Friday, July 10, 2009

பார்வை வெளிச்சம்


எவ்ஜென் பாவ்கர் (Evgen Bavcar ) பார்வையற்ற புகைப்படக் கலைஞர். வெனிஸ் அருகில் உள்ள ஸ்லோவெனிய நகரில் 1946-ல் பிறந்த இவர் 12 வயதில் ஒரு விபத்தில் கண் பார்வையை இழந்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு தான் விரும்பிய புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நண்பனின் உதவியால் அவளைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது தான் முதல் முயற்சி. அன்று துவங்கிய புகைப்படக் கலை மீதான ஆசை அவருக்குள்ளாகவே வளர்ந்து இன்று உலகம் அறிந்த புகைப்படக் கலைஞராக மாற்றியுள்ளது.

பாரீஸின் சார்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்த பாவ்கர் சிட்டி லைட்ஸ் என்ற பத்திரிகையின் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார். தனது கண்கள் மட்டுமே செயல் இழந்து போயிருக்கின்றன மனது ஆரோக்கியமாக மிகுந்த கற்பனை உணர்வுடன் இருக்கிறது. தனது புகைப்படங்கள் மனதின் வெளிப்பாடுகளே எனும் பாவ்கர் நண்பர்களின் உதவியோடு புகைப்படம் எடுத்து வருகிறார்.

கேமராவைத் தன் உதடு அளவிலான உயரத்தில் வைத்துக்கொள்வதாகவும் தனக்கும் பொருளுக்கும் உள்ள தூரத்தைத் தன் காலடியால் அளந்து முடிவு செய்துகொண்டு கேமராவின் லென்ஸை முடிவு செய்வதாகவும் கூறுகிறார்.

பார்வை இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்றிருந்த புகைப்படக் கலையில்கூட பார்வையற்றவர்கள் சாதனை புரியமுடியும் என்பதற்கு இவர் ஓர் உலகறிந்த உதாரணம்.

-ஆனந்த விகடன்-

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails