Wednesday, July 15, 2009

புற்றுநோய்

இரவு பத்துமணிபிள்ளைகள் தலையாணைகளை தூக்கி கொண்டு தன் வீட்டுக்கு எதிர்வீட்டுக்கு சென்றார்கள் பின்தொடர்ந்து அம்மா போர்வை யை தூக்கி சென்றாள்.

எதிர்வீடுசொந்தகாரர் ஒருவருடையது. புதிததாய் பார்ப்பவர்களுக்கு இந்த விசயம் வியப்பளிக்கும்.
பழகியவர்களுக்கு விசயம் தெரியும்.

அந்த வீட்டு முதியவளுக்கு புற்றுநோய். இரவு பத்து மணிக்கு மேல் இரவில் எத்தனை மணிக்கு சென்றாலும்

ஆ…அய்யோ…

தாங்க முல்லேயே..

கடவுளே.. ஆ..அய்யோ…

என்ற ஈன குரல் கேட்டு கொண்டே இருக்கும்.

மருத்துவ சிகிச்சைக்கு குறைவில்லை ஆனாலும் நோயின் தீவிரம் குறையவில்லை.

பகல் பொழுதுகளின் பரபரப்பில் அந்த ஈனகுரலின் பரிதாபம் வெளிஉலகிற்கு தெரியாமல் அமுங்கி போய்விடும்.

இரவின் விடியலில் ஈனகுரல் உயிர்பெற்றுவிடும். ஆரம்பத்தில் அங்குள்ளவர்களுக்கு அய்யோ..பாவமாக .. இந்த நிகழ்வு இருக்க நாள் ஆக ஆக பழகிய ஒன்றாக ஆகிவிட்டது.

நாட்களை எண்ணிகொண்டிருக்கும் அந்த உயிர்ப்பின் துன்பம்கலந்த பரிதாப குரல் வாழ்வின் நிலையாமை உணர்த்தியப்படியே இருக்கிறது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails