Monday, August 24, 2009

முற்றுபெறாத எண்ணங்கள்


காலையில் இருந்தே அவனுக்கு ஒரே யோசனையா இருந்திச்சி யாரு கிட்ட கேட்பது அவனுக்கு தெரிந்த பலபெயர்கள் மனசுல ஓடிட்டு இருக்க யாரை முதலில் கேட்பது தகுதிவாரியாக அவனுள் எண்ணங்கள் தோன்றியபடி இருந்தன.

இவன் கிட்ட போய் கேட்ட என்ன நினைப்பான்? என்ன பதில் சொல்வான்? இருக்குன்னுவான்னா இல்ல இல்லேன்னு சொல்லிபுடுவான்னா தயக்கம்.

யோசனையோடு ரோட்டில் நடந்து போய்கிட்டு இருந்தான் ஒரு அம்மா பெருகுரலெடுத்து ஒப்பாரி வைச்சு அழுதுகிட்டு இருந்தது.

முதல் நாள் உறவுக்கார வீட்டில் தங்க போக இந்த அம்மாவுடைய வீட்டில் கதவை உடைத்து பீரோலில் அது சேத்து வைத்திருந்த சேமிப்பு அதனுடைய மகன் சேத்து வைந்திருந்த உண்டியல் காசு என எல்லாவற்றையும் திருடி சென்றுவிட்டார்கள்.

அந்த அம்மா அழுவதை பக்கத்தில் வசித்தவர்கள் ஆறுதல் சொல்லியதோடு பரிதாப பட்டார்கள். அந்த இடம் சோகமாய் இருக்க தன் முகத்தை திரும்பி பார்த்தான்.

அவனுடைய செயலில் முகத்தில் சின்ன மாறுதல் கூட ஏற்படவில்லை தீவிர எண்ணங்களுடைய ஆளுமைக்கு கட்டு பட்டு கிடந்தான். வெளிசெயல்களின் எந்த பாதிப்பும் தன்னுள் ஏற்படாமல்தன் வழியே நடந்தான்.

அவனை பார்த்தவர்கள் வித்தியசமாக பார்த்தார்கள்.

யாரும் கேட்கவில்லை அவனை அவனும் பதில் சொல்லும் நிலையில்லை.

வெளிப்பட்ட அந்த அம்மாவின் வேதனைக்கு இரக்கப்பட பரிதாப பட நிறையபேர் நின்றார்கள். ஆனால் உதவி செய்ய யார்?

இவன் மனதிலும் அந்த கேள்விதான் நிறைந்து நின்றது உதவி செய்ய யார்?

பரிதாப படுவார்கள் இரக்கப்படுவார்கள் நிறையப்பேர் திறம்பட செய்தார்கள் இந்த வேலையை உதவி செய்பவர்களை கண்டுபிடிப்பது அரிது.

பழக்கமான முகங்களில் தேடினான் யாரெல்லாம் இரக்கப்படுவார்கள் யாரெல்லாம் உதவி செய்வார்கள் யாரெல்லாம் இரக்கப்பட்டு உதவி செய்வார்கள் என்று

யோசனையாய் குளத்தோர கல்லின் மீது அமர்ந்து குளத்தை வெறித்து பார்த்தப்படி அமர்ந்திருந்தான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails