Wednesday, December 31, 2008

இருந்தது இருக்கிறது இருக்கும்

வந்து போகும்
மணிதுளிகள்
சோ்க்கையாய்
நாட்கள்
மாதங்கள்
வருடங்கள்
வாழ்த்துகள் சொல்ல
மனமில்லை
தினமும் விடியல்
இன்று மட்டும்
புதிததாய் பிறந்தபூமியா
இது..
இருந்தது
இருக்கிறது
இருக்கும்
நாம் மட்டும்
வருவோம்
இருப்போம்
அழிவோம்
முகங்கள்மாறும்
பருவங்கள் போல
யுகம் யுகம்
நடக்கும் கூத்து
புது வருடம்
எதுவாய் வாழ்த்துகள்
கூற..

போ.. போய் மாத்திட்டு வந்துரு

ஆங்கில அறிவு தெரியா கிராமத்து பையன். தமிழ் படிக்க தெரியும் எழுத தெரியாது.

வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மளிகை கடை சென்றார். தனக்கு தேவையான பொருட்கள் வாங்கும் போது..

எங்க ..முடி கொட்டுது நல்ல ஹேர் ஆயில் இருந்தா கொடுங்க.

இந்தாங்க இது நல்ல ஆயில் என்று சொல்லி அதற்குரிய தொகையை பெற்றுக்கொண்டார்.கடைக்காரர்.

அந்த பையனும் வாங்கி வந்து அவன் நண்பன் நிற்குமிடம் வந்து ..

டேய்..முடி கொட்டுதுன்னு ஹேர் ஆயில் கொடுத்தாரு இது நல்லா இருக்குமா என்று சொல்லியபடி நண்பனிடம் காண்பிக்க..

எல இது ஹேர் ஆயில் கெடையாதுடா.. ஹேர் டை .. போ ..போய் மாத்திட்டு வந்துரு.
திரும்பவும் போய் கடைக்காரரிடம் கேட்க இது நல்ல ஹேர் ஆயில் தான் என்று திரும்பவும் அனுப்பினார்.

திரும்பவும் வந்து டேய்.. இது நல்ல ஆயிலான்டா என்று சொல்ல..

நண்பன் உடனே அவனை அழைத்து ஹேர் டை பெட்டியில் இருந்த விபர குறிப்பை எடுத்து தமிழில் அச்சிடப்பட்ட விபரத்தை படித்து காண்பித்தான்.
போ.. போய் மாத்திட்டு வந்துரு என்றான் நண்பன்

வக்கால.. என்று கிராமத்து பாசையில் கடைக்காரனை திட்டிவிட்டு மாற்ற சென்றான்.

கடைக்காரரை என்னவென்று சொல்வது.

Sunday, December 28, 2008

வாசலை தாண்டிய நட்புகள்.

எங்கண்ண வந்தீங்க..

அட ஏய்யா .. அவங்க வீட்டு விசயமா வந்தய்யா..

நானும் பத்து நாளா அலையறதாவே இருக்கேனய்யா..

ஏன் வேல அப்பிடியே கெடக்கு.. என்ன செய்யறதுன்னே தெரியல..

லாபத்த மட்டுமே எதிர்பாக்குறாங்கய்யா.. நஷ்டம் சொன்னா நம்மல தப்பு சொல்லிறாங்க..

நமக்கு ரொம்ப கஷ்டாமா போயிருது... தம்பி

வேணாம் வம்புன்னு பட்டுகாம இருந்தா .. ஏன் வர போவ இல்ல அப்படீன்னு கோவிச்சுக்கிறாங்க ..

என்ன செய்றதுன்னே தெரியல.

ஏன்டா நெருங்கி பழக்கம் வைச்சுகிட்டோன்னு இருக்கு தம்பி.

தம்பீ ஏன் அனுபவத்துல வாச படியோட பழக்கவழக்கத்த நிப்பாட்டிக்கனும் .

வாச படி தாண்டுன பழக்கவழக்கத்துல கட்டாயம் சங்கடம் உண்டு தம்பி.

நீங்க சொல்றது ரொம்ப சரிண்ணே..

Saturday, December 27, 2008

தேவை ஒரு யானை முட்டை

புருசன் பொண்டாட்டி கல்யாண நாளன்று புருசன் மனைவிக்கு பரிசுப்பொருள் தருவது வழக்கம் .

அது ஐந்தாவது வருட திருமண நாள். அவன் மனைவி அவன் வாங்கி தருவதை ஏற்றுக்கொள்வாள். நான்கு வருடமும் அவள் வாய் திறந்து எதுவும் கேட்டதே கிடையாது.

அதனாலயே இவள் எதும் கேட்க மாட்டாளா என்பது புருசனின் எதிர்பார்ப்பு .

எதிர்பராமல் அந்த வருடம் திருமணநாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே எனக்கு என்ன வாங்கி தரபோறீங்க?
என்று தன் புருசனிடம் கேட்டாள்மனைவி.

புருசனுக்கு ஆச்சரியம் என்ன வேணாலும் கேளு நான் வாங்கி தர்றேன் என்றான்.

இவளுக்காக ஒரு தனிதொகையே சேமித்து வைத்திருந்தான்.

நிஜமா..நான் கேட்பதை வாங்கி கொடுத்து விடுவீர்களா..

உம் கேளு..

எனக்கு ஒரு யானை முட்டை வாங்கி கொடுங்க என்றாள் மனைவி.

அதிர்ந்து போன கணவன் . என்னது..
வேலை பளுவின் காரணமாக “முட்டை இடும் யானை ” என்ற சிறுகதையை பாதியில் படித்ததோடு முடித்து விட்டு முடிவு தெரியாமல் தேவை ஒரு யானை முட்டை என சிந்திக்கிறேன்.

Friday, December 26, 2008

முன்னோர்கள் சொன்னப்படி

திடீரென திரளும் கருமேகங்கள் மழையாய் பொழியும் மழைக்காலம் அது. காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகி புயல் பற்றிய எச்சரிக்கை விடுத்தது ...

கடலோர கரையோர மாவட்டங்கள் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழையுடன் காற்று.

மனிதகுலம் தான் தன்னிறைவு பெற்றுவிட்டதாக கருதும் நாகரிக வளர்ச்சியின் அத்தனை வசதிகளும் பயன்படாமல் போன அவலம்.

மழை என்னவோ சில நாட்கள் தான் மனிதர்கள் படும் அவலமோ சொல்ல முடியாதது.

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் மழைக்காலம் அது முழுமையான மழைக்காலம். மூன்று மாத காலங்களையும் சமாளித்து வாழ்ந்தார்கள். நம்மையும் வாழ வைத்தார்கள்.

இயற்கையாய் ஏற்படுத்தி சென்ற வாய்க்கால்களை மேற்கொண்டு சீர்செய்து வைத்துக்கொண்டார்கள். மனித மனம் விரிந்து ஆபத்து காலங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்தது.

பேரிடர் சமயங்களிலும் சமாளித்து வாழ்ந்தார்கள். நம் தலைமுறை கஷ்டபடாமல் வாழ்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. முன்னோர்கள் சொன்னதை திரும்பவும் சிந்திப்போம். அடிப்படை மாறாமல் அதில் புதுமைகள் செய்ய கற்றுக்கொள்வோம்.

Thursday, December 25, 2008

நடிப்பும் உண்மையும்

ஆறாவது படிக்கும் மாணவன் ஒருவன் தன் சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான் .

பந்து வீச அவனை அழைத்தார்கள் . முதல் பந்து மட்டையாளனுக்கு ஆப் சைடில் நன்றாக விலகி சென்றது.

உடனே பவுலர் ஓ… அய்யோ.. சே..என்று இருகைகளை தலையில் கட்டிக்கொண்டான்.

அவன் வீசிய ஒவ்வொரு பந்தும் ஸ்டம்புக்கு நேராக செல்லவில்லை. ஆனால் அவன் காட்டிய அங்க சேட்டைகள் அற்புதம்.

அவனுடைய வெளிப்பாடு சிறப்பாக பந்து வீசும் பவுலர்கள் சிறு இடைவெளியில் விக்கெட்டை தவறவிட்டு
வெளிப்படுத்தும் உடலியக்க முகபாவனைகளாக அமைந்தன.

நுணுக்கம் அறியாமல் பந்து எப்படி வேண்டுமானலும் வீசலாம் சேட்டைகள் அவசியம் என்பதை அவன் மனதில் பதிய வைத்துள்ளான் .

சரியான வழிகாட்டுதல் இல்லாததால் வந்த விளைவு.

சரியான வழிகாட்டி இல்லா தவறான கற்றுக்கொள்ளல் ஆபத்தான விளைவுகளையே கொண்டு வரும்.

Tuesday, December 23, 2008

யார் பைத்தியம்?

அந்த பைத்தியம் எப்படி இருக்கு? என்று ஒருவர் தன் அம்மாவிடம் தன்னுடைய அண்ணனை ப்பற்றி விசாரிக்கிறார்.

என்ன அர்த்தத்தில் விசாரித்தார் என்று தெரியவில்லை.

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விஷயத்தில் பைத்தியமாகவே உள்ளான்.

விசயங்கள் என்பது தான் வேறாக இருக்கும். பைத்தியம் என்ற நிலைமை ஒன்றுதான். நிலைமையின் தீவிரம் விசயங்களை பொறுத்தே அமையும்.

மிகச்சிறந்த உதாரணமாக மணி கணக்காக செல்போன் பேசும் நபர்களை சொல்லலாம்.

எது நம்மி்டம் பலவீனமாக உள்ளதோ அது கிடைக்கும்போது பயன்பாட்டின் அளவைப்பொறுத்து திடீரென கிடைக்காமல் போகும்போது பைத்தியம் ஆககூடிய வாய்ப்புகள் அதிகம்.

இப்ப சொல்லுங்க யார் பைத்தியம்?

பைத்தியம் பைத்தியமா ... அல்லது பைத்தியத்தை பைத்தியம் கண்டுபிடிப்பவர்கள் பைத்தியமா...

Monday, December 22, 2008

பீர் பார்ட்டி - கிளைமேக்ஸ்

திரும்பவும் மறுநாள் ஒன்றாக கூடினார்கள் பீர் பார்ட்டிகள்.

என்ன ராஜா மீன் கொழம்பு ஊத்தி சாப்பாடு சாப்பிட்டியலா ராத்திரி?

அட.. நீங்கவேற நெலம ஒண்ணும் சரியில்ல..வாந்தி எடுக்குற மாதிரி இருந்திச்சு..

ஏன்டாப்பா வம்புன்னுட்டு பாய் விரிச்சு போட்டு படுத்துட்டுங்க.

காலை ஏந்திரிச்சா.. அம்மா ஒரே பாட்டு உட்டுகிட்டு
இருந்திச்சி..

நைசா நழுவிட்டேங்க.. ஒரு பீரோட நிப்பாட்டிருக்கனுங்க..

ஆமா..நீங்க என்னாச்சு..

அத ஏன் கேக்குறீங்க

நான் ஒரு பீர் அடிச்சுட்டு போன தனியா வீட்டு திண்ணையில உக்காந்து எதாச்சும் யோசிப்பங்க..

நாம தெளிவா இருக்கோம் நெனைச்சிட்டு போய் திண்ணையில
உக்காந்தாங்க பேண்ட் சட்டையெல்லாம் மாத்தல ..

படுத்துகிட்டே யோசிப்போம் நெனைச்சிட்டு கையில இருந்த நீயூஸ்பேப்பர் விரிச்சி படுத்தங்க ..

அவ்வளதான் ப்ளாட்.. கால அஞ்சு மணி எங்க பெரிம்மா வந்து

ஏலே ..எந்திரி ..என்ன இப்படி படுத்துகிடக்க.. உடம்பு சரியில்லையா

போ எந்தரிச்சு போய் உள்ள படு..

அப்பதான் முழிச்சு பாத்தா எந்நெலம எனக்கு தெரிஞ்சுதங்க.

நம்ம கோபி கத என்னாச்சு தெரியல ராஜா.

எல்லா நம்ம கததான் ஆயிருக்கும்.

Sunday, December 21, 2008

பீர் பார்ட்டி

எங்க வீட்டுல ஊர்க்கு போயிருகாங்க இன்னக்கு பீர் குடிக்கனுப்பா ..

என்னடா கோபி குடிக்கலாமா

குடிக்கலாமுங்க..

சொல்லி கொண்டே இருக்கும்போது இடையே ராஜா..என்ன பீர் குடிக்கிறீங்களா?

இன்னக்கு மீன் கொழம்பு அதான் நெனைச்சுகிட்டே வந்தேன்.

ஏங்கிட்ட நூறு ரூபா இருக்குப்பா..

ஏங்கிட்ட நூத்தம்பதப்பா.. ராஜா

கோபி .. ஊறுகா மட்டும் போதுப்பா..

ஏங்க..வேற எதும் வேணாமா..

வேண்டாம் பாத்துகலாம்.

வாங்கி வந்து குடிக்கும்போதே .. லேசாக ஏறியவுடன்

பத்தாது போலிருக்கே இன்னொரு ரவுண்ட் வரலாமா..

ஏங்கிட்ட நூத்தம்பது இருக்கு..

முன்னடி நூறுதான் இருக்குன்னஇது கோபி

அது வந்து சாமான் வாங்குற காசு அதான்

இப்ப என்ன செய்வ ..

பாத்துக்க வேண்டியதான்.

மறு ரவுண்ட் முடிய என்ன போவலாம..

இருங்க போவலா..என்ன சொன்ன..

நீ போ. . நான் போறன்..நீ போ..

புகைப்பட தொகுப்பு








Saturday, December 20, 2008

வயல் நண்டும் கடல் நண்டும்

சிவப்பு, மஞ்சள் ,வெள்ளையில் ரோஸ், மேலே கருப்புமற்றும் வெள்ளை உருவங்கள் பசுமையாய் விரிந்திருந்த வயல்களுக்கு இடையே நகர்வதும் குனிவதுமாக இருந்தது.

குனிந்தவுடன் சிவப்பு மறையும் மஞ்சள் மறையும் பசுமை மட்டுமே விரிந்திருக்கும் சிறு இடைவெளி திடீரென சிவப்பும் மஞ்சளும் வெளித்தெரியும்.

என்ன பாக்குறிய…அன்பாய் விளிக்கும் குரலோசை நிமிடம் முகம் பார்த்து உடன் குனிந்து வளைகளுக்குள் கையை விடும்பாங்கு மிக கவனமாய் கண்கள் இரண்டும் உற்றுநோக்க இருவிரல்களால் பிடிக்கப்படும் வயல் நண்டு தான் கொண்டு வந்திருக்கும் பையில் போட்டு இறுக்கி பிடித்தாவாறு அடுத்த வளை நோக்கிய பயணம்.

போதும் என்ற எண்ணம் வரும்வரை பிடிக்கப்படும் வயல் நண்டுகள் குடும்ப நபர்களின் எண்ணிக்கை பொறுத்து அமையும்.

அன்றாட விவசாய கூலிகளின் அசைவ உணவு.

நண்டு எவ்வளவு கிலோ?

நூறு ரூபா…

என்னது நூறா.. பாத்து போட்டு குடும்மா அல்லது குடுப்பா..

நீ ..வேற..நண்டே கிடைக்கல..என்ன போட்டி தெரியுமா இதுக்கு..

சரி.சரி..ஒரு கிலோ குடும்மா, ப்பா…

இந்தா புடி ..எதாச்சும் குறைச்சுக்க…

ஊகும் குறைச்சே கேக்காதப்பா ..நீ நண்டுக்கு காசு குடுக்கல அந்தமணிக்கு எந்திரிச்சு போய் வாங்கிட்டு வரம்பார் அதுக்குதாப்பா..

நண்டு நல்லாருக்கும்மல..

நல்லா இருந்தாப்பா விக்கவே கொண்ட வருவேன்.

வாங்கும் திறன் உள்ளவர்களின் அசைவ உணவு.

Friday, December 19, 2008

கனவு குதிரை

அப்பா….. நிம்மதி பெருமூச்சு விட்டாள் அவள்.

உடல் வலி அதிகம் இருக்கும் தலை சுத்தலா இருக்கும்மா..

வெயிட்..கியிட்..தூக்கதம்மா.. பாத்து இருந்துங்க...

பெரியவங்க ஒருவரின் அட்வைஸ்.

மாதவிலக்கு தள்ளி போக போன நாள் முதலாய் கனவுகள் பூக்க ஆரம்பித்தது. கனவு குதிரையில் மிக வேகமாக பயணம் செய்தாள்.

வித விதமாய் கனவுகள் கண்டு உள்ளம் மகிழ்ச்சி அடைந்தாள். குளிப்பாட்டி உணவூட்டி ஆடைஅணிவித்து பள்ளி அனுப்பி இன்னும் எவ்வளவோ..

கடுமையான வயிற்றுவலி வழக்கம் போலவே இருக்க அதிர்ந்தாள்.

ஏன் இப்படி என்று தனக்குள் கேள்விகள்கேட்டபடியே கொட்டியது விழிகளில் கண்ணீர். இந்த முறை வெற்றி கிட்டிவிடும் என்ற நம்பிக்கையின் வழி ஏற்பட்ட ஏமாற்றம்.

உறவுகளின் வழியே இன்னமொரு வாய்ப்பை எதிர்நோக்கி...

Wednesday, December 17, 2008

உள்ளங்கை சூடு

சாரல் காற்றுடன் குளிர் வித விதமான ஆடைகளில் தன்னை மறைத்து கொண்டு குளம் நோக்கி சிறுவர்கள்.

குளக்கரையில் ஆ.. ஊ.. டேய் ஓடி போய் குளிடா.. நிக்காதேடா.. என்று சொல்லும் சிறுவனை நோக்கி

டேய்.. நீ பர்ஸ்ட்.. நான் அப்புறம்..

ஏப்பா.. குளிருது.. டேய் தள்ளாத..அப்புறம் நான்…

ஒரு வழியாக குளித்து முடிந்து பக்தி பாடல்கள் பாட கோவில் நோக்கி சிறுவர்கள் பாடல்கள் பாடி முடித்ததும்

அவர் அவர் உள்ளங்கைகளில் சூடாக தரப்படும் வெண்பொங்கல் சூடு தாங்காமல்

ஊவ்..ஊபூ.. ஊதியப்படியே வலம் இடம் மாற்றி ஆறவைத்து உண்பார்கள்.

இடம் மாற்றி ஆறவைக்கையில் சிதறி போகும் வெண்பொங்கல் காக்கை குருவிகளின் உணவாக, சூடாக உண்ணப்படும் வெண்பொங்கல் வாயும் சூடு தாங்காமல் முழுங்கவும் முடியாமல் நாக்கினால் இடம் மாற்றி ஆறவைக்கும் அவஸ்தை நிதானமாய் லவகமாய் உருட்டி ஆறவைத்து வீணாகாமல் உண்ணப்படும் வெண்பொங்கல்.

அய்யோ இந்தா சூடு .. எனக்கு வேண்டாப்பா ..

டேய் ..நீ தின்னுறா.. என மற்றவர்களின் கையில் கொடுக்கப்படும் வெண்பொங்கல்.

தாங்கற அளவு எதுவாயிருந்தாலும் தாங்கிடலாம், தாங்க முடியாத போது எதுவாயிருந்தாலும் பலவிதமா திசை திரும்பிவிடும் வாய்ப்புகள் அதிகம்.

புத்தக வாழ்க்கை

இல்லற வாழ்வில் இப்படிதான் நடக்க வேண்டும். பக்தியா இப்படிதான் செய்ய வேண்டும். ஒரு செயலா இந்த முறைதான் சாத்தியம் என்றுகூறும் புள்ளி விபரங்களை வைத்துக்கொண்டு அதன்படியே செயல்களை அணுகும் விதம் எல்லாமே இயந்திரதனமாய் அமைகின்ற விநோதம்.

உயிர்ப்புடன் கூடிய மகிழ்ச்சி அல்லது உயிர்ப்புடன் கூடிய துன்பம் என்பது செயலின் விளைவுகளாய் இருக்கையில் யாரோ எழுதுகின்ற வாழ்க்கை முறைகளும் புள்ளி விபரங்களும்படிக்கின்றவர்கள் , பின்பற்றுபவர்கள் வாழ்க்கையிலோ அல்லது செயலிலோ மிகச்சரியாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எந்தளவிற்கு உண்மை.

மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் அத்தகைய எதிர்பார்ப்புகள் அமைந்தால் அதுஎத்தகைய கொடுமை.

புத்தக வாழ்க்கை வழி கிடைக்காமல் திண்டாடும் சமயங்களில் கிடைக்கும் பாதைக்கான வெளிச்சம் .

இயல்பான வாழ்க்கையில் புத்தக வாழ்க்கை என்பது ஓர் உதவி குறிப்பு.

Tuesday, December 16, 2008

எதார்த்தம் என்னவோ கடினம் தான்

காலங்கள் மாறுகிறது
சொல்லியபடி செயல்
காலச்சுழற்சியில்
காணாமல் போகும் மாயம்
எதிர்கால கனவுகள்
மெய் அல்லது பொய்
கிடைத்த வாய்ப்புகள்
கொடுக்கும் நம்பிக்கை
நானும் ஒரு
வெற்றியாளனாய்
கடிவாளம் அணியா
குதிரையாய்
எதார்த்தம் என்னவோ
கடினம் தான்
நேற்று தோற்றவை
நாளைய கனவாய்
இன்றைய நாளை
மறந்த.. என் மனதில்

கலாச்சாரம்

காலச்சூழல், இடம்
உயிர்ப்பின் வாழ்வுமுறை
கலாச்சாரம்.

Monday, December 15, 2008

ஏன்டா, என்ன இன்னா…..

கிராமத்து ஆள் தன்னுடைய தொலைக்காட்சி பெட்டியின் ரிமோட் பழுது ஆகிவிட்டதால் சரிசெய்ய பக்கத்திலிருக்கும் நகரத்திற்கு வந்தார்.

தொலைக்காட்சி சீர்செய்யும் கடைக்கு வந்து ரிமோட்டை சரி செய்யகொடுத்தார். அவர் வந்த சமயம் கடையின் மெயின் மெக்கானிக் இல்லை கடையில் வேலை கற்றுக்கொள்ளவந்த பையன்கள் இருவர் இருந்தார்கள்.

என்னங்க வேணும்? பையன்கள்

ரிமோட் சரி செஞ்சு குடுப்பா..

குடுங்க என்று வாங்கி ரிமோட்டை பிரித்து தொலைக்காட்சி சினிமாவில் முழ்கிவிட..

தம்பியலா..

போங்க போயிட்டு பத்து நிமிஷம் கழிச்சு வாங்க..

மற்ற வேலை முடித்து பத்து நிமிடம் கழித்து திரும்பி வர..

பையன்கள் வேறுவேலையில் முழ்கி இவர் வருவதை அறிந்தும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தினார்கள்.

அவருடைய ரிமோட்டைதான் சரி செய்கிறார்கள் என நினைத்துபொறுமையாக கிட்டதட்ட அரைமணிநேரம் நின்றிருப்பார்.

தம்பியலா …என்ன ரிமோட்ட சரி செஞ்சாச்சா..

அத சரி செய்ய முடியாது வேறதான் வாங்கனும்.

முன்னடியே சொல்லாம்ல தம்பியலா…

அதாம் இப்ப சொல்றோம்ல..

கோபம் தலைக்கேற கிராமத்து ஆள் ஏன்டா என்ன இன்னா மௌட்டி பய நினச்சுக்கிட்டியலா..

முட்ட…. கம்மானாட்டியலா.. என்று ஏகத்துக்கும் எகிற

பயந்து போன பையன்கள் இருங்கண்ண இந்த பாத்து குடுத்துடுறோம் என்று சொல்லி

அடுத்த ஐந்து நிமிடத்தில் சரிசெய்து கொடுத்தார்கள்.

அலட்சிய படுத்துதலையும் அவமதிப்பையும் யார் தாங்கிறதும் கொஞ்சம் கஷ்டம் தாங்க.

Saturday, December 13, 2008

கன்னி சாமியும் ஏர்டெல்லின் வியாபாரமும்.

கார்த்திகை மாதம் கருப்பு வேட்டி கட்ட ஆசைப்பட்டார்.

தின உழைப்பு தின கூலி கருப்பு வேட்டி கட்டினார் . முதல் வருடம் கருப்பு வேட்டி கட்டியதால் கன்னி சாமி ஆனார்.

கன்னி சாமி ஆனவர்கள் அவர் அவர் வசதிகேற்ப பத்து சாமிகளுக்கு மேல் அழைத்து வந்து பூசை நடத்தி விருந்து வைக்க வேண்டும்.

பத்துசாமி கொண்ட குழுவை அழைத்து பூசை வைக்க வேண்டுமென்றால் தினகூலிசாமி ரூ700 ம் மூன்று மரக்கால் அரிசியும் தந்தால் தான் பூசை வைக்க முடியும் என்று சொல்ல..

இருந்தால் செய்து விடுவார் இல்லாமை இயலாமை கோபம் தலைக்கேறி இப்படிதான் செய்ய வேண்டும் என்றால் இந்த கருப்பு வேட்டியே தேவையில்லை என்று போய்விட்டார்.

இது பக்தியா.. வியாபாரமா...

AIRTEL SERVICE MESSAGE (543212)

MOOLU MOOLUNU MODELS! VERUM Ru.5KKU! MISS PANNATHINGA!

12.12.08 அன்று 5.53pm வந்த எஸ்.எம்.எஸ் செய்தி .

வளர்ந்தநிறுவனத்தின் வியாபார கண்ணியம் இதுதான்.

ஆமாம் இது வியாபார கண்ணியமா?

நடுநிலைமையா ..அய்யோ வேண்டாம்

டேய் நீ சொல்லுடா..

எந்த பக்கம் நீ இப்பவே சொல்லு..

நான் நா வந்து….

என்ன அந்த பக்கமா

சீக்ரம் சொல்லுடா நாயே

இல்ல நா ..எந்.. பக்க இல்லே..

அந்த பக்கம் போமாட்டில்ல.. போன அப்புறதான் இருக்கு..

நீ வாடா ஆளு நாங் பாத்துக்குறோம்

அவங்க என்ன செய்றாங்க பாப்போம்

இல்ல நா வல்ல..

பயப்படாதேடா நாங் சொல்றோம்ல

நீ வல்லேல்ல.. வாங்கடா வெலாட போவோம்.

ஏக்கம் நிறைந்த மனதுடன் விளையாட முடியாமல்நடுநிலைமை பரிதாபமாய் நின்றது.

Friday, December 12, 2008

பெரிய இடம் பெரிய சம்மந்தம்

பெரிய இடம் பெரிய சம்மந்தம் திருமணம் மண்டபம் களை கட்டியது.

பன்னீர் தெளிக்க ஆள் வெற்றிலை சீவல் சந்தனம் கொடுக்க தனி தனியாக ஆள் பந்தலில் நின்று சிரித்தப்படி வரவேற்று கொண்டிருந்தார்கள்.

காசுக்காய் செய்பவர்கள் செய்துதானே ஆகவேண்டும்.

இருகைகூப்பி முகம்மலர்ந்து வரவேற்று கொண்டிருந்தார்கள் திருமண வீட்டார். அவர்களின் வரவேற்பு திருமணத்திற்கு வந்தவர்களின் பதவி அணிதிருந்த ஆடை அவர்கள் வந்திறங்கிய வாகனம் அணிதிருந்த நகை களே நிர்மாணம் செய்தது.

பெண்வீட்டாருக்கு சொந்தம் போலும் மிக எளிமையாக இருந்தார். வறுமையாக அல்ல ஆனால் ஏழையாக இருந்தார் பெண்வீட்டாரின் பார்வைக்கு போலும் திருமண வரவேற்பு வரவேற்பாகவே இருந்தது.

அந்த மனிதரின் முகபாவமே அவரின் மனநிலையை காட்டியது. ஆனாலும் என்ன செய்வது , ஓரமாய் உட்கார்ந்திருந்தார். ஒருவருடைய வெற்றிக்கும் தோல்விக்கு ஒரு காரணம் இருக்கும் இவருடைய இந்நிலைமைக்கு என்ன காரணமோ தெரியவில்லை.

பணமிருந்தா எதிரியும் பங்காளி, பணமில்லேன்னா பங்காளியும் எதிரி.

Thursday, December 11, 2008

காசு இருந்தா வருங்க..!

ரெண்டாயிரம் போதுங்க..

அதுகிட்ட சொல்லாதீங்க..

ஆமா அவர் தான் கடைசியா சீட்ட எடுத்துகிட்டு வருவாரு

ஆங்..இப்ப முடியாது

சாவி போட்டாச்சுல..

எப்படிதான் எடுக்குதுன்னு தெரியலிங்க.. எடுத்துபுடுதுங்க..

விறவு வாங்கிட்டு போவுனுங்க

போயிட்டு..அரிசி வாங்க வரனுங்க..

எத்தனநட நடக்குறதுங்க.

பசங்கள நமக்கு வராதுங்க.. அதுங்கெல்லாம் காசு இருந்தா நம்மகிட்ட வருங்க

தன்னுடைய நகையை ஈடாக வைத்து பணம் கடனாக பெற்றுச்செல்லும் ஒரு வயதான அம்மாவின் புலம்பல்கள்.

Wednesday, December 10, 2008

வலிமை


இயற்கை சூழல்
உயிர்ப்பின் உயிர்வாழ்
தகுதி வலிமை.

Tuesday, December 09, 2008

புகழ்

குறிப்பிட்ட காலம்
வெல்லமுடியா முடிவுகளால்
கிடைப்பது புகழ்.

Monday, December 08, 2008

பகலும் இரவும் வரும் போகும்

கேள்வி குறியாய்
எல்லைகளின் பாதுகாவல்
பிய்ந்து போன
வேலிகள்

உடைந்து நிற்கும்
முன்சுவர்
மேற்கூரை இல்லா
தனித்து நிற்கும்
கல்தூண்கள்

சுண்ணம் பெயர்ந்துபோன
சுவர்கள்
புது ஓவியமாய்
மழை துளிகளின் கோடுகள்
உட்புற சுவர்

உட்கார ஆட்கள் இல்லா
சாய்வு நாற்காலிகள்

மௌனம் கலைக்கும்
சிட்டு குருவிகள்
சத்தம்

சுருங்கிய தோலாய்
நடமாடும் உயிர்கள்

பகலும் இரவும்
வரும் போகும்.

மாட்டு தீவனமா... மதுவா...

விவசாயி அவர் தினமும் வயலுக்கு போய் வேலை செய்து வீடு திரும்பியவுடன் மாட்டிற்கு தேவையான தீவனம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைத்தெரு வருவது வழக்கம்.

வயலில் கடுமையாக வேலைப்பார்த்து வரும் நாளில் உடல் வலி போக்குவதற்காக கொண்டு வரும் பணத்தில் கொஞ்சமாய் மது அருந்துவது வழக்கம்.

மது அருந்தும் நாள்நண்பர் யாருடனாவது கூட்டுச்சேர்ந்து மது அருந்துவார்.

அன்றைய தினம் அவரிடம் இருந்த பணம் மாட்டிற்கு தேவையான தீவனம் வாங்கலாம். தீவனம் வாங்க கடைத்தெரு வரும்பொழுது அவர் நண்பர் மது அருந்த அழைத்தார்.

குழம்பினார் மாட்டு தீவனமா... அல்லது மதுவா...

மனித மனம் தானே மாட்டின் நலன் பின்னுக்குபோய் மது என்று மனது முடிவெடுக்க

தன்னுடைய பங்களிப்பாக தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து விட்டு

தன்மனதில் “ வழக்கமாய்பொருட்கள் வாங்கும் கடையில் கடனாக வாங்கிவிடலாம்” என்று நினைக்க..

மதுவும் உள்ளே சென்று தன்பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்தது. அன்று கடையில் கூட்டம் அதிகம்.
இவர் மனதில் கூட்டம் குறையட்டும் கடன் கேட்கலாம் என்று நினைத்தப்படி நின்று கொண்டே இருந்தார்.

காசு இருந்தால் வாங்கலாம் . கடன்அனுமதி பெற்றுதானே ஆகவேண்டும் கடை முதலாளியின் முகத்தைப்பார்த்தவாறு இவர் .

Sunday, December 07, 2008

புதுசா போட்ட ஜீன்ஸ்

அவனுடைய 20 வயதில் ஆசைப்பட்டது. மற்றபையன்கள் போடுவது மாதிரி நாமும் ஒரு ஜீன்ஸ் போட வேண்டும். தன் குடும்பம் இருந்த சூழலில் ஜீன்ஸ் பேண்ட் கனவு அவனுக்கு கனவாகவே இருந்தது.

அவன் குடும்பத்தில் அவனை ச்சோ்த்து ஒன்பது போ். குடும்ப நிர்வாகம் புள்ளைகளின் தேவைகள் படுகஷ்டம்.
ஏதோ மானம் காக்க துணி உயிர் வாழ உணவு கிடைத்ததே பெரும்பாக்கியமாய் இருந்தது.

ஊதியம் சிறுதொகையாக கிடைக்கப்பெறும் வேலை அமையப்பெற்றான். ஊதியம் வீட்டுக்கும் அவனுடைய சிறுதேவைகளுக்கும் சரியாக இருந்தது. சில மாதங்களில் போதுமானதாக அமையவில்லை.

ஆசைப்பட்ட மனது நினைவுப்படுத்த தவறவில்லை.
ஏக்கமும் இயல்பாய் இருந்தது.

தன் கனவு பொருளான ஜீன்ஸ் பேண்ட் க்காக சேமிப்பான்.
அந்த தொகையும் திடீரென ஏற்படும் செலவினங்களுக்கு கொடுத்து விடுவான்.

ஒவ்வொரு வருடமும்தீபாவளிக்காக அவனுடைய நண்பர்களில்
ஒருவர் சட்டையோ, பேண்டோ எடுத்து கொடுப்பார். எடுத்து கொடுப்பதை வாங்கிகொள்வான்.

அவனுடைய ஆசை யும் கனவாகவே இருந்தது.

இந்த வருடம் தீபாவளி வந்தது. அவன் சற்றும் எதிர்பாராது அவனுடைய நண்பர் ஜீன்ஸ் பேண்ட் எடுத்துக்கொடுத்தார்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான், ஜீன்ஸ் அணிந்த அன்று அவன் மனதில் சந்தோஷ உணர்வுகள் பூத்துகொண்டே இருந்தது.

ஆனாலும் தான் சம்பாதித்து வாங்க முடியவில்லையே என்று தன்மனதில் வேதனை அடைந்தான்.

Friday, December 05, 2008

தற்கொலையில் தோற்றவன்

நண்பர் ஒருவர் வேலையை மாற்றி கொண்டே இருப்பார். சில மாதங்கள், சில நாட்கள் வேலை மாறி கொண்டே இருக்கும்.

நிரந்தர வருமானம் எதுவும் கிடையா சூழல்.
எப்படிடா புள்ளக்கு புத்தி வரவக்கறது யோசிச்சு ..குடும்ப சகிதமா பொண் பாத்தாங்க காண்ணாலம் பண்ண நம்மாளுக்கு..

அதுலயும் நம்மாளு ..பாத்தீங்கண்ணா நிச்சயம் வர போயி பொண்ணு வேண்டான்னு சொல்லிருவாரு

மாட்னது யாருனு பாத்தீங்கனா மாப்பிள்ள புள்ளய ரெக்மண்ட் செஞ்சவங்க, மாப்பிள்ள பெத்தவங்களுதான்.

எப்பா உன்னோட விசயத்துல தலையிட மாட்டோம் சொல்லிட்டு சொந்த பந்தமும் வந்தவங்க போனவங்க கழட்டிகிட்டாங்க இது ஏன்டா வம்புன்னுட்டு ..

நம்மாளு ரொம்ப கவலையாயி..

கடைக்கு ரெண்டு மாத்தர மேனி அஞ்சு ஆறு கடைங்க..

மாத்தரல்லாம் நம்மாளு வயித்துல..

ப்ரெண்டுகிட்ட சொல்லிருக்கார் நாளக்கு காத்தால பாடை கட்டிடுங்கன்னுட்டு..

நம்மாள நோன்டி சேதி என்னன்னு கேட்டா துாக்க மாத்தர முழுங்கி்ட்டேன்னு..

அப்புறம் ஆஸ்பத்திரி தான். நம்மாளு தற்கொலையில தோத்து போயிட்டாங்க.

Thursday, December 04, 2008

சண்டை எதுவா இருந்தா என்ன? சங்கதிதாங்க முக்கியம்.

ஒரு புருசன் பொஞ்சாதிங்க

புருசன் வேல முடிஞ்சு ரா வுடு திரும்புனாங்க..
பொஞ்சாதி ரொம்ப யோசனையா உட்காந்திருந்தா..

புருசன் கேட்டான் என்னடி யோசன..
அங்க கட்டிகிட்டு இருக்காங்கல அந்த வீட்ட கட்ட எவ்வலவு ஆவுங்க.

ஏன்டி கேக்குற..

சும்மா சொல்லுங்க…

திரும்பவும் ஏன்டின்னா, புருசன்

அவங்கபாட்டுக்கும் ரொம்ப ஆயிடுச்சிகிறாங்க…
என்னங்க அவ்வலவ ஆயிறுக்கும்..

ஏன்டீ அறிவுருக்கா உனக்கு. ஒன்னோடு வீட்டு சேதியே தீக்கமுடியாம கிடக்கு இந்த சேதி ரொம்ப அவசியமாடீ.. போடி போன்னா , புருசன்

என்னது அறிவுரு்க்காவ..பொஞ்சாதி

அப்புறம் என்ன சண்டைதாங்க.

Wednesday, December 03, 2008

அன்புள்ள காதலா அன்புடன் .... 2

எட்டி நிற்கும்
வாலிப கூட்டத்தில்
உன்னை தேடும்
எனது கண்கள்

ஆசைகள் ஆயிரம்
வெளியிடாத
எனது இதயம்

தொடக்கம்
உன்னிடம் இல்லா
எனது காதல்

ஓர் பிறவிகுருடனின்
சித்திர கனவுகளாய்
உன்நினைவுகளோடு



பொதுநலம்

தகுதியுடன் கூடிய தன்நலம்
பிறர்நலம் பேணுதல்
பொதுநலம்.

Tuesday, December 02, 2008

சுயநலம்

சூழல் பற்றிய ஆர்வமின்மை
தன்நலம் பேணல்
சுயநலம்.

Monday, December 01, 2008

விலை ஏறிய மயிலை மீன்

30.11.2008 வீட்டில் மீன் கேட்டார்கள். மீன் மார்க்கெட் சென்றேன். முதல் நான்கு நாட்கள் பெய்த மழையினால் உயிர் கெண்டை மீன்கள் எதுவும் வரவில்லை.

சாதாரண நாட்களில் விலைப்போகாத வழு வழுப்பான உடலமைப்பு கொண்ட மயிலை மீன்கள் இருந்தது. சாதாரண நாட்களில் ஒரு கிலோ ரூ50 வாங்க ஆட்கள் இருக்காது. அன்று அதனுடைய விலை ரூ70 என்றார்கள்.

நான் வாங்கினேன் எனக்கு பிறகு இன்னொருவர் மூன்றாமவர் வந்து விசாரித்தவுடனேயே கிலோ 80 என்றார்கள்.

துாக்கி வாரி போட்டது எனக்கு ..

நல்ல வியாபாரமா இது அல்லது வியாபார தந்திரமா தெரியவில்லை .

நல்ல வேலை அவர் வாங்க வில்லை. அப்புறம் மீன் விலை என்னவென்று தெரியாது.

கல்வி பயிற்சி நிறுவனத்தின் பிரச்சுரம் ஒன்று பார்த்தேன்.
அதில் “முடங்கினால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும், எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்”

என்ற தன்னம்பிக்கை வாசகத்தை உங்களின் சிந்தனைக்காக…

LinkWithin

Related Posts with Thumbnails