Thursday, June 18, 2009

அதற்கு கூட மனது இல்லாத மனிதர்களிடம் பழகி என்ன பயன்?

அவர்கள் வீட்டுக்கு மின்சார விளக்கு எரியவில்லையென்றால் ஆட்கள் கூட்டி செல்வான். யாருக்கும் உடம்பு சரியில்லையென்றால் டாக்டரிடம் கூட்டி போவான். மீன் தேவையென்றால் வாங்கி வந்து தருவான். கிட்டதட்ட அவர்கள் வீட்டு ஆளாய் நின்றான்.

அவர்களும் வஞ்சகம் இல்லாமல் வேலை வாங்கி கொண்டார்கள். பழக்க வழக்கம் நன்றாகத்தான் சென்றது.

இவன் வீட்டில் தங்கைக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்தது.
அவர்களை விடவும் மிகவும் சுமரான குடும்பம் இவனுடையது. தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது சொல்லி கொண்டிருப்பான் .

எப்படி செய்யபோகிறீர்கள் ? என்றோ அவனுடைய நல்லது கெட்டது குறித்தோ வாய் திறந்து ஒரு வார்த்தை கேட்க மாட்டார்கள்.

இதையெல்லாம் தாண்டி அவனிடம் வேலை சொல்வதையே குறைத்து கொண்டார்கள். இவனுக்கு குழப்பம் ஏன் அழைக்கவேயில்லை . அவனும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

திருமணம் நல்லபடியாக முடிந்தது. கொஞ்ச நாட்களில் பழையப்படி வேலைகள் சொல்ல ஆரம்பித்தார்கள். இவனுக்கு புரிந்து போனது அவர்களுடைய மனது பற்றி இனியும் இந்த பழக்க வழக்கம் தேவையா என்று யோசித்தவாறு அந்த நட்பை உதறினான்.

மனிதன் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் பிராணி தான். யார் எதை செய்தாலும் நேரடியாக அல்லது மறைமுக எதிர்பார்ப்புகள் கட்டாயம் உண்டு. உதவி இல்லையென்றாலும் கூட ஆறுதல் வார்த்தைகள் தேவை.
அதற்கு கூட மனது இல்லாத மனிதர்களிடம் பழகி என்ன பயன்?

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails