Saturday, February 07, 2009

திருடனுக்கு தெய்வமாவது பக்தியாவது

போக்குவரத்து நிறைந்த சாலை எப்பொழுதும் கார் வேன் லாரி இருசக்கர வாகனங்கள் வருவதும் போவதுமாக இருக்கும்.

சாலையின் நடுவில் அந்த மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார் விபத்து நடக்காமல் காப்பாற்றும் தெய்வமாய் முனீஸ்வரர் .

இந்த முனீஸ்வரர்க்கு சிலை கிடையாது. சூலம் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் திருநீறு குங்குமம் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு இவற்றை வைத்துதான் முனீஸ்வரரை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

சூலத்திற்கு நான்கு அடி முன்பாக வைக்கபட்டிருந்த உண்டியல் உண்டியலில் யாரும் நேரடியாக காணிக்கை செலுத்தமாட்டார்கள். பேருந்தில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் பேருந்தின் சன்னல் வழியாக கோவில் வந்தவுடன் கன்னத்தில் விரலால் அடித்து மாறி மாறி பிரார்தனை செய்து காசை தூக்கி எறிவார்கள்.

அங்கு சாமி கும்பிட வருபவர்கள் முனீஸ்வரருக்கு பயந்தே கரெக்டாக உண்டியலில் சேர்த்து விடுவார்கள்.

ஆனால் திருடனுக்கு தெய்வமாவது பக்தியாவது தேவை காசு
உண்டியலை கபளீகரம் செய்து விடுவார்கள். கோவிலை கூட்டி நிர்வாகம் செய்பவர் எத்தனையோ தடவை முயற்சி செய்தார் ஒரு தடவை உண்டியலை தரையில் புதைத்து இன்னொரு தடவை உண்டியலை வெளியில் வைத்து இரண்டு பூட்டுகள் கொண்டு பூட்டி ஊகும் எதற்கும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை திருடர்கள்.
நல்ல வசூலாகும் அந்த முனீஸ்வரர் எண்ணெய் வழிந்தப்படியே எப்பொழுதும் ஆனால் உண்டியல் மட்டும் புதுசாக மாறி கொண்டே இருந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails