Monday, April 13, 2009

அந்த சிலை வெய்யிலில் காய்ந்தது மழையில் நனைந்தது.


அந்த சிலை வெய்யிலில் காய்ந்தது மழையில் நனைந்தது. ஓடும் நாய் முகர்ந்து பார்த்து சிறுநீர் கழித்தது. அதற்கு தெரியுமா அது எட்டி பார்க்க முடியாத இடத்தில் அது இருந்தது என்று. வணங்கிய தலைகள் கும்பிட்ட கைகள் பார்த்த கண்கள் வேண்டுதல் செய்த வாய் கண்டு காணாமல் போனது.

இருபைதைந்து முப்பது வருடங்களாக கருவறையில் தீப ஓளி மலர் மாலைகள் முதல் மரியாதை இடையே வாழ்ந்தது அந்த சிலை. அதற்குரிய அய்யர் மட்டுமே தொடலாம் குளிப்பாட்டலாம் ஆடை அணிவிக்கலாம் அலங்காரம் செய்யலாம். யாரும் பார்க்க அனுமதி இல்லை.

காலப்போக்கில் அபிஷேகம் தண்ணீர் ஊற்ற மூக்கின் நுனியில்சிறுசில் பெயர்ந்து போனது சிலை மூளியானது.
அய்யர் வேண்டுதல் விடுத்தார் ஊர் பெரியதலைகளிடம் சிலை மாற்ற வேண்டும் என்று கோரினார்.

புதிய சிலை மாற்றப்பட்டது.பழைய சிலை வெய்யிலில் காய்ந்தது மழையில் நனைந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails