Wednesday, June 17, 2009

பேசி கொண்டே இருப்பாள் அந்த பெண்

பேசி கொண்டே இருப்பாள் அந்த பெண். தான் எதற்காக பேசுகிறோம் என்று மட்டும் தெரியாது. ஆனால் பேச வேண்டும். அப்பாவியாய் பேசுவாள் கோபபடுதல் கூட கோபமாய் தெரியாது வெகுளியாய் தெரியும்.

அந்த பெண் நான்கைந்து சகோதரர்களுடன் பிறந்தவள் தான்.
சொத்து பிரிக்கும் போது இவளை திருமணம் செய்து வைக்க ஆக வேண்டிய செலவுக்கு ஈடாக வீட்டு மணை எழுதி வைத்தார்கள்.

உடல் வளர்ச்சி உண்டு உள்ள வளர்ச்சி சமுதாய ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஓடும் அளவிற்கு வளர்ச்சி இல்லை. அதனாலயே யார் இந்த பெண்ணை வைத்து கொள்வது போட்டா போட்டியில் இந்த பெண் பந்தாடப்பட்டாள்.

அந்தந்த சகோதரர்களின் மனைவிகளிடம் பட்ட துன்பமும் கொஞ்சம் நஞ்சமல்ல . இவள் திருமண செலவுக்கென பங்கு இருந்ததால் மாப்பிள்ளை பார்த்தார்கள். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் போல மாப்பிள்ளை பார்த்து பவுன் போட்டு வண்டி வாங்கி கொடுத்து எல்லா சீர் செய்து கல்யாணம் முடித்தார்கள்.

புகுந்தகம் போயும் பெண் பேசி கொண்டே இருந்தாள் நல்லது கெட்டது தெரியவில்லை என்ன செய்ய முடியும் . மாப்பிள்ளை வீடடார் நல்லவர்கள் பெண் வீட்டாரிடம் உண்மை சொல்லி தான் வாங்கிய சீர் அனைத்தையும் திரும்ப கொடுத்து பெண்ணை வீட்டில் விட்டு சென்றார்கள்.

அதற்கு பிறகு இந்த பெண்ணுடைய வாழ்க்கை மிகவும் துன்பத்திற்குள்ளானது.

ஒரு சகோதரர் மட்டும் சகோதரியை பாதுகாத்தார் ஆனால் பொண்டாட்டிக்கு கட்டுபட்டவர். அவர் பொண்டாட்டி வாயிலாக அது துன்ப படுகிறது இவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அந்த பெண்ணுடைய நிலைமை வீட்டிற்கு பின்புறம் ஒரு சிறு இடம் ஒதுக்கி அங்கு வைத்துள்ளார்கள். அவர்கள் வீட்டு நாய் வீட்டு திண்ணையில் ஓய்யாரமாய் படுத்து தூங்கும்.

யாரை குற்றம் சொல்வது இந்த பெண்ணை பெற்றவர்கள் குற்றமா அல்லது இந்த பெண் மனவளர்ச்சி இல்லாமல் பிறந்தது குற்றமா .. எல்லோரும் வாழ்க்கை இருக்கதான் செய்தது இவர்களையும் சேர்த்து தான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails