Tuesday, February 24, 2009

விரல்களை எடுத்து காற்றை குடிப்பார்கள்.

தென்கிழக்காக வீசியது காற்று . காற்றின் போக்கில் பரவிய துர்நாற்றம் யாருடைய மனதிற்குள்ளும் எங்கிருந்து வீசுகிறது? என்ற வினாவினை எழுப்பாமல் இல்லை.

குளக்கரையின் ஓரத்தில் நின்றிருந்த அரச மரம் ஆழ மரத்தின் கிளைகளில் சின்னதும் பெரியதுமான பைகள் தொங்க விடப்பட்டிருந்தன.ஒரு பையிலிருந்து திரவம் வடிந்து கொண்டிருந்தது. மற்றொரு பை காய்ந்து சருகாய் போயிருந்தது.இது போன்று பல பைகள் கட்டப்பட்டிருந்தன.

மரம் உள்ள பகுதியினை கடக்கும் மனிதர்கள் தன்னுடைய விரல்களின் உதவியால்மூக்கை இழுத்துபிடித்தவாறு சுவாசிக்காது விரைந்து கடந்து விடுவார்கள்.

கடந்து போய் விரல்களை எடுத்து காற்றை குடிப்பார்கள்.
நிம்மதியாய் மூச்சை இழுத்து விடுவார்கள்.

அன்றைக்கு கட்டபட்ட பை புதிததாக இருக்கும் . திரவம் வெளியேறி கொண்டிருக்கும் பை நான்கைந்து நாட்கள் முன்பு கட்ட பட்டதாக இருக்கும். பத்து பதினைந்து நாட்கள் என்றால் திரவம் வெளிவந்து பை காய்ந்து போயிருக்கும் .

மரத்தின் அருகில் சென்று பைகளின் எண்ணிக்கையை அறிந்தால் அந்த ஊரில் குறிப்பாக அந்த மரகளுக்கு மிக அருகில் தெருவில் எத்தனை பசு மாடு கன்று ஈன்று உள்ளது என்பதை அறியலாம்.

பசு மாடு கன்று ஈன்ற பிறகு போடும் கருப்பையில் திரவம் தொப்புள் கொடி அடங்கிய பை கள் . நாய்களுக்கு பயந்து அதை கொண்டு வந்து மர கிளைகளில் கட்டுவார்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails