Friday, June 05, 2009

ஆசை வந்தது போலவே ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும்சிறுகதை போட்டிக்காக)

எல்லோரும் இருப்பது மாதிரியே அவனும் ஒரு குடும்பமாக அல்லது தன் துணையுடன் இணைந்து அவனுடைய பதிவை இந்த அருமையான உலகில்விட்டுச் செல்ல அவனுக்கு ஆசை வந்தது.

ஆசை வந்தது போலவே கூடவே ஒரு தயக்கம் அவனுக்கு,யாரிடம் இவனுக்கு துணை தேட சொல்வது.

தன்னுடைய சிறுவயதுகளில் யாரோ ஒரு ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் தன் வயதுகளையொத்த சிறுவரோ , சிறுமியோ விளையாடி சென்றதை பார்த்திருப்பான் ஆனால் அவனுக்கு தெரியாது அந்த பிள்ளைகளையுடைய பொற்றோர் தான் அவர்கள் என்று , இவனும் எதிர்பார்ந்திருந்தான் அவனை பாதுகாப்புடன் அழைத்துச்செல்ல , அவர்களோடு இவன் விளையாடி செல்ல விபரம் தெரிந்த நாளாய் தனியாகதான் நின்றிருந்தான்.

எப்பொழுதெல்லாம் பெற்றோருடன் செல்லும் சிறுவர் சிறுமிகளை பார்க்கிறானோ அப்பொழுதெல்லாம் தனிமை உணர்ச்சி தன் மனதின் ஓரத்தில் துளிர்விடும்பார்த்தப்படியே நிற்பான் நிறைய எண்ணுவான் குழம்பியவாறு வேறு இடம் செல்வான்.

வயிறு பசிக்கும் உணவு தேடல் தொடங்கும் அதனால் இவனுடைய தனிமை உணர்வுகள் அடிக்கடி பின்னுக்கு போய்விடும்.

இப்படியாக வளர்ந்தவன் அவன்.

ஆண்டுகள் ஓட வளர்ந்த மனிதனாய் அவன். உணவு தேவை உழைப்பினால் நிறைவேற தனிமை உணர்ச்சிகளின் உந்துதலினால் அதிகம் பாதிக்கப்படுவான் .

ஏன் ? என்ற குழப்பம் தன்னுடைய மனதில் தோன்றியப்படி இருக்கும் விடைகள் கிடைக்காது.

வளர்ந்த உடல் தன்னுடைய செயல்களை பருவத்திற்கேற்றவாறு தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் உணர்வுகளின் வாயிலாக , அவனது அடுத்த தேவை உணவாக மட்டுமே இருந்தால் உணர்வுகளுக்கு தானாய் பூட்டு விழுந்து விடும் .

அவ்வாறு இல்லையென்றால் அவனுடைய செய்கைகளில் மூர்க்கம் கூடி விடும் களைப்பினால் சோர்ந்து போய் உட்காரும் வரையில் அவன் செயல்களில் மூர்க்கம் தொடர்ந்தப்படியே இருக்கும்.

இவனுக்கான தேவையை தானாய் பெறவும் வழி தெரியவில்லை இவனுக்கு , அவ்வாறு பிடித்து அணுகிய எதிர்பாலினத்தையும் அரவணைக்க தெரியாது குழப்பமாய் இடம் பெயர்வான் ஏனென்றால் காடுகளில் வாழவில்லை நகரங்களில் வாழ்ந்திருந்தான் .

உணவுக்கான தேடுதலில் அப்படி இப்படி அனுபவம் பெற்றிருந்தான்.

இன்றைய நாட்களிலும் அவனுக்கு தயக்கம் வரும் யாரிடம் இவனுக்கு துணை தேட சொல்வது என்று ஏனென்றால் அவன்….

1 comment:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிந்தனையின் ஓட்டம்..,

வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails