Friday, May 15, 2009

நல்ல பைல் யாரிடம் இருக்கும்?

பள்ளிசான்றிதழ்களை வைக்க நல்ல பைல் வாங்க வேண்டும் நினைத்தான் அதற்காக தான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஐந்தும் பத்துமாய் சேர்த்து ஒர் நூற்று இருபது பெட்டி பைல் ஒன்று வாங்கினான்.

நீண்டகாலம் பயன்பாட்டில் இருக்கவேண்டிய ஒன்று என்னு நினைத்து வாங்கியது. இவனுடைய தெரு பையன் ஒருவன் நேர்முகத்தேர்வு செல்வதற்காக நல்ல பைல் யாரிடம் இருக்கும் என்று விசாரித்து இவனிடம் வந்து சேர்ந்தான்.

புது பைல் அது. ஏதும் ஆகிவிட்டால் இவனது சூழலில் வாங்குவது கடினம் அடுத்த பயன் பாட்டிற்கு நேரடியாக இவனிடம் வந்து நின்றுவிடுவார்கள் என்ற நினைப்பில் தர முடியாது என்பதை நயமாக கூறிவிட்டான்.

காலம் சுழல இவன் படிப்பு பாதியிலே குடும்ப சூழல் காரணமாக நின்றுவிட அவன் டெக்னிக்கல் கோர்ஸ் முடித்து வெளிநாடு சென்றான்.
இன்றைய நிலைமை இன்னமும் பெட்டி பைல் இவனுடைய சான்றிதழ்களை பாதுகாத்தபடி இருக்க இவனும் அப்படியே இருக்க அவனால் பத்து பைல் கடை வைக்கும் பொருள் ஆதாரத்துடன் வாழ்க்கையில் நிமிர்ந்து நின்றான்.

1 comment:

தங்க முகுந்தன் said...

அருமை!
காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே! பட்டினத்தார் எமக்காகச் சொன்னது!
புரிந்தால் சரி!
உங்களுக்குச் சொல்லவில்லை - தேவையேற்படும் போது இருந்தும் உதவாதவர்களுக்கு!

LinkWithin

Related Posts with Thumbnails