க்கும்
மருத்துவர் தன்
வயிற்று பிழைப்புகாய்
அங்கும் இங்கும்
தெருவில் அலைந்தவராய்
ஆடை வண்ணம் கவர
கண்களால் உற்றுப்பார்க்க
என் கண்களை
உற்று நோக்கியவராய்
ஜயா..
சித்த மருத்துவம்
வந்து விழுந்த
வாய் வார்த்தைகள்
விரும்பாது
என் முகம் திருப்ப
திரும்பவும்
என் முகம் நோக்கியவராய்
மருத்துவம் பார்த்து
காசு பார்க்கும் ஆவலாய்
அவர் மனது
விரும்பாமலும் விரும்பியும்
வெளிகாட்டும்
எனது முகம்
சஞ்சலமாய் மனது.

Tuesday, October 28, 2008

எல்லாம் நிகழும் எதுவும் நிகழும்

நடப்பது எளிது
எனில்நடந்து விடு
எதற்காக காத்து நிற்கிறாய்
நீ காத்திருக்கும் நேரம்
யார் யாரோ
உன் வழிப்பாதையில்
அவர்களைபின் தொடர்பவனாய் நீ
பின் தொடர்வது எளிது
வழி நடத்துவது கடினம்
பின்னால் திரும்பு
அனுபவங்கள்
உனை அரவணைக்க
முன்னால் பார்
எதிர்காலங்கள் வழியாய்
அந்த கணம்
நீ நடந்தாக வேண்டும்
இல்லையேல் இறந்த காலங்களுக்குள்
சிதைக்க படுவாய்
எதிர்காலம் என்னவோ
பொய் தான்
பொய் தான் உன்வாழ்வு
நட...
வழிபடும் தடைகளை
மெதுவாய் கட...
எல்லாம் நிகழும்
எதுவும் நிகழும்
இது தான் நிகழ
அவசியமில்லை
ஏற்றுக்கொள் எல்லாம்
உனக்கு உரியதே


Friday, October 24, 2008

உதவி

இயலாமை பிறர்க்கு
செயல் முடிப்பவர்கள்
செய்த செயல் உதவி .

Monday, October 20, 2008

பொய்

தவிர்க்க முடியா சூழல்
தன்னை காத்துக்கொள்ள
வெளிவந்த மனித வார்த்தை பொய் .

Sunday, October 19, 2008

புகைப்பட தொகுப்பு

உதவி

இது நிஜமல்ல

உழைச்சாதாங்க ஒரு கவளச்சோறு




Friday, October 17, 2008

உண்மை

முடிவில் ஒரேநிலை
தொடர் நிகழ்வு
உண்மை .

Tuesday, October 14, 2008

கல்வி

மனிதன் இயற்கையோடு
ஒன்றிணைய , வேறுப்படுத்தி கொள்ள
ஏற்படுத்திய தந்திரம் கல்வி .

Saturday, October 11, 2008

விற்பவனுக்கு ஒரு கண் போதும் வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டுமாம் !

இங்க் பேனா தேவைபட்டதால் அருகில் பக்கத்து நகரத்துக்கு செல்லும்போதுதரமான தயாரிப்பு நிறுவத்தின் பேனாவை கேட்டு வாங்கினேன்.

வீட்டிற்கு வந்து எழுதிப்பார்க்கையில் இங்க் கசிந்து என்னுடைய கைவிரல்கள் எல்லாம் இங்க் கறை.

நான் திரும்பவும் சென்று மாற்றுவதென்றால் எனக்கு ஆகும் போக்குவரத்து செலவிற்கு ஈடாக இன்னமொரு ஒரு புதியபேனா வாங்கி விடலாம்.

இந்த நிகழ்வில் விற்பவனுக்கு ஒரு கண் போதும் வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும் என்பது எந்தளவிற்கு உண்மை.

நம்பிக்கையுடன் நான் வாங்கியது புகழ்ப்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தினுடைய பேனா. ஆனாலும் எனக்கு ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் மனஅமைதி குறைவுகட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

நாம் எவ்வளவுதான் விழிபுணர்வுடன் செயல்கள் செய்தாலும் இத்தகைய சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை.

ஓவ்வொருடைய வாழ்க்கையிலும் சம்பவங்கள் வேறாய் சங்கடங்கள் நிகழும். நம் வரையில் நாம் சரியாக இயங்கி அதற்கு மேலும் இது போன்று நிகழும் சங்கடங்களை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வோம்.

(தொடர்வோம்)


அறியாமை

உயிர்ப்பின் தேவை
உணவைப்பெற வழி தெரியா
நிலை அறியாமை .

Monday, October 06, 2008

அழிவு

சூழல் மாற்றம்
மூலக்கூறு சேர்க்கைகளின்
விலகல் நிகழ்வு அழிவு .

Saturday, October 04, 2008

ஆக்கம்

சூழல்
மூலக்கூறு சேர்க்கைகளின்
தொடர் நிகழ்வு ஆக்கம் .

ஒன்றாய் ஓரே உணர்வாய்

மகிழ்ச்சியை பரவ விடு
இயற்கையை அனுபவி
இயற்கையுடன் ஒன்றினை
நீயும் இயற்கையே ...
உனையே நீ
உண்டு பண்ண
வழி தெரியுமா ?
புதிர் அது
புரிந்து கொள்ள
முயற்சி செய்
புரிய நான் மறைய
நீ தெரிவாய்
இயல்பாய் இருப்பாய்
எதையும் ஏற்றுக்கொள்வாய்
அது இயற்கை
கொண்டுவர தெரிந்ததற்கு
கொண்டு போகவும் தெரியும்
ஆக்கம் வளர்ச்சி
அழிவும்
சுழலும் சக்கரங்கள்
உட்செல்வோம்
அதே வேளையில்
வேறு ஒன்றாய்
வெளிவருவோம்
உள்ளே வெளியே
ஓன்றாய் ஓரே உணர்வாய்







Wednesday, October 01, 2008

மௌனம்

செயல்களுக்கு தொடர்பு இல்லாத
எண்ணங்கள் இல்லா
மனநிகழ்வு மௌனம் .

LinkWithin

Related Posts with Thumbnails