Sunday, May 24, 2009

பார்த்த பைத்தியங்கள்.

தலைமுடி அழுக்கடைந்து தொங்கியது பேண்டின் கொக்கிகளை போடாமல் வேட்டி மாதிரி எடுத்து சொருகியிருக்க கடை வாயில் எச்சில் ஒழுகியப்படியே இருக்கும். பேச்சு இல்லை மிக மெதுவான நடை எல்லாபக்கங்களிலும் கண்கள் சுழன்றபடி கையில் எப்பொழுதும் ஓர் பிளாஸ்டிக் கப். நடக்கும் நடந்தப்படியே இருக்கும். டீக்கடை அருகே செல்லும் டீ அருந்தபவர்களிடம் சென்று கப்பை நீட்டியப்படி நிற்கும் சில பேர் கண்டுகாணாமல் டீ குடிப்பார்கள். சில பேர் ஊற்றுவார்கள் டீயை வாங்கி கொண்டு அப்பால் செல்லும். திரும்பவும் ஊர் சுற்றும் இலக்குகள் இருப்பதாக என் பகுத்தறிவுக்கு எட்டவில்லை.

சட்டைமேல் சட்டை என நான்கைந்து சட்டைகள் அழுக்கடைந்தவை. அழுக்கேறி நிறம் மாறியிருந்த பேண்ட் நான்கைந்து சாக்கு நிறைய காகிதங்கள் பழைய துணிகள் காலி தண்ணீர் பாட்டில்கள் எங்கெல்லாம் குப்பைகள் நிறைய கிடக்கின்றதோ அங்கு நின்று தான் கொண்டு வந்த சாக்கில் திணிக்கும் சாக்கு மூட்டைகளுடன் பயணம் தொடரும் நீண்ட மௌனம் நடந்து கொண்டே இருக்கும்.

ஒரு பை மட்டும் கையிலிருக்கும் மிகவும் சுத்தமாக அலங்காரம் செய்யும் எல்லா பெண்களையும் போலவே இருபது அடி நடக்கும் நிற்கும் எதிராளி இல்லாமல் ஆண் இனத்தை திட்டும் “என்னடா அப்படி பாக்குற..என்று ஆரம்பித்து பு...வில்முடியும்” திரும்பவும் நடக்கும் திட்டும் பயணம் தொடரும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails