Monday, June 15, 2009

துணைமுதல்வர் வருகை

காலை ஏழு மணிக்கு பேருந்து நிலையத்தில் டிராபிக் போலீசார் பதினைந்து பேர் வேனில் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அடுத்த அரைமணி நேரத்தில் இன்னொரு வேன் நிறைய போலீசார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.

இரு அணியினரும் பதினைந்து அடிக்கு ஒரு ஆளாக நின்று கொண்டிருந்தனர். பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கூட்டம் வேலைக்கு செல்வோர் கல்லூரிக்கு செல்வோர் என அந்த பேருந்து நிலையம் களை கட்டியிருந்தது. ஒரு பக்கம் கட்சியினர் ஒன்று சேர ஆரம்பித்தார்கள்.

போலீசார் விரைந்து போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்கள்.

எட்டு மணியை நெருங்கியது பேண்டு வாத்திய குழுவினர் வரவேற்பிற்கான இசையை அடித்து நொறுக்கி கொண்டிருந்தனர். வெள்ளை சட்டை வெள்ளை வேட்டிகள் ஒரு இடத்தில் குமிழ காலை வெயில்பட்டு பளீரென்று எதிரொலித்தது.

அந்த எல்லைக்கு உட்பட்ட ஹைவே போலீசார் தனக்கான வாகனத்தில் வந்து போக்குவரத்தை சரிப்பார்ந்தனர்.
அங்கிருந்த போலீசார் பொதுமக்கள் பரபரப்பாயினர்.
போக்குவரத்து மேலும் சீர்மை செய்யப் பட்டது.

அடுத்த பகுதியில் கட்சி பிரமுகரின் வாகனம் மிகவும் விரைந்து சென்றது. உச்ச கட்டத்தை நெருங்கியது அங்கிருத்தவர்களின் எதிர்பார்ப்பு வரும் வழியை எல்லோர் கண்களும் உற்றுநோக்கியபடி இருந்தது.

இடையே பல்வேறு விதமான கருத்துகள் அனுமானங்கள் விவாதிக்கப்பட்டன. இங்கு நிற்கமாட்டார் நிற்பார்
என பலவிதமான அனுமானங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்பு இடையே நிகழ்ந்தது.

அட்வான்ஸ் பைலட் என்ற வாசகம் குறிப்பிட்ட வாகனம் விரைந்து வந்தது.

மிகுந்த பரபரப்பு

அடுத்து பைலட் என்ற வாசகம் குறிப்பிட்ட வாகனம் விரைந்து வர அதன் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு காவல் வாகனம் விரைந்து வர மிக வேகமாய் ஒலித்தது வரவேற்பு இசை.

துணை முதல்வர் அமர்திருந்த வாகனம் விரைந்து வந்தது
கட்சி பிரமுகர்கள் கூட்டமாய்நின்ற இடத்தில் வாகனம் நின்றது சால்வை மரியாதை வாங்கி கொண்டு புறப்பட்டது.
சென்றவுடன் போக வேண்டியவர்கள் கலைந்தார்கள் திரும்பவும் குழப்பம் ஏற்பட்டது. போலீசார் கடுப்படித்தார்கள் போக்குவரத்தை சரிசெய்தார்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails