Thursday, January 08, 2009

பெரிய படிப்பும் பலகார கடையும்.

பெரிய படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவிகள். தன்னுடன் ஒன்றாக படிக்கும் மாணவியின் வீட்டிற்க்கு வருகை தருகிறார்கள்.

வருகை தருகிறவர்கள் வெறுங்கையுடன் வந்தால் நன்றாக இருக்காது என்ற விருதோம்பல் விதிக்கு ஏற்ப இனிப்பு வாங்க பலகார கடையை நோக்கி செல்கிறார்கள்.

அந்த சமயம் வேலைக்கார பையன் கடையை கவனித்து கொண்டிருந்தான். அவனுக்கு கிலோ கணக்கு தெரியும் கேஜ் கணக்கு தெரியாது.

மாணவிகள் குழு அங்கு சென்று சாங்கிரியை காட்டி ஒன் கேஜ் எவ்வளவு? என்று கேட்க

என்னதுங்க…

ஒன் கேஜ் ஸ்வீட் எவ்வளவு?

வேலைக்கார பையன் ஓரளவு அனுமானித்து நாம தமிழ்யே சொல்வோம் என்று நினைத்து

ஒரு கிலோ எழுவது ரூபா என்றான்.

ஆப் கேஜ் கொடுங்க என்று இனிப்பை வாங்கி சென்றார்கள்.

ஏண்ண இங்கலீஸ் பேசி கிட்டே இருங்காங்க..அப்பதான் அவங்க படிக்கிறாங்கனுட்டு நமக்கு தெரியுமா என்று கேட்டான்.

அவங்க பேசிட்டு போவட்டும் ஆனா எங்கிட்ட வந்து தமிழ்ல கேக்காலமுல்ல என்றான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails