Tuesday, December 01, 2009

அவரும் அப்படிதான்


தொழில் சார்ந்த வெற்றிகள் ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை சமுதாயத்தில் நிலைத்திட செய்யும். தோல்விகள் அவர்கள் வாழ்ந்த சூழலைப் பாதித்து மனதிற்கும் வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைத்துவிடும்.

தொடர் போராட்டமாய் வாழ்வு தொடர் வெற்றிகளும் தொடர் தோல்விகளும் காலங்கள் தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

வளர்ந்த சூழல் வாழ்வு அமைந்த விதம் அவ்வப்போது மேலும் வளர ஊக்குவிப்பவர்கள் அமைந்த வாழ்க்கை வெற்றிகரமான வாழ்வாக மலர்ந்து விடுகிறது.

சூழல் சரியாக அமையாதவர்களின் வாழ்வு அவ்வளவாக மலர்ந்து விடுவதில்லை.

அவரும் அப்படிதான் தந்தை விட்டுப்போன தொழில் நன்றாக செய்தார்கள் நன்றாக செழித்து வளர்ந்தது. வசதி மேம்பாடு அவரை யாராவது மதிய வேளைகளில் சாப்பிட கூப்பிட்டால் ஏ.சி. அறையில் தான் நான் சாப்பிடுவேன் என்பார். அப்படியே செய்தார் தானே தொழில் சிறந்தவன் என்று மார்தட்டவும் தவறவில்லைதான் அவர்.

ஆரம்பிக்க கூடாத இடத்தில் கடை ஆரம்பித்தார் பெரும் செலவு செய்து ஆரம்பித்த கடை சரியானப்படி கல்லா கட்டவில்லை. விட மனமில்லாமல் தொடர்ந்து நடத்தப்போய் பெரும் நட்டம் வந்தது இருந்த தொழிலும் கைவிட்டு போனது. பெரும் கடன் வந்தது.

வாழ்ந்த விதம் சமாளிக்க முடியாமல் குடும்பம் நிர்வாகமே நடத்த திறமையின்றி போனார். மனைவி பிள்ளைகள் பிறந்த இடம் சென்றனர். இவரது அண்ணன் வீட்டில் இவரது சாப்பாடு என்று ஆனது.

எங்கு சென்றாலும் கார் தான் என்று இருந்தவர் தன்னுடைய பிள்ளைகளின் சைக்கிளை ஓட்டி கொண்டு இருக்கிறார்.

வெளியில் அதிகம் செல்வது கிடையாது. செய்த தொழில் அவ்வப்போது கிடைக்கும் கமிசன் தொகையில் தான் அவரது வாழ்வு. பல லட்சங்கள் கடனாளியாக இன்னமும் நகரத்தின் வீதிகளில் அவர்.

அவரை தெரிந்தவர்கள் அய்யோ பாவம் என்று சிலபேர் இவனுக்கு வேணும் என்று சில பேர் காதுபடவே பேசி…

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails