Friday, May 01, 2009

அமாவாசையில் நல்ல பாம்புகளை தேடியவன்.

மற்ற பையன்கள் மாதிரி அவன் அணிவதற்கு துணிகள் கிடையாது. பள்ளிகூடம் என்றால் ஒரு சீருடை தான் பள்ளிவிட்டு வந்தவுடன் துவைத்து போட்டு விட வேண்டும் இல்லையென்றால் மறுநாள் பள்ளி விடுமுறை அவனுக்கு மட்டும்தான்.

குடும்ப தலைவரின் உழைப்பு இருந்தும் வறுமையில் வாடும் குடும்பம் அது. இவன் மற்றவர்களை பார்ப்பான் ஏங்குவான். ஏக்கங்கள் அனைத்துமே கனவுகளாக கற்பனைகளாக வலம் வந்தன இவன் மனதில் காசு இருந்தால் கனவுகள் உண்மையாகும்.ஆனால் உண்மை நிலைமை வறுமை.

இவன் கதை கேட்டான் முதிர்ந்த நல்லபாம்பின் தொண்டையில் ரத்தினம் இருக்கும் அமவாசையில் தன் தொண்டையில் உள்ள ரத்தினத்தை கக்கிவிட்டு இரை தேடுமாம். அந்த ரத்தினம் பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்குமாம் என்று தன் மனதில் படிய வைத்தான்.

உண்மையில் அமாவாசையில் இவனுக்குரிய எல்லைகளில் முதிர்ந்த பாம்பை தேடுவான் ரத்தினத்தை எடுத்து தன்னுடைய வறுமையை போக்க ஆனால் பாம்பு கேட்ட கதையில் வந்தது நேரில் வரவில்லை.
சொன்னவர்கள் அவனுக்கு சொல்லவில்லை உழைப்புதான் ரத்தினம் என்று எதார்த்த வாழ்க்கையில் வாழ்க்கையோட சிரமங்கள் கற்று கொடுத்தன உழைப்புதான் வாழ்வு என்று அவன் அறிந்து கொள்ளும் வரையில் அமாவாசையில் நல்ல பாம்புகளை தேடுவான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails