Thursday, March 05, 2009

தற்கொலை செய்தால் ரூபாய் 2 லட்சம்.


உலக வர்த்தக மயம் வறட்சி கடன் தொல்லை ஆகிய காரணங்களால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராமகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து விவசாயக் கடன்களைதள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

பஞ்சாப் அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. பஞ்சாப் விவசாயிகளின் நிலைமை கேள்விகுறியாக உள்ளது. பஞ்சாப் அரசும் மத்திய அரசு உதவித்தொகையை நிராகரித்துவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பஞசாப்பில் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

கடந்த திங்கள் கிழமை கூடிய பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டத்தில் “விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை அளிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் காக்கும் அரசின் அறிவிப்பைப் பார்த்தீர்களா..

2 comments:

நாமக்கல் சிபி said...

//“விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை அளிக்கப்படும்//

:))

சாஃப்ட்வேர் எஞ்சினியர்னா இன்னும் அதிகமா கிடைக்கும்னு நினைக்கிறேன்!

நாமக்கல் சிபி said...

இந்த வோர்ட் வெரிஃபிகேஷன் அவசியமா?

கட்டாயமா வேணுமின்னா அதைத் தமிழ் எழுத்துக்களிலாவது மாத்துங்க!

மாத்தி மாத்தி டைப் பண்ண சிரமமா இருக்குமில்லே!

LinkWithin

Related Posts with Thumbnails