Thursday, December 10, 2009

எதிர்பார்ப்பு இல்லா வாழ்வை எதிர்பார்த்து.....















எதிர்பார்ப்புகள் நிகழாத உறவுகள் அரிது. எதிர்பார்ப்புகள்ஆயிரங்கள் இல்லாவிடினும் அவர்களின் வாழ்க்கை தேவைக்கு தகுந்த மாதிரி எதிர்பார்ப்புகள் அமைவது உண்மை.

சாதாரண மனித அடிப்படை தேவைகளின் எதிர்பார்ப்புகளின் போது தான் அவன் தன்னையே இழந்து வேதனைகளுக்கு உள்ளாகிறான்.

அய்யா பசி என்றவனுக்கு கிடைக்கும் பதில் வார்த்தைகள் ஏளான பார்வையும் உடம்பு நல்லா தானே இருக்கு உழைச்சு திங்க வேண்டியது தானே சரி போ போ இப்பதான் எல்லாம் முடிஞ்சது என்பார்.

உடல் உழைப்பைசெலுத்திவேலையை பார்த்துவிட்டு தன்னுடைய ஊதியத்தை பெறுவதற்காக மணி கணக்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

அவர்களெல்லாம் முதல் ஆள்பவர்கள் முதலாளிகள் என்ன செய்ய ?

ஒருவரை சார்ந்த ஒருவரின் வாழ்வு குள்ளே எத்தனை விதமான எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் ஆகின்றன.

எதிர்பார்ப்புகள் இயல்பானவை என்றால் ஏமாற்றங்கள் இயல்பானவை அதைவிட பாதிப்புகள் மிகுந்த மன வேதனை தருபவை.

எதிர்பார்ப்பு இல்லா வாழ்வை எதிர்பார்த்து.....


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails