Thursday, July 30, 2009

அரசு சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.


கையிலிருந்த லத்தி உயர்ந்தது வேகமாக வந்த இருசக்கரவாகனகாரர் மெதுவாக நிப்பாட்டினார்.

பேப்பரு எல்லாம் காட்டுங்க லைசென்ஸ் எடுங்க போலீஸ்கார் கேட்டார்.

சார் அது வந்து லைசென்ஸ் இன்னும் எடுக்கல பாக்கியெல்லாம் கரெக்டா இருக்கு சார்.

வண்டிய ஓரங்கட்டி அய்யாவ போயி பாரு..

அந்த போலீஸ்கார் அடுத்தவண்டி புடிக்க ரெடியானார்.

அன்றைக்கு லைசென்ஸ் ஆர்.சி. இன்சூரன்ஸ் என சரிபார்த்த இருசக்கர வாகனங்களில் எல்லா சரியாய் இருந்தது பத்து வண்டிகள் மட்டுமே. நாற்பது ஐம்பது வண்டிகளுக்கு அன்றைக்கு அபராதம் போடப்பட்டது.

தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இந்த சோதனை செய்யபடபொதுமக்களின் மனதில் மிகப்பெரிய மாறுதல் ஏற்ப்பட்டது.

எல்லாத்தையும் கரெக்டா வச்சுகனும் பெரிய தொந்தரவா இருக்குய்யா போலீசுகாரனோட டெய்லி செக் பண்ணிகி்ட்டே இருக்கானுங்க என்ற பேச்சு.

ஏம்ப்பா உன் வண்டி எங்க ..

யாருங்க போலீசுட்ட மாட்டறது அதான் வண்டிய வீட்டுல வச்சுட்டு வந்துட்டேன் என்றார் ஒருவர்.

காவல்துறை போட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட பொதுமக்கள் தயாராக இருக்க இந்த நான்கு நாட்கள் சோதனையே போதுமானதாக இருந்தது.

இப்பொழுதாவது தெரிகிறதா பொதுமக்கள் குற்றவாளிகள் அல்ல அதிகாரம் படைத்த அரசும் அரசில் உள்ளவர்களும் தான் . காவல்துறை செயல்படுத்துவதும் அரசுதானே.
அரசு சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

Tuesday, July 28, 2009

என் மனதை ரணமாக்கி கண்களை ஈரமாக்கிய புகைப்படங்கள்




வாழும் உயிர்ப்புகள்

கைகள் இயக்கம்
இல்லாமல்
செய்த வாதம்
கால்கள்
சூம்பி போன
இளம்பிள்ளை
வாதம்
எல்லோரின்
மனது போலவே
ஆசைகள் ஆயிரம்
உணர்வுகள்
உந்துதல்கள்
எண்ணும் மனது
இயங்க மறுக்கும்
உடல் உறுப்புகள்
மனதும் உடலும்
உடலும் மனதும்
முரண்பாடாய்
வாழும் உயிர்ப்புகள்

Monday, July 27, 2009

எந்தவொரு எண்ணமும் இல்லாமல்


நின்ன நிலையில் ஓங்கி உதைத்தான் அந்த நாயை அது தள்ளிபோய் விழுந்து எழுந்து ஓடியது. கோபம் குறையாமல் நாய் ஓடுவதையே பார்த்து கொண்டிருந்தான்.

வரப்புகளின் நடுவே நடந்து போய் வாய்க்காலில் முகம் கால் கைகள் சுத்தம் செய்ய சென்றான். இவன் வரப்பில் வருவதை பார்த்தவுடன் சாடரென்று தன்னுடைய பாதையை மாற்றி ஓடியது.

நாயை பற்றி எந்தவொரு எண்ணமும் இல்லாமல் வரப்புகளின் வழியே வாய்க்காலை நோக்கி நடந்து சென்றான். வாய்க்காலில் இறங்கி கால் கைகள் சுத்தம் செய்து திரும்புகையில் இவனுக்கு மிக அருகிலேயே வாய்க்காலில் இறங்கி இவனைப் பார்த்தப்படி நின்று கொண்டிருந்தது.

தூக்கிவாரி போட்டது பயந்து போனான் பயம் கோபமாய் மாறி விட்டான் உதை.

அவன் சுயநிலைமைக்கு திரும்ப சில நிமிடங்கள் ஆனது. எப்படி வந்தது என்ற எண்ணத்தோடு நாயை ஓடுவதை பார்த்து கொண்டிருந்தான். நாயும் ஓடுவதும் நின்று பார்ப்பதுமாய் ஓடியது.

Sunday, July 26, 2009

லக்சய இன்டியாவும் லட்சமும்


அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வந்தார்

யார்கிட்டேயும் சொல்லாதீங்க நீங்க ஒரு பத்தாயிரம் முதலீடு பண்ணீங்கன்னா பதிமூனாவது மாசத்தோட முடிவிலே 6 லட்சம் சம்பாதிக்கலாம்.

அவர் நம்பல நான் உழைச்சு திங்கறது போதும் எனக்கு ஆறு லட்சம் வேண்டாமப்பா என்றார்.

மனசு நப்பாச விடல நீ சொல்றது நம்பமுடியல..

நீ வேற நானும் அப்படிதான். அப்புறம் அவங்க கணக்கு போட்டு சொன்னாங்க அவரு பணம் கட்டி 3 மாசமா பணம் வந்துகிட்டு இருக்காம்.

அப்படி என்னதான் பண்ணுவாங்க..

நாமகிட்ட பணம் வாங்கி ஏதோ ஆன்லைன் பிசின்ஸ் பண்ணி
அவங்களுக்கு போக நமக்கு தர்றாங்கப்பா

சரி இத ஏம்பா யாருகிட்டேயும் சொல்ல வேண்டாங்கிற..

யாம்ப்பா நமக்கு ரிஸ்க்..

மனசு அல்லாடியது உழைப்பில்லா ஒன்றை கொடுத்து பத்தை பெறும் வழி.

ஆனாலும் பயம்.

நான் யேசிச்சு சொல்றேன்.

அவருடைய இன்னொரு நண்பரை தொடர்பு கொண்டார் அவருக்கு தெரிந்ததை சொல்ல இவர் தப்பித்தார்.

ஆயிரத்தை செலுத்தி லட்சம் கிடைக்கையில் மனசு பெரும் போராட்டம் நடத்தவே செய்யும். சீக்கரமாய் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம்.

விழிப்பாய் இருங்கள் இருப்பதை இழந்து விடாதீர்கள்.

Saturday, July 25, 2009

ஆவதும் பெண்ணாலே..அழிவதும் பெண்ணாலே..

பெயர்- நித்யானந்த் கோபாலிகா

தகுதி - கான்பூர் IIT யில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.

வேலை - அமெரிக்கா பென்சில்வேனியா

செய்த குற்றமாக சொல்லபடுவது - 13 வயது பள்ளி சிறுமியைபாலுறவுக்கு அழைத்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்- 20 ஆண்டு சிறைவாசம் 12.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

சார்..அவங்களா வந்தா அவங்க விருப்பம் நீங்க கூப்பிட்டா அது வன்முறை.

படித்தவர்கள் சிலபேர் கழனி பானைக்குள் கையை விடும் சமாச்சாரம் இதுதாங்க.

என்ன பன்னறது ஒவ்வொரு மனிதனோட தலையெழுத்த மூளை நிர்மாணிக்கல காலம் தான் சார் நிர்மாணிக்குது.

Friday, July 24, 2009

விடிந்த பொழுதுகளில்


விடிந்த பொழுதுகளில்
தோன்றிய
கவலைகள்
காலைபொழுதின்
உணர்வுகளை
அனுபவிக்காமல்
செய்த மனது
தூக்கியெறிய முடியா
கவலைகள்
சுமந்தப்படி
இயந்திரமாய்
குளித்து
உணவு உண்டு
கோபமாய்
சிடு சிடுத்து
சிரித்த குழுந்தையின்
சிரிப்பை
புறந்தள்ளி செல்கையில்
வாழ்வின்அர்த்தங்கள்
புரிய
வெகுதூரமாய் ..

மருந்து தயாரிப்பில் கலப்படம்


‘பாராசிட்டமால்’ சிரப் சாப்பிட்ட 24 குழந்தைகள் சாவு

வங்கதேசத்தில் பாராசிட்டமால் சிரப் சாப்பிட்ட 24 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து மருந்தைதயாரித்தஅந்த தனியார் மருந்து நிறுவனம் உடனடியாக மூட ப்பட்டது.

பாரசிட்டமால் மாத்திரை மற்றும் சிரப் தயாரிக்க பயன்படும் ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருளுக்கு பதிலாக அப்பொருள் போன்ற தரம் குறைந்த விஷத்தன்மை கொண்டுள்ள டை எத்திலீன் கிளைக்கோள்(diethylene glycol) பயன்படு்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த 24 குழந்தைகளும் 3 மாதம் முதல் 3 வயதுக்கு உட்பட்டவர்களே .

Thursday, July 23, 2009

இந்த புகைப்படம் முன்மாதிரியா...



கடின உழைப்புக்கு எடுத்துகாட்டாக இந்த புகைப்படம்.

எத்தனை பேர் கடினஉழைப்புக்கு எடுத்துகாட்டாக இந்த புகைப்படத்தை எடுத்துகொள்ளமுடியும்?

எதார்தத்தை மீறிய ஒன்று இந்த புகைப்படம்.

Wednesday, July 22, 2009

தீ விபத்து

தீக்கிரையாகும் போது


தீக்கிரையானப்பின்
பலகார கடையின் புகைப்போக்கி குழாயிலிருந்து நெருப்பு பொறிகள் பறப்பது வழக்கம். அது வெளிவந்தவுடன் உடன் அனைந்து விடும். கரி சேர்ந்து அந்த குழாயினுள் அடைப்பு ஏற்பட்டிருக்கும் அதனால் அடுப்பு எரிக்கும் போது நெருப்பு பொறி வெடித்து கிளம்பியது. பக்கத்தில் உள்ள கடையின் மொட்டைமாடி மீது கீற்று கொட்டகை போட்டிருந்தார்கள் அதில் நெருப்பு பற்றியது அனுமானம் ஒன்று.

அனுமானம் இரண்டு இரண்டாவது பலகார கடையின் கீற்று கொட்டகை சரியில்லை கீற்றுகள் மிகவும் காய்ந்து போயிருந்தன அதனால் அடுப்பிலிருந்து தீப்பொறிகள் கிளம்பி தீப்பற்றி மற்ற கடைகளும் நாசமாயின.

அனுமானம் மூன்று கடலை கடையில் கடலை வறுக்கும்போது தீப்பொறிகள் கிளம்பி தீப்பற்றி விட்டது என அன்றைக்கு நடந்த தீ விபத்தை பற்றி வேடிக்கை பார்த்தவர்கள் பேசி கொண்டிருந்தார்கள். தீயைஅனைப்பது ஒரு புறம் வேகமாக நடந்து கொண்டிருக்க
தீயனைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கதொடங்கின . காற்றுகாலம் பற்றிய தீ வஞ்சிக்காமல் பக்கத்தில்
இருந்த அனைத்தையும் நாசம் செய்தது.

கடை வீடுகளுக்கு சொந்தகாரர்கள் தன் வீட்டிற்கு வந்துவிடுமோ என அஞ்சியவர்கள் அஞ்சியவர்களின் உறவினர்கள் நண்பர்கள் பொதுமக்கள் என அனைவரும் தீயணைக்க உழைத்தனர்.

வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் நின்றது. யார் எப்படியாக தீயை அனைக்கிறார்கள் என்பதை பார்க்க(அதில் என்னை சேர்க்கவும்) ..கூட்டத்தில் பதைபதைப்பு காணப்பட்டது. எரிந்ததற்கான மேற்கூறிய அனுமானங்கள் அலசப்பட்டன.

உயிர் சேதம் இல்லா இந்ததீ விபத்து பொருட் சேதத்துடன் முடிவடைய அவ்விடம் புனர்நிர்மானம் செய்துகொள்ள தன்னையே புதுப்பித்து கொண்டது.

Tuesday, July 21, 2009

கருப்பு பசு


அந்த கருப்பு பசுமாடு காலையில் அவிழ்த்து விட்டால் மாட்டினுடைய சொந்தகாரர் தேடிபிடித்து கட்டாமலே தான் எப்பொழுதும் படுத்திருக்கும் இடம் வந்து படுத்து விடும்.

மாட்டின் சொந்தகாரர் மாட்டை பத்தி கவலைபடமாட்டார்.
காலையில் கிளம்பும் மாடு எங்கு மேய்கிறதோ இரவானதும் வீடு திரும்பிவிடும்.

அது பசுமாடு மேய்ச்சலில் எங்கேயோ காளை மாட்டுடன் ஒன்று கலந்து தன்னுடைய கன்றை ஈன காத்திருந்தது. யாரோ போகிற போக்கில் யோவ் ..உம்மாடு ..செனைய்யா பாத்து நல்ல கவனிச்சின்னா ..நல்ல ஜாதி மாடு பால் கறவ வெளுத்துபுடுய்யா பாத்துக்கு என்று சொல்லிவிட்டு போக..

அதுவரையில் மாடு ஒன்று இருப்பது தெரியும். மாடு தண்ணி குடித்ததா வைக்கோல் தின்றதா என்றெல்லாம் அவர் கவலைபட்டது கிடையாது.

இந்த சேதி என்னிக்கு தெரிந்து கொண்டாரோ அன்றைக்கு இரவு மாட்டினுடைய வருகைக்காக காந்திருந்தார். அதுவரையில் அந்த பசுமாட்டை இவர் பிடித்தது கிடையாது. அன்று இரவு அவர் பிடிக்க போய் ஓட்டம் எடுத்தது பெரும் போராட்டம் நடத்தி நாலு தெருக்கள் தாண்டி போய் ஒரு சந்தினுள் வைத்து மாட்டை பிடித்தார்.

மறுநாளிலிருந்து காலையே மாட்டை குளிப்பாட்டி மஞ்சள் பொட்டுவைத்து கொட்டகையில் கட்டி மூன்று வேளையும் தண்ணி வைத்து வைக்கோல் போட்டு சிரத்தையுடன் கவனிக்க ஆரம்பித்தார்.

அவர் சிரத்தையெடுத்தால் அதில் பலன் இல்லாமல் செய்யமாட்டார் என்பது அவருக்கு அருகில் வசித்தவர்களுக்கு தெரியும்.

இவருடைய செய்கையை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்கள் நல்லநாளில் அந்த கருப்பு பசுமாடு கன்றை ஈன..

அதான என்னடா இவன் மாட்ட இந்த கவனிப்பு கவனிக்கிறானே பாத்த விசயம் இதுதானா..

அவர் அதனிடமிருந்து பெறும் பாலுக்காக மாட்டினுடைய வேலைகாரனாக இருந்து மாட்டிற்கு சேவை செய்து கொண்டிருந்தார்.

Monday, July 20, 2009

எனைப் பாதித்த புகைப்படம்

கையில் உணவு
பங்கா உனக்கு…
கேள்வியாய் கண்கள்

இடையூறு

படுத்தால்போதும்
அயர்வை
கொண்டு வரும்
உடல் சோர்வு
கண் இமைகள்
தானாய் மூடி
தூங்கி போகையில்
வீறிட்டு அழும்
பிள்ளையின் சத்தம்
உடல் தட்டி
தூங்க வைக்க
தாயின் முயற்சி
தோற்று போகும்
வேகம் வரும்
உடல் தூங்க
சொல்லும்கண்கள்
சொருக
வீறிட்டு அழும்
பிள்ளை
சனியனே
சும்மா கிட..
தந்தையின் திட்டு
உடல் தட்டி
தூங்க வைக்க
தாயின் முயற்சி
சமாதானமாய்…

Saturday, July 18, 2009

எங்க ஊரு அய்யர்

அய்யருக்கு அங்க லட்சணம் மிகப்பொருத்தம் அவருக்கு.. இல்லீங்க இன்னம் கண்யாணம் ஆகலை அதனால பையன்னு சொல்லலாங்க..

அந்த பையனுக்கு வயசு முப்பது தான். காலையிலே குளிச்சுட்டு பட்ட போட்டு வந்துருவாருகோயில தொறந்து பூசை பண்ணவருவார் வந்து பேப்பரு படிச்சு நாலு தெருபையன்களோட பேசிகி்ட்டே இருப்பார். சாமி கிட்ட போறதுக்கு மணி ஒன்பது ஆயிரும்.

காலையிலே சாமி கும்பிட வந்தவங்க கோவில் வாசப்படியோட திரும்பி போயிருவாங்க இந்த பையன் போவரு சாமிக்கு தண்ணி ஊத்துவாரு வணங்கி இல்லீங்க வணங்கமுடியாய் சாமி குளிச்சிதா இல்லையான்னு அவருக்கு தான் வெளிச்சம். சாமிக்கு பொட்டு வப்பாரு நின்ன நிலையிலே சந்தனத்த நெத்திய பாத்து உருட்டி அடிப்பாரு போயி ஒட்டிக்கும்.

மந்தரம் கெடயாது மணி ஒலிக்கும் சாமிக்கு முன்னடி வெச்சி சாப்பாடு பாத்திரத்த தொறந்து மூடுவாருஐந்து நிமிடம் பத்து சாமி சாப்பிட்ரும் காகத்துக்குஒரு கவளம் ஊகும் .....

அஞ்சாறு வருசத்துக்கு முன்னடி காலையில எட்டு மணிக்கு ஒரு காகம் கூட்டம் டான்னு வந்து நிக்கும் அப்புறம் பன்னெண்டு மணி.. எல்லாம் மாறி போச்சு..

ஊருல உள்ளவங்க அப்பன் சரியில்ல..புள்ள எப்படி இருக்கும் என்று பேசுவார்கள்.

இவருக்கு மாற்றம் வர்ற ஆண்டவன் என்னிக்கு தேதி குறிச்சிருக்காரோ தெரியல போங்க..

Friday, July 17, 2009

புகைப்பட தொகுப்பு




அறுந்து விழுந்ததுஆழமான நம்பிக்கை

ஆழமான நம்பிக்கை அன்றைய தினம் கையிலிருந்து அறுந்து விழுந்தது. அந்த அய்யர் மந்தரித்து போட்ட முடிகயிறு.
மன குழப்பம் உடல்நிலை சரியில்லையென்றால் பயந்தகோளாறு இவைகளுக்கு மந்தரித்து முடிகயிறு கொடுப்பார்.

அந்த பகுதி மக்களுக்கு மருத்துவரை தாண்டிய இன்னொரு மருத்துவர். சில பேருக்கு சரியாகி விடும். பலபேருக்கு திரு நீறு மந்தரித்து போய் டாக்டரிம் காண்பிங்க.. ஜாதகம் பாருங்கோ .. இந்த கோயில் போய் அர்ச்சனை செஞ்சுட்டு வாங்க.. என்று சொல்லி அனுப்பி வைப்பார்.

வாரந்தோறும் செவ்வாய் வெள்ளிகிழமைகளில் அந்த கோவிலில் கூட்டம் இருக்கும். காசு அவர்களாக பிரியப்பட்டு அதிகம் தரலாம் குறைந்த பட்சமாக ரூ.11 வாங்குவார்.

நண்பனுடைய நண்பர் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். வேலை பார்க்கும் துறை கம்ப்யூட்டர்வல்லுநர். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட அமெரிக்க மருத்துவத்துக்கு அவரது உடல் நிலை சரியாகவில்லை.

இந்த நண்பனுக்கு போன் செய்து அவரிடம் மந்தரித்து திருநீறும் முடிகயிறும் வாங்கி அனுப்பிவை என்று செய்தி சொல்ல இந்த நண்பனும் அதன்படியே செய்தான்.

அவருக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்ட து என்பதை போன் செய்து தெரிந்து கொண்டான். எப்பொழுதெல்லாம் உடல்நிலை சரியில்லாமல் போகிறதோ இங்கிருந்து திருநீறும் முடிகயிறும் பயணத்திற்கு தயராகிவிடும்.

முடிகயிறு அன்றைய தினம் அவிழ்ந்து விழுந்தது ஆழமான நம்பிக்கையும் சேர்த்துதான் உடன் போன்செய்தார்நண்பனுக்கு கயிறு வாங்கி அனுப்ப சொல்ல..

Wednesday, July 15, 2009

புற்றுநோய்

இரவு பத்துமணிபிள்ளைகள் தலையாணைகளை தூக்கி கொண்டு தன் வீட்டுக்கு எதிர்வீட்டுக்கு சென்றார்கள் பின்தொடர்ந்து அம்மா போர்வை யை தூக்கி சென்றாள்.

எதிர்வீடுசொந்தகாரர் ஒருவருடையது. புதிததாய் பார்ப்பவர்களுக்கு இந்த விசயம் வியப்பளிக்கும்.
பழகியவர்களுக்கு விசயம் தெரியும்.

அந்த வீட்டு முதியவளுக்கு புற்றுநோய். இரவு பத்து மணிக்கு மேல் இரவில் எத்தனை மணிக்கு சென்றாலும்

ஆ…அய்யோ…

தாங்க முல்லேயே..

கடவுளே.. ஆ..அய்யோ…

என்ற ஈன குரல் கேட்டு கொண்டே இருக்கும்.

மருத்துவ சிகிச்சைக்கு குறைவில்லை ஆனாலும் நோயின் தீவிரம் குறையவில்லை.

பகல் பொழுதுகளின் பரபரப்பில் அந்த ஈனகுரலின் பரிதாபம் வெளிஉலகிற்கு தெரியாமல் அமுங்கி போய்விடும்.

இரவின் விடியலில் ஈனகுரல் உயிர்பெற்றுவிடும். ஆரம்பத்தில் அங்குள்ளவர்களுக்கு அய்யோ..பாவமாக .. இந்த நிகழ்வு இருக்க நாள் ஆக ஆக பழகிய ஒன்றாக ஆகிவிட்டது.

நாட்களை எண்ணிகொண்டிருக்கும் அந்த உயிர்ப்பின் துன்பம்கலந்த பரிதாப குரல் வாழ்வின் நிலையாமை உணர்த்தியப்படியே இருக்கிறது.

Sunday, July 12, 2009

இவரை நம்பி யாரும் இல்லை

நிற்பார் கவனிப்பார் செல்வார் . அவர் நின்றதற்கான காரணம் அவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். சில சமயங்களில் சந்தோர கல்லில் அமர்ந்து தான் வைத்திருக்கும் பீடியை பற்ற வைத்து ஆழ இழுத்து விடுவார். பேச்சு குறைவு வெறித்த பார்வை.

அந்த முதியவர் அகவை 70 இருக்கலாம். டீக்கடையி்ல் வேலை செய்தார். தேவை பட்டவர்களுக்கு டீ கொடுப்பது மற்ற சிறு வேலைகள் செய்வதற்காக நாளென்றுக்கு ரூ 70 சம்பளமாக தரப்படும்.

ஒவ்வொரு கடையாக இடம் மாறுவார். நான்கைந்து மாதங்கள் தான் ஒவ்வொரு கடையிலும் இதுவரை யில் பொண்டாட்டி சமார்த்தியம் பிள்ளைகள் வளர்ந்து தன் பிழைப்பை பார்த்து கொள்ள முடிந்ததை வீட்டுக்கு கொடுப்பார். வீடும் இவரை எதிர்பார்ப்பது கிடையாது.

முதலில் வேலை பார்த்த கடை பெரியது. அங்கு இவருக்கு சம்பளம் ரூ 110 டீ அதிகம் விற்றால் இன்னம் சேர்த்து தருவார்கள். இரவு ஒன்பது மணிக்கு கடைமுடியும் சம்பளம் வாங்கியவுடன் இவர் செல்லும் அடுத்த இடம் மதுபான கடை தினம் ஒரு குவார்டர் சில்லரை செலவு போக மீதம் உள்ள தொகை வீட்டுக்கு அல்லது லாட்டரி சீட்டுக்கு மறுநாள் சம்பளம் கையில் வாங்கியவுடன் முன் தினம் செய்த செலவுகள் போலவே தொடரும்.

எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஊருக்கு சென்று விடுவார் நான்கைந்து நாட்கள் கழித்து வருவார். வேலைக்கு வருவார் யேவ்..நீ ..வேலக்கு வேண்டா போய்யா..
ஒன்றும் பேசமாட்டார் போய்விடுவார்.

இவரை நம்பி யாரும் இல்லை யாரையும் நம்பி இவர் இல்லை என்ற அடுத்த கடை நோக்கி வேலைக்கு செல்வார். தினக்கூலியாக இருந்ததால் ஏதோ ஒரு இடத்தில் வேலை.

ரூ 70 சம்பளம் வாங்கியது பத்தவில்லை இவருக்கு குவார்டருக்கு போதுமானதாக இருக்க மற்ற செலவினங்களுக்கு போதவில்லை. அந்த கடை முதலாளியிடம்

இந்த பாருங்க நான் டெய்லி குவார்டரு குடிக்கிறேன். மத்த செலவெல்லாம் இருக்கு நீங்க குடுக்கறது பத்தாதுசேத்த தரமுடியுமா.. முடியாதுன்னா நான் வேலக்கு வல்லீங்க என்றார் .

அது சுமரான கடை இல்ல முடியாது சொல்லிவிட..

நான் நாளலேந்து வரமாட்டேன் வேற ஆள் பாத்துங்குங்க என்றார்.

எதையும் வெளிகாட்டாது முகம் அவருடைய செய்கைகளின் விளக்கம் அவருக்கானதே..

Saturday, July 11, 2009

கிராம நெலம்.

அது கிராமம் கிராம பஞ்சாயத்து உண்டு. ஊர் முக்கியஸ்தர்கள் கிராம திருவிழா கிராமத்திற்கான தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக கிராம பஞ்சாயத்தாக தங்களை கட்டமைத்து கொண்டார்கள்.

ஒவ்வொரு கிராம கூட்டத்தின் போதும் கூச்சலும் குழப்பமும் அதிமாகவே இருக்கும்.

அன்றும் அப்படிதான்கிராம நிலத்த இன்னிக்கு ஏலம் உட்டே ஆவனும் என்றார் ஒருவர்.

கிராம வரவு செலவு பாக்கம நெலத்த ஏலம் போட முடியாதுங்கே ஆமாம்.

நாலங்சு வருசமாவுது கணக்கு பாத்து ஒரு செலவும் உருப்படியா செஞ்சபாடில்ல அதனால கணக்க பத்தி பேசுங்க அப்புறம் பாத்துகலாம் இன்னொரு கிராமத்தார்.

கணக்கு பாக்குறப்படி பாருங்க அதுக்கு ஏம்பா நெலத்த ஏலம் போட முடியாதுன்னு சொல்றீங்க என்றார் கிராம தலைவர்.

ஒருத்தரடோ விருப்பத்துக்கு கிராமம் கட்டுபடாது எல்லாருடோ வார்த்தையும் கேளுங்க கூட்டத்தில் ஒருவர்.

நானும் கிராமத்துல ஒருத்தன் தான். எனக்கு எங்கருத்த சொல்ல அதிகாரம் உண்டு நெலத்த ஏலம் போட முடியாதுன்னு சொன்னவர்.

எப்பா அவரு ஒன்னும் சும்மா சொல்லல அவரு கேக்கறதும் கரெக்டுதான் .

ஊரு பாக்குற நீங்க கிராம திருவிழா நடத்துல அஞ்சு வருசம் ஆச்சு தெருவுக்கு சாமி வந்து கேட்டா காரணம் சொல்றீங்க..

வர்ற வருமானம் எங்க போச்சு சொல்லிட்டு கிராம நெலத்த ஏலம் விடுங்க..

நீங்க பாக்குறபடி பாருங்க ..நெலம் ஏலம் உட்டாவுனும்..

முடியாதுங்க.. எல்லாத்தயும் சரி பண்ணிட்டுதான்.

அதெல்லாம் இப்ப முடியாது.

யேவ் ..இங்கவாய்யா நான் பாட்டுக்கும் கத்திகிட்டு கெடுக்குறேன். ஏன் உனக்கு நெலம் வேண்டாமா…

அதான் நீ பேசுறீய அப்புறம் நான் என்ன..

உங்க விருப்பதான் கிராமமுன்னா நாங்க எதுக்கு என்றபடி எழுந்து சென்றார்கள்.

கூட்டம் எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது.

ஆருயிர் நண்பனே!



உன்னுடைய இடத்திற்கு ஆரம்பம் முதலே இனம் புரியாமல் வந்து போனேன்.

வந்தவனை இன்முகத்துடன் வரவேற்றாய். உனை நண்பாக பாவிக்க கற்றுகொடுக்கும் முன்பே நான் வருவதும் போவதுமாக ஆனால் புன்னகை மாற உன் முகம் நீ மௌனமாய்.

உனை பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் நானும் உன் இருப்பிடம் நோக்கிய என்னுடைய நகருதல்.

உன் இன்முகம் வரவேற்கும் நான் உன் நண்பனா என்னால் அறியமுடியவில்லை.

ஆனால் என் மனதில் நம் நட்பு வளர்ந்தது.

மற்றவர்களோ வந்தார்கள் பூஜை செய்தார்கள் விழுந்து புரண்டார்கள் அப்பவும் நீ இன்முகத்துடன்…

அதிலும் உண்மைகள் போலிகள் இருந்தன.

உண்மை ஆரவாரம் செய்யவில்லை

போலி ஆரவாரம் செய்தது.

எல்லாம் கடந்து இன்முகத்துடனே நீ.

Friday, July 10, 2009

பார்வை வெளிச்சம்


எவ்ஜென் பாவ்கர் (Evgen Bavcar ) பார்வையற்ற புகைப்படக் கலைஞர். வெனிஸ் அருகில் உள்ள ஸ்லோவெனிய நகரில் 1946-ல் பிறந்த இவர் 12 வயதில் ஒரு விபத்தில் கண் பார்வையை இழந்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு தான் விரும்பிய புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நண்பனின் உதவியால் அவளைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது தான் முதல் முயற்சி. அன்று துவங்கிய புகைப்படக் கலை மீதான ஆசை அவருக்குள்ளாகவே வளர்ந்து இன்று உலகம் அறிந்த புகைப்படக் கலைஞராக மாற்றியுள்ளது.

பாரீஸின் சார்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்த பாவ்கர் சிட்டி லைட்ஸ் என்ற பத்திரிகையின் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார். தனது கண்கள் மட்டுமே செயல் இழந்து போயிருக்கின்றன மனது ஆரோக்கியமாக மிகுந்த கற்பனை உணர்வுடன் இருக்கிறது. தனது புகைப்படங்கள் மனதின் வெளிப்பாடுகளே எனும் பாவ்கர் நண்பர்களின் உதவியோடு புகைப்படம் எடுத்து வருகிறார்.

கேமராவைத் தன் உதடு அளவிலான உயரத்தில் வைத்துக்கொள்வதாகவும் தனக்கும் பொருளுக்கும் உள்ள தூரத்தைத் தன் காலடியால் அளந்து முடிவு செய்துகொண்டு கேமராவின் லென்ஸை முடிவு செய்வதாகவும் கூறுகிறார்.

பார்வை இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்றிருந்த புகைப்படக் கலையில்கூட பார்வையற்றவர்கள் சாதனை புரியமுடியும் என்பதற்கு இவர் ஓர் உலகறிந்த உதாரணம்.

-ஆனந்த விகடன்-

Thursday, July 09, 2009

எதற்கும் மசிவதாக தெரியவில்லை அந்த மோடம்.


காலை வந்தவுடன் கம்ப்யூட்டரைமுடுக்கிவிட்டான். உயிர் பெற்றது கம்ப்யூட்டரில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தான்.
இன்டர் நெட் பயன் பாட்டிற்காக USB மோடம் இணைத்திருந்தான்.

காலையிலே தன்னுடைய முழுமையான ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியிருந்தது அந்த மோடம். ஒரு தடவை இரண்டு தடவை பல முறை சரி செய்ய முயற்சித்தான். அது தன்னுடைய பணியை செவ்வனே செய்யதது.

இணையத்தில் முடிக்க வேண்டிய வேலைகள் ஒரு புறம் இருக்க முயற்சித்தும் முடியாமல் போனதால் அவன் மனதில் ஒரு கடுப்பு உருவாகி இருந்தது.

இதனால் அவனுடைய மற்ற வேலைகளில் கவனம் சிதற ஆரம்பித்து . தொடர்ச்சியாக பயன் பாட்டில் இருந்த ஒன்று பயன் பாடாமல் போனவுடன் அந்த சூழலை சமாளிக்க மனதில் ஏற்ப்பட்ட கடுப்புடன் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

எரிச்சல் முதலில் வந்தது. தன்னுடைய கோபத்தை மோடத்தின் மேல் காட்டுவதாக நினைத்து கொண்டு அவனுக்குள்ளே திட்டி கொண்டான். எதற்கும் மசிவதாக தெரியவில்லை அந்த மோடம்.

Tuesday, July 07, 2009

வரதட்சணைக்கு முற்றுப்புள்ளி

கேரளா மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் கிராமத்தில் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலாவனர்கள் முஸ்லீம்கள் . இந்த கிராமத்தில்வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் 30 வயதாகியும் திருமணமகாமல் இருப்பது கிராம பஞ்சாயத்து தலைவர் ஆர்யதன் சவுக்கத்துக்கு தெரிந்தது.

வரதட்சணை கொடு்க்க முடியாததால் 1300 அதிகமான பெண்கள் திருமணமாகாமல் இருப்பது தெரிந்தது. மேலும் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தே 40 சதவிகதம் அதிகமான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டது தெரிந்தது.

இந்த கொடுமையை முற்றிலும் ஒழிக்க தலைவர் ஒரு குழுவை அமைத்தார். வீடு வீடாக சென்று மக்களிடம் இந்த குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கபட்டதையும் எடுத்துரைத்து இனி வரதட்சணை வாங்கமாட்டோம் கொடுக்கவும் மாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்று கொண்டனர்.

வரதட்சணை கொடுமையை விளக்கும் தெரு கூத்துகள் திரைப்படங்கள் காட்டப்பட்டன. முதலில் பலனில்லை என்றாலும் 6 மாதத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது. வரதட்சணை கிராமத்திலிருந்து காணாமல் போய்விட்டது.

புகைப்பட தொகுப்பு





































Monday, July 06, 2009

அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை


அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை . அந்த வீட்டு தொழில் துணி வெளுத்தல். பெண்கள் நான்கு பேர் ஆண்கள்
இரண்டு. வயதான தந்தை தாய்.

இவளுக்கு கல்யாணம் நடந்தது . இவளுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று கணவன் திடீரென இறந்துவிட்டான் . இவளும்
பிறந்தகம் வந்தாள்.

இங்கு சூழல் ஆண் பிள்ளைகள் இருவரும் சிறியவர்களே. அப்பா சக்தி இருந்த வரையில் பிள்ளைகள் பெற்றுவிடடார். தொழிலுக்கு என கடை வைந்திருந்தார். அப்படியும் இப்படியுமாக குடும்பம் ஓடிவிடும்.

இவள் வந்தாள் கடையை தத்து எடுத்து கொண்டாள். தந்தைக்கு துணிகளை துவைக்கும் வேலையை மட்டும் கொடுத்து கடை வேலைகளை இவள் கவனித்து கொண்டாள்.

வீட்டு நிர்வாகம் கடை நிர்வாகம் கொடுக்கல் வாங்கல் என அத்துனையும் பார்த்தாள். கடும் உழைப்பு குடும்பத்தை நல்லபடியாக்கினாள். தனது தங்கைகளுக்கு திருமணம் செய்வித்தாள்.

கண்கெதிரான அவளுடைய கஷ்டங்கள் சந்தித்த அவலங்கள் எந்த மனிதனுடைய கஷ்டமும் அவளுடைய கஷ்டங்களுக்கு முன் சாதரணம் தான்.

இப்பொழுதும் அவள் பிள்ளைகளை வளர்த்து அந்த குடும்பத்துடைய அத்துனை நல்லது கெட்டதுகளை சமாளிக்கிறாள்.

அந்த குடும்பத்தில் அக்கா சொல்லிடிச்சின்னு அதற்கு மறு பேச்சு யாரும் பேச மாட்டார்கள். தன் கணவனை இழந்து நின்றாலும் முடங்கி விடாது தன்னால் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேற்றினாள். காக்கும் தெய்வமாய் இவள்.

Saturday, July 04, 2009

உங்களுக்கு என்ன காரணம்?

அவன் சம்பாதிக்க ஓடி கிட்டே இருப்பான். என்ன எல்லாருக்கும் ஒரே விதமா வாழ்க்கை அமையறது இல்ல அது போல இவனுக்கு அமைஞ்ச வாழ்க்க அந்த மாதிரி ஓடுவான் ஓடுவான் ஓடி கிட்டே இருக்கிறான்.

இன்னொருத்தர் இருக்கார் அவர் வாய் தொறந்து பேசுனாரு நீங்க காசு எடுத்துட வேண்டியதான் உங்க பாக்கெட்லேந்து.. அட ..ஏங்க இப்படின்னு கேட்டா..நீ வேற..
நான் அவசரத்துக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் கிட்ட காசு கேட்டேன் அவன் யாரோ மாதிரி பேசுறான்.

நடுத்தர குடும்பம் அந்த பையன் வயசுல ஓடி சம்பாதிக்கல எப்படியோ குடும்பத்துல அவனுக்கு கல்யாணத்த பண்ணிவக்க பொண்ணு போட்டு வந்த நகை ஆறு மாதம் ஜேரா
ஓடிச்சி அப்புறம் பாக்கணும் இவன் சம்பாதிக்கணும்
சம்பாதிக்கணும் எல்லோருரிடம் ஐடியா கேக்கிறான் என்ன செய்ய..

பெரிய குடும்பம் வருமானம் பத்தல வயசு ஆர்வம் ஆசை எல்லாம் இருக்கும் அத்தனையும் விட்டாதான் நாள காலை அடுப்பு எரியும். அவனுக்குள்ள வாய்ப்பு எங்கிருந்தாலும் ஓடுவான்.

அத வாங்கி கொடுடா ..நான் வாங்கி தர்றேன் நீ எவ்வளோ கமிசன் தர்ற சொல்லு ..பத்து தர்றேன்..பத்தாது ..ஏதாச்சும் சேத்து போட்டு கொடு முடிச்சிடுறேன். எனக்கு தேவை கமிசன் வேல கச்சிதமா முடியும். நான் சம்பாதிச்ச தான் நாலு பய மதிக்கிறான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம் ஓடி சம்பாதிக்க.. ஆமா உங்களுக்கு என்ன காரணம்?

Friday, July 03, 2009

நவீன 3-டி எக்ஸ்-ரே

ஜொ்மனியைச் சேர்ந்த ஹெம்ஹொட்ஸ் மருத்துவ ஆராய்ச்சி (Helmholtz Zentrum Munchen) நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளர்கள் உயிரினங்களின் உள் உறுப்புகளை படம் எடுக்கும் நவீன எக்ஸ்-ரே முறையை கண்டுபிடித்துள்ளனர். டாக்டர் வாசிலிஸ் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த முறை கண்டறியப்பட்டுள்ளது.

துணி முதலியவற்றிற்கு நிறமூட்டப் பயன்படுத்துவதைப் போன்ற வேதியியல் கலவையை (டை) உடலில் ஊசி போட்டு செலுத்திய பிறகு அப்பகுதியில் லேசர் கதிர்களை செலுத்தி உள் உறுப்புகளின் தெளிவான படங்களை எடுக்கும் வகையில் இந்த நவீன முறை அமைந்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படு்த்தும் நுண்ணோக்கிகள் திசுக்கள் பற்றிய ஆராய்ச்சித் துறையிலும் பெரும்புரட்சியை ஏற்படுத்தவிருக்கின்றன.

நினைக்கவில்லை நடந்துவிட்டது.

கடந்து விடுவார்கள் என்ற அவன் நினைப்பு தொடர்ச்சியாக ஒலிப்பான் ஒலித்து கொண்டே வந்த வண்டி
கொஞ்சம் கூட வேகம் குறையவில்லை .

சைக்கிள் ஓட்டி சென்ற பெண்மணிக்கு சாலையைக் கடக்க நேரம் போதவில்லை. சென்று விடுவார்கள் என்பது அவன் அனுமானிப்பு பொய்த்து போனது நினைக்கவில்லை நடந்துவிட்டது.

இருசக்கர வாகனம் சைக்கிள் மீது மோதியது பிள்ளையுடன் தரையில் விழுந்தாள் பெண்மணி ஏம்மா.. நான்தான் ஹாரன் அடிச்சிகிட்டே வாறேன் நீ பாட்டுக்கு வர்ற... என் தன் பக்க நியாத்தை சொல்லியவாறே தன்னுடைய வண்டியை நிமிர்த்தினான்.

பெண்மணி ஓடிப்போய் பிள்ளையை தூக்கினாள் மண்டை உடைந்து ரத்தம் வந்தது. காபி தூள் வாங்கி வாங்க என்று பக்கதில் உள்ளவர்களிடம் சொன்னாள். காபி தூள் வாங்க ஓடினார்கள்.

திருப்பமுன்னு தெரியுதுல்ல நீ மெதுவா வரவேண்டியதானே என்று வண்டி ஓட்டியவனை திட்டினார்கள் பொது ஆண்கள்.

வண்டியை ஸ்டார்ட் செய்ய முனைந்தான் . பொதுமக்களில் ஒருவர் அடிப்பட்ட பிள்ளையை டாக்டரிம் காண்பித்துவிட்டு போ என்று சொல்ல..

என்கிட்ட காசு இல்லீங்க .. என்றவாறு போக முனைந்தான். எலா நாங்க சொல்லிகிட்டே இருக்கோம் நீ பாட்டுக்கு போறேன் சொல்ற இன்னொருவர்.

நான் போவனுங்க விடுங்க..

யோவ் இவன் சொன்னா கேக்கமாட்டான் வண்டிய புடுங்கி வெச்சுறு போலீச கூப்பிடு என்று கூடிய ஆண்கள் பேச ..

இல்லீங்க ..நான் போறேன் என்று சொல்லியவாறே டாக்டரிம் அழைத்து சென்றான் பிள்ளையை..

Thursday, July 02, 2009

உன்னை ஒதுக்கி விட


உன்னை ஒதுக்கிவிட
துணிவில்லை
என்னில் நீ
நல் எண்ணமாய்
சில நேரம்
உன் உணர்வுகளாய்
பிரிந்து போய்
விலகி நிற்க
இரட்டை மாட்டு
வண்டியாய்
இன்பம் துன்பம்
எண்ண ஓட்டம்
வாழ்க்கை
முடிவு தெரியா
பாதையில்
வண்டியின் பயணம்
தான்
எது வரையில்..
உன்னை ஒதுக்கி விட
என்னவனே..

Wednesday, July 01, 2009

மனதை ஏதோ பண்ணிய புகைப்படம்




இணையத்தில் சுட்டது தான். இந்த படத்தை பார்த்தவுடன் இனம்புரியா மாறுதல் மனதில் ஏற்பட்டது உண்மை.

LinkWithin

Related Posts with Thumbnails