Friday, February 27, 2009

நம்முடைய நிம்மதி கெட நாம மட்டுமே காரணம் கெடையாதுங்க..

அவனுக்கு அது போதாத காலம் எது எடுத்தாலும் அவனுடைய எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப செயல் அமைந்ததே கிடையாது.

அவனுக்கு பெண் பார்த்தார்கள் அவனுடைய குடும்பத்தில் ஜாதகம் முக்கியம். அவருடைய ஜாதகத்தில் அப்பா அம்மா இல்லாத பெண் தான் முடிய வேண்டும். அப்பா அம்மா இருந்தால் சரியாக வராது என்று ஜாதகம் பார்த்தவர்கள் சொல்ல தேடினார்கள் நீண்ட தேடுதல்களுக்கு அப்புறம் ஒரு பெண்ணை ப்பார்த்தார்கள் மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை அந்த சம்மந்தம் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்.

அடுத்த ஒரு நீண்ட தேடல்மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடித்திருக்க நாங்களும் ஒரு தடவை ஜாதகம் பொருத்தம் பார்த்து விட்டு மேற்கொண்டு சொல்கிறோம் என்று மாப்பிளையின் ஜாதகத்தை வாங்கி சென்று அவர்களுடைய குடும்ப ஜாதகம் பார்ப்பவரி டம ் பார்க்க அவர் கொஞ்சம் பொறுத்து செய்யலாம் என்று சொல்ல மாப்பிள்ளை வேண்டாம் என நிராகரித்தார்கள்.

மாப்பிள்ளை படு அப்செட் இவர்கள் ஜாதகம் பார்த்த இடத்தில் செய்யலாம் என்று சொல்ல அவர்கள் பார்த்த இடத்தில் வேண்டாம் என்று சொல்ல இவர் நிம்மதியை தேடி கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டில் பெண் தேடி கொண்டு இருக்கிறார்கள்.

நம்முடைய நிம்மதி கெட நாம மட்டுமே காரணம் கெடையாதுங்க..

என் பொண்டாட்டி என்பவள் இப்படியாக…

படித்தவளாக இருக்கவேண்டும். அன்புடன் அனுசரிப்பவளாக குடும்பத்துடன் ஒத்து போககூடியவளாக இருக்கவேண்டும்.

ஆடம்பரம் கூடாது. அடக்கம் வேண்டும். ஆஹா..ஓஹோ…….என்று இல்லாமல் அழகு வேண்டும்.

கோபம் செய்யுமிடத்து கோபம் வேண்டும். இன்று வாழ்வில் இணைந்ததற்காக என் பிறந்த நாளிலிருந்து தொடர்புடையவர்களை பிரிக்காத குணம் வேண்டும்.

வசதி வேண்டாம் கஷ்டம் தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும். என் வருமனத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் ஆசை படுவளாக இருக்கவேண்டும்.

பேசும் நேரமறிந்து பேச வேண்டும். வளர்ந்த சூழல் எவ்வாறு இருந்தாலும் புதிய சூழலில் தன்னை விரைவாக மாற்றிகொள்ளும் பக்குவம் வேண்டும்.
என் பொண்டாட்டி என்பவள் இப்படியாக…

Tuesday, February 24, 2009

விரல்களை எடுத்து காற்றை குடிப்பார்கள்.

தென்கிழக்காக வீசியது காற்று . காற்றின் போக்கில் பரவிய துர்நாற்றம் யாருடைய மனதிற்குள்ளும் எங்கிருந்து வீசுகிறது? என்ற வினாவினை எழுப்பாமல் இல்லை.

குளக்கரையின் ஓரத்தில் நின்றிருந்த அரச மரம் ஆழ மரத்தின் கிளைகளில் சின்னதும் பெரியதுமான பைகள் தொங்க விடப்பட்டிருந்தன.ஒரு பையிலிருந்து திரவம் வடிந்து கொண்டிருந்தது. மற்றொரு பை காய்ந்து சருகாய் போயிருந்தது.இது போன்று பல பைகள் கட்டப்பட்டிருந்தன.

மரம் உள்ள பகுதியினை கடக்கும் மனிதர்கள் தன்னுடைய விரல்களின் உதவியால்மூக்கை இழுத்துபிடித்தவாறு சுவாசிக்காது விரைந்து கடந்து விடுவார்கள்.

கடந்து போய் விரல்களை எடுத்து காற்றை குடிப்பார்கள்.
நிம்மதியாய் மூச்சை இழுத்து விடுவார்கள்.

அன்றைக்கு கட்டபட்ட பை புதிததாக இருக்கும் . திரவம் வெளியேறி கொண்டிருக்கும் பை நான்கைந்து நாட்கள் முன்பு கட்ட பட்டதாக இருக்கும். பத்து பதினைந்து நாட்கள் என்றால் திரவம் வெளிவந்து பை காய்ந்து போயிருக்கும் .

மரத்தின் அருகில் சென்று பைகளின் எண்ணிக்கையை அறிந்தால் அந்த ஊரில் குறிப்பாக அந்த மரகளுக்கு மிக அருகில் தெருவில் எத்தனை பசு மாடு கன்று ஈன்று உள்ளது என்பதை அறியலாம்.

பசு மாடு கன்று ஈன்ற பிறகு போடும் கருப்பையில் திரவம் தொப்புள் கொடி அடங்கிய பை கள் . நாய்களுக்கு பயந்து அதை கொண்டு வந்து மர கிளைகளில் கட்டுவார்கள்.

Wednesday, February 18, 2009

தேடுதல் நேரம் முடிவடைய......

எட்டுமாத குழந்தை தன் தாயின் முகம் பார்த்தது. தாயின் கரங்களிலிருந்து விடுப்பட்டு கொஞ்ச தூரம் போய் விளையாடும் திரும்ப பார்க்கும் உடன் ஓடிவந்து தாயின் கரங்களுக்குள் சரணடைந்துவிடும்.

அன்றைக்கும் விளையாடியது. தாய்க்கு வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் தனக்கு தெரிந்தவர் வீட்டில் விட்டு செல்ல முடிவு செய்து தன் குழந்தையுடன் வீட்டிற்கு வந்தாள்.

பிள்ளையும் இறங்கி விளையாடியது. குழந்தை விளையாடிய நேரம் தாய் குழந்தையை விட்டு பிரிந்தாள்.

சில நிமிடங்கள் ஆகியிருக்கும் குழந்தையின் கண்கள் தாயை தேடின அதனுடைய எல்லைகளுக்குள் இடம்பெயர்ந்து தாயை தேடியது.

தேடுதல் நேரம் முடிவடைய அதனுடைய அடுத்த செய்கை
அழுகையாக வெளிப்பட்டதுஅங்கிருந்தவர்கள் புட்டிபால் கொடுத்து தூங்க வைத்தார்கள்.

தூங்கி விழித்ததுதாயை தேடியது. விளையாட வில்லை மலர்ந்திருக்கும் முகம் வாடியது யார் தூக்கினார்களோ தூக்கியவர்களின் தோள்களில் அப்படியே படுந்திருந்தது.

முகம் வெளிப்படுத்திய அதனுடைய சோகம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அனாதை குழந்தைகள்............................

Tuesday, February 17, 2009

பரிச்சயமில்லாத இந்த பெண்ணின் வருகை

ஊரையும் கடைத்தெருவையும் இணைக்கும் ஏரிக்கரை சாலை மிகவும் பிரபலம் அந்த பகுதி மக்களுக்கு வயல் வேலைக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடைத்தெரு செல்வோர் மற்றும் கூடை வியாபாரிகளும் இளைஞர்களும் யுவதிகளும்ஆடு மாடு ஊர்வன பறப்பன உட்கார பயணிக்க பயன்படும் சாலை அது.

காலை எட்டு மணி அந்த சாலைக்கு பரிச்சயமில்லாத பதினேழு வயதுடைய கன்னிப்பெண் தன் தோழியுடன் ஏரிக்கரை சாலையில் கொஞ்சம் தூரம் நடந்து சென்றாள்.

சாலைக்கு பழக்கமானவர்களின் கண்களுக்கு சாலைக்கு பரிச்சயமில்லாத இந்த பெண்ணின் வருகை வித்தியசமாக பட்டது.

யார்? ஏன்? வினா வுடன் அவளை க்கடந்து சென்றார்கள். அப்படி செல்பவர்களை பற்றிய கவலை இல்லாது தோழியை தனியாக நிற்க வைத்து யாருடனோ செல்பேசியில் பேசினாள்.

திரும்பவும் தோழியுடன் நின்றுகொண்டிருந்தாள். பத்து நிமிடங்கள் கழிந்தது இளைஞன் ஒருவன் தன் நண்பனுடன் வர..

நண்பனும் தனியாக நிற்க தோழியும் தனியாக நிற்க இளைஞனும் யுவதியும் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

அந்த காலை வேலையில் இவர்களின் செய்கை ஏரிக்கரை சாலையில் பல்வேறு விதமான மாற்றங்களை உண்டு பண்ணியது.

Monday, February 16, 2009

இயல்பு

இயல்பாய் இருக்க
முயல்கிறேன்
எண்ணங்கள்
சிறு அறிவு
குழப்பம்
வேடம் இயல்பாய்
வர..
இருப்புக்குள்
நுழைய முயல்கிறேன்
எண்ணங்கள்
இல்லா நேரம்
முடியவில்லை
எண்ணங்களால்.

மனிதன் தான் இறைவன் படைப்புகளிலே மிகவும் உயர்ந்தவன். சிரிப்பா இருக்குல்ல...

குஜராத் வைரத் தொழிற்சாலைகளில் வேலை இழந்த தொழிலாளர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மருந்து பரிசோதனைக்காக பயன்படும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலையால் மூடப்பட்டு வரும் வைரத் தொழிற்சாலைகளினால் வேலை இழந்து தொழிலாளர்கள் குஜராத்தில் அகமதாபாத் பரோடா மற்றும் சூரத் நகரங்களில் உள்ள மருந்து பரிசோதனைக் கூடங்களில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகள் பக்க விளைவு ஏதும் ஏற்படுகிறதா என்று சோதித்து பார்க்க காசுக்காக தங்களை இதில் ஈடுபடுத்துகின்றனர்.

சோதனைக்கு உட்படுத்தப்படும் நாட்களை பொறுத்து அவர்களுக்கு 5 ஆயிரம் முதல்15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

ஆயுள் முழுவதும் பக்க விளைவு இருக்கும். இதற்கு அதிகம் பயன்படுவது ஏழைகள்தான் .

மனிதன் தான் இறைவன் படைப்புகளிலே மிகவும் உயர்ந்தவன். சிரிப்பா இருக்குல்ல...

Sunday, February 15, 2009

ஏ கெழவி .. சாயம் நனைக்காத பூவா கொடு

காலை நேரம் பள்ளிகூட நேரம் நெருங்கிவிட்டதால் வீதியெங்கும் விதவிதமான சீருடைகளில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள்.

கல்லூரி செல்லும் பெண்கள் இளைஞர்கள் வேலைக்கு ஆண்களும் பெண்களும் விரைந்தப்படி சூழலுக்கு தக்கவாறு அவர் அவர்களின் மனதில் எண்ணங்கள் ஓட தங்கள் இலக்கை நோக்கி பயணித்தார்கள்.

பை நிறைய அன்றைக்குவிற்கும் பூப்பந்துகளுடன் பூக்காரிதன்கடையை விரைவா க நடந்து வந்து கொண்டிருந்தாள்.

தன் கடையை அடைந்தவுடன் பையை கீழே வைத்துவிட்டு வாளியை எடுத்து கொண்டு தண்ணி கொண்டு வந்தாள்.

பைக்குள்ளிருந்த பச்சை நிற சாயப்புட்டியை எடுத்து வாளி தண்ணீரில் கலந்தாள் பையிலிருந்து ஒவ்வொரு பூப்பந்தாக எடுத்து பச்சை நிற சாயதண்ணியில் அமுக்கினாள் வெள்ளைநிற பூக்கள் பச்சை நிறம் பெற்றது.

ஏம்மா பத்து ரூபாக்கு பூ குடுங்க..என்றார் வாடிக்கையாளர்.

நெடுநேரமாய் பூக்கார கிழவியின் செய்கைகளை கவனித்த இளைஞன்

ஏ கெழவி .. சாயம் நனைக்காத பூவா கொடு அவுங்களுக்கு என்றான்.

கிழவி உடனே “ நல்ல துணி உடுத்துனா போற குட்டி உன்ன பாப்பா..

கொப்புறனா .. ஒப்பதன்னான்ன.. நேத்து சாயங்காலம் ஒரு பூப்பந்து நனைக்காம வைச்சுட்டேன் அந்த பூவ வேனான்னு சொல்றாங்க ..

நான் என்ன செய்ய என்றபடி தன்கடையை கவனித்தாள்.

Friday, February 13, 2009

காமத்தோடு தொடர்புடையதா காதலர் தினம்?

காதலர் தினம் காதலர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது வியாபாரிகளால் உருவாக்கபட்டதா?

காதலர் தினத்தின் நோக்கம் என்ன? ஹோட்டல்களில் அளிக்கபடும் விருந்துகளா அல்லது காதலன் எனப்படுபவன் காதலி என்பவளுக்கு அல்லது காதலி என்பவள் காதலன் என்பவனுக்கு தரப்படும் பரிசு பொருட்கள் காமத்தோடு தொடர்புடைய உறவுகளுக்கு இடம் தரும் தினமாகாதலர் தினம்?

தொழிலாளர்கள் தினம் கொண்டாட படுவதற்கு அர்த்தம் உண்டு. ராணுவத்தினர் தினம் கொண்டாட அர்த்தம் உண்டு.

இருவருக்கு இடையே ஏற்படும் அன்பின் விளைவாய் காதல். இதற்கு எதற்கு காதலர் தினம்.

சூழ்ச்சி திறன் மிக்க வியாபாரிகளால் ஏற்படுத்தபட்ட தினம் தான் காதலர் தினம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் காதலர் தினத்தன்று மணிகணக்காய் செல்போன் பேச்சு வீட்டிற்கு தெரியாமல் வெளியில் சென்று சுற்றி வருவது சிறப்பு நிகழ்வுகளாய் காம உறவுக்கான அங்க தொடல்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசுப்பொருள் பரிமாறி கொள்ளல்காதலர் தினத்தை நிறைவு செய்யும்.

காதலுக்கு எதிராக கருத வேண்டாம். காதலர் தினத்துக்கு எதிராக மேற்கூறிய கருத்துகள்.

Thursday, February 12, 2009

அவளுடைய வாழ்க்கை சூன்யமே..

நடுந்தர வயது பெண்மணி அந்த வீட்டில் தனியாக குடியிருந்தாள். அவளுக்கு பிள்ளைகள் இருப்பதாக தெரியவில்லை.

சொந்த பந்தங்கள் அவளுக்கு அருகில் வசிப்பவர்களே எதையோ இழந்த முகத்துடன் பெரும்பாலும் தனியாக உட்கார்ந்திருந்து நேரம் கழிப்பாள். பொழுது போகவில்லையென்றால் எங்கயாவது நடந்து போய் வருவாள்.

அவளுடைய வாழ்க்கை அவளுக்கு எவ்வாறு இருந்ததோ தெரியவில்லை அவளைப்பற்றி தெரிந்தவர்களுக்கு அவளுடைய வாழ்க்கை சூன்யமே..

கணவனுடன் ஒத்துபோக வாழ்க்கை கணவனுக்கு பிடிக்காமல் போய் கோர்ட் படிக்கட்டுகள் ஏறி விவகாரத்து பெற்று ஜீவானாம்ச தொகை ப்பெற்று அதில் மேற்கண்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட கணவனுடைய வீட்டில் வசித்து வந்தாள்.

சில வருடங்கள் சென்றது இவளுடைய கணவனுக்கு பணதேவை
இவள் வசிந்து வந்த வீட்டை விற்க முடிவு செய்து இவளை காலி செய்ய சொல்ல இவள் மறுக்க பிரச்சனை தொடர்ந்து நடைப்பெற்றது.

எந்தவொரு முடிவுக்கு ஒத்துவராது சண்டை போடுவதுமாக காலம் கழிந்து கொண்டிருந்தது.

வெளிநாட்டு விபரங்களை அறிய உதவும் இந்திய அரசு

வெளிநாட்டு வேலையின் விபரங்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான விதிமுறைகள் மற்றும் வெளிநாடு செல்வதற்கான அனைத்து விபரங்களையும்
இந்திய அரசால் நிறுவப்பட்ட இலவச ஹெல்ப்லைன்

எண்1800113090* தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு

www.moia.gov.in info@moia.nic.in

Tuesday, February 10, 2009

வருந்தினால் வராததொன்றுமில்லை

செல்வமும் அழகும் கல்வியும் வலிமையும் ஜந்துக்களுக்கு அதிக கர்வத்தை உண்டாக்குகின்றன.

தன்னைக்காட்டிலும் இந்தநிமிடம் ஒரு விஷயத்தில் தணிந்திருப்பவன் எப்போதும் தணிவாகவேயிருப்பானென்று மூடன் நினைக்கிறான்.

எந்தத் தொழிலும் யாருக்கும் வரும் வருந்தினால் வராததொன்றுமில்லை.

பார்ப்பாரப் பிள்ளைக்கு வியாபாரத் தொழில் வாராதென்று சொல்லி நகைத்தானாம் செட்டி.

பாரதி.

பிரிவு

கால சுழற்சி
சூழ்நிலை சதி

அன்பானவர்களின்
பிரிவு

பிரிந்தும்
அழியா
காலடி சுவடுகள்

வந்து வந்து
போகும்
நினைவலைகளாய்
என் நெஞ்சில்

என் விழிகளில்
சில துளிகளாய்..

Monday, February 09, 2009

வசிப்பவர்களுக்கு தெரியும். பார்ப்பவர்களின் கண் களுக்கு ..

அடுத்து அடுத்து இருந்த இரண்டு வீட்டின் கதவுகளும் இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டபட்டிருந்தன. பார்ப்பவர் கண்களுக்கு வித்தியாசமாக இருந்த அந்தநிகழ்வு ஏன்? என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.
வீட்டிற்கு உடையப்பட்டவர்கள் தவிர யாரும் இந்நிகழ்வை முக்கியமாகஎடுத்து கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் ஆகியது மேற்கூரையின் ஓடுகள் பிரிக்கபட்டு எலும்பு கூடாய் நின்றன இரண்டு வீடுகளும் இப்பொழுதும் பூட்டுகளால் பூட்டபட்டிருந்தது.

பார்த்தவர்கள் விசாரித்தார்கள்யார் வீடு இது ? ஏன் இப்படி ? என்று அனுமானம் செய்து சொன்னவர்கள்

என்ன சொத்து பிரச்சனையா இருக்கும் அதுவும் அண்ணன் தம்பி இடையே நடக்கும் பிரச்சனையாகத்தான் இருக்கும் என்றார்கள்.

இரண்டு நாட்கள் சென்றது வீடுகளின் மேல் இருந்த மரங்களும் பிரிக்கப்பட்டது.

என்னதான் பிரச்சனை அருகில் வசிப்பவர்களுக்கு தெரியும். பார்ப்பவர்களின் கண் களுக்கு மனதில் ஆவலை தூண்டியவாறு இருந்தது.

அவர் அவர் பார்வைகளுக்கு தக்கவாறு பிரச்சனைகள் பேசப்பட்டன. அரைகுறையா ய் தெரிந்தவர்கள் சரி எது தவறு எது என்று விவாதம் செய்து கொண்டார்கள். தெரிந்தவர் தெரியாதவர் எதுவும் பேசாமல் பார்த்தபடி விலகி சென்றார்கள்.

இரண்டு வீடுகளும் இப்பொழுதும் பூட்டுகளால் பூட்டபட்டிருந்தது.

Saturday, February 07, 2009

திருடனுக்கு தெய்வமாவது பக்தியாவது

போக்குவரத்து நிறைந்த சாலை எப்பொழுதும் கார் வேன் லாரி இருசக்கர வாகனங்கள் வருவதும் போவதுமாக இருக்கும்.

சாலையின் நடுவில் அந்த மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார் விபத்து நடக்காமல் காப்பாற்றும் தெய்வமாய் முனீஸ்வரர் .

இந்த முனீஸ்வரர்க்கு சிலை கிடையாது. சூலம் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் திருநீறு குங்குமம் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு இவற்றை வைத்துதான் முனீஸ்வரரை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

சூலத்திற்கு நான்கு அடி முன்பாக வைக்கபட்டிருந்த உண்டியல் உண்டியலில் யாரும் நேரடியாக காணிக்கை செலுத்தமாட்டார்கள். பேருந்தில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் பேருந்தின் சன்னல் வழியாக கோவில் வந்தவுடன் கன்னத்தில் விரலால் அடித்து மாறி மாறி பிரார்தனை செய்து காசை தூக்கி எறிவார்கள்.

அங்கு சாமி கும்பிட வருபவர்கள் முனீஸ்வரருக்கு பயந்தே கரெக்டாக உண்டியலில் சேர்த்து விடுவார்கள்.

ஆனால் திருடனுக்கு தெய்வமாவது பக்தியாவது தேவை காசு
உண்டியலை கபளீகரம் செய்து விடுவார்கள். கோவிலை கூட்டி நிர்வாகம் செய்பவர் எத்தனையோ தடவை முயற்சி செய்தார் ஒரு தடவை உண்டியலை தரையில் புதைத்து இன்னொரு தடவை உண்டியலை வெளியில் வைத்து இரண்டு பூட்டுகள் கொண்டு பூட்டி ஊகும் எதற்கும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை திருடர்கள்.
நல்ல வசூலாகும் அந்த முனீஸ்வரர் எண்ணெய் வழிந்தப்படியே எப்பொழுதும் ஆனால் உண்டியல் மட்டும் புதுசாக மாறி கொண்டே இருந்தது.

Friday, February 06, 2009

அன்புள்ள காதலா அன்புடன்…4

பேசும் விழிகளுக்குள்
மௌனமாய்
நான்

கருவிழி
எல்லைகளுக்குள்
சிறைப்பட்ட
எனது உருவம்

இதய துடிப்பாய்
சுருங்கி விரியும்
இமைகளின்
பாதுகாப்பு

தப்பி ஓட
நினையும்பொழுது
தடுத்து விட

என்னவன்
விழி சிறைக்குள்
நான்
சிறைப்பட்டாலும்

காலங்கள்
யாவும்
விநாடிகளே..

Thursday, February 05, 2009

குழப்பம் தீரவில்லை.

கல்லு சரியில்ல மணல் சாரியா இருக்கு பாத்துங்குங்க என்று கொத்தனார் சொல்லிவிட..

கொத்தனார் சொல்லியவுடன் புதிததாய் வீடு கட்டுபவர்
குழம்பி போய் தனக்கு தெரிந்தவருக்கு போன் செய்து

கல்லு சரியில்லன்னு கொத்தனார் சொல்றார் அண்ண என்ன பண்றது.

அதெல்லாம் ஒண்ணும் இல்ல அவங்க கல்லு சொல்லி விட்டாங்கன்ன கமிஷன் கிடைக்கும் அது இல்லாம நம்ம பண்றோம்ல அதனாலதான் நீங்க ஒண்ணும் கொலம்பாதீங்க என்று சொன்னார்.

புதிததாய் வீடு கட்டுபவருக்கு அப்பொழுதும் குழப்பம் தீரவில்லை.

வேறு கட்டிடங்களுக்கு இறங்கிய செங்கற்களை போய் பார்த்தார். அதைவிட நன்றாகத்தான் இருந்தது இவருக்கு வந்திறங்கிய செங்கற்கள்.

இவருக்காக பழகிய முறையில் நண்பர் மூலமாக செங்கற்கள் சொல்லிவிட்டார் இன்னொரு நண்பர் குழம்பிபோய்
நீங்க வேறு எங்காவது கல்லு வாங்கிங்க ..என்று சொல்லியபடி தான் அவருக்காக இருந்த உதவும்
மனபான்மையிலிருந்துவிலகி கொண்டார்.
இன்னமும் குழப்பமாகவே இருந்தது வீடு கட்டுபவருக்கு..

Sunday, February 01, 2009

சுயம் விடல்

ஆணவத்திற்கு
அடிமையாதல்
கோபம்
வரும்வழி
சுயம் தெரிய
சுயம் விடல்
அமைதி தேடல்
இருப்பில் வாழ்வு
நினைவாய்
செயல் வாழ்வு
செயலாய் வாழ்வு
குழப்பம் இயல்பு
அமைதி இயல்பு
குழப்பம் அமைதி
இருப்பின் இயல்பு.

அனாதை

தன்னை அறியா
தனித்து விடப்பட்ட
உயிர்ப்பு அனாதை.

LinkWithin

Related Posts with Thumbnails