Friday, March 13, 2009

பனங்கள்ளு


இழுத்து மடித்து கோவணமாய் கட்டபட்ட கைலி மேலே பனியன் இடுப்பில் கைலியின் முடிச்சு நழுவாதவாறு பெல்ட் திடகாத்திரமான அந்த மனிதர் பனை மரம் ஏறுவதற்காக தன்னுடைய கருவிகளான பனை நுங்கு சீவும் அரிவாள்ஒரு பிளாஸ்டிக் குடம் இணைக்கப்பட்ட பனை நாரினால் கயிற்றை இறுக கட்டி கொண்டு மரம் ஏற ஆரம்பித்தார்.

இரண்டு மூன்று பானைகள் கட்ட பட்ட மரத்தின் உச்சிக்கு ஏறி ஒரு பானை எடுத்து வடிதிருந்தகள்ளைதன்னுடைய இடுப்பிலிருந்த பிளாஸ்டிக் குடத்தில் கவிழ்த்து கொண்டார். பனை நுங்கு காய்க்கும் தண்டை திரும்பவும் சீவி பானையை தண்டில் மாட்டிவிட்டார். வடியும் கல்லை திரும்பவும் சேகரிக்க மாட்டி விட்டு அடுத்த பானைக்கு தாவினார்.

எல்லா பானைகளிலிருந்த கள்ளை சேகரித்து விட்டு பாதி மரம் இறங்கியிருப்பார் கீழிருந்த கூட்டம் பர பரக்க ஆரம்பித்தது.

டேய் ..போடா..போயி அஞ்சு சொம்பு வாங்குடா..

எண்ண எனக்கு ரெண்டு சொம்பு கொடுங்க...

இருங்க ..இருங்க இன்னும் பாக்கி மரம் ஏறனும் எல்லாருக்கும் தர்றேன் அவசர படுத்ததியோ என்றபடி தான் சேகரித்த கள்ளை குடிசைக்குள் கொண்டு சென்றார்.

எண்ண காசு வேணாலும் கூட வாங்கி நல்ல கள்ளா கொடுண்ண..

எல்லா நல்ல கள்ளுதாங்க நான் என்னங்க செய்ய நானும் வார மாமூல் கட்டனுங்க இல்லாட்டின்னு டான்னு வந்துருவாங்க என்றபடி அடுத்த மரம் ஏற தயாரானார்.

1 comment:

"உழவன்" "Uzhavan" said...

//ஒரு பானை எடுத்து வடிதிருந்தகள்ளைதன்னுடைய இடுப்பிலிருந்த பிளாஸ்டிக் குடத்தில் கவிழ்த்து கொண்டார்//

பனை மரத்திலிருந்து நேரடியாகவா கள் கிடைக்கிறது? அது பதநீர் சுண்ணாம்பு சேர்த்திருந்தால். இல்லையெனில் அதன்பெயர் தனிப்பதனீர். இதனை ஒருசில நாட்கள் ஊறவைத்தால்தான் அது கள்ளாக மாறும். ஊறஊறதான் கள்ளின் போதை அதிகமாகும்.

ஆனால், இது தவறு என்பதையும், இதற்கு காவல்துறையினரே கையூட்டு வாங்கிக்கொண்டு இதனை அனுமதிக்கிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கும் கருத்து நன்று.

பதநீர் உடலுக்கு மிகவும் நல்ல பானம் என்பது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts with Thumbnails