Tuesday, June 16, 2009

அழுதப்படியே இருந்தான் அந்தபையன்.

மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பாக எல்லோரும் கூடியிருந்தார்கள். சில பேர் நோயுற்று சேர்க்கபட்ட தன்னுடைய உறவினர்களை பார்க்க பல பேர் இறந்துபோன தன்னுடைய சொந்த அல்லது உறவினர்களின் உடல்களை வாங்க வெளியில் காத்து கிடந்தார்கள்.

சத்தம் போட்டு விரைந்து வரும் ஆம்புலன்ஸ் வண்டியிலிருந்து முதலுதவி செய்யப்பட்ட மயங்கி நிலையில் இருந்த அந்த நடுவயதுகாரர் தள்ளுவண்டியில் படுக்க வைத்து மருத்துவமனையின் உட்புறம்
கொண்டு செல்லப்பட்டார்.

வருபவர்கள் உட்கார நீண்ட செட் போடப்பட்டிருந்தது. அதில் ஆண்களும் பெண்களுமாக நிறைந்திருந்தார்கள்.

அவர்களுக்கு நடுவில் இருபது வயது மதிக்கதக்க பையன்
அழுதபடியே இருந்தான்.

எலா..அழுவதடா கண்ணு…..

எதிரில் அமர்ந்திருந்த முதியவர் அவர் ஊனம் நடக்க குச்சி வைந்திருந்தார் அந்த குச்சியை காட்டி டேய்…பேசமா இருக்கனும் இல்ல உதச்சு புடுவேன் என்று அந்த பையனை மிரட்டினார்.

அவன் பார்த்தான் வெறுமன பார்த்தான் அவனுடைய பார்வைக்கு எந்த அர்த்தமும் இல்லை. கண்களில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

ஐந்து நிமிடம் கழிந்தது திரும்பவும் எழுந்து நின்று அழ ஆரம்பித்தான் பையன்.

உட்காருப்பா என்று கையை இழுத்து உட்கார வைத்தார்கள்அவன் பக்கதிலிருந்த பெண்மணி இந்தாப்பா துடைச்சுக்க என்று துண்டு கொடுத்தாள்.

துண்டை வாங்கி அப்படியே வைத்தான். கண்களில் கண்ணீர் வழிந்த படியே இருந்தது.

திரும்பவும் மிரட்டினார் பெரியவர்.

இந்நிகழ்வு தொடர்ந்த படியே இருக்க எல்லோரும் ஏன்? வினாவுடன் அந்த பையனை பார்த்தப்படியே இருந்தார்கள்.

அழுதப்படியே இருந்தான் அந்தபையன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails