Thursday, October 29, 2009

பெண்-2- சித்தினி

பிடியானைப்போலும் என்று உவமிக்குமாறு நடக்கும் தளர்ந்த அசைந்த நடையும் பெண்மையின் பண்புகள் மிகுதியாக அமைந்திருக்கின்ற பண்பும் மென்கொடி போலத்தளர்ந்து ஓசிகின்ற அழகுமிக்க திருமேனியும் வலம்புரிச் சங்கு போன்று விளங்கும் கழுத்தும் எப்போதுமே நன்மை விளைவிக்க கூடியதான சொற்களை பேசும் இயல்பும் நடனம் இசை ஆகிய கலைகளில் ஈடுபாடும் உயர்ந்த இதழ்களும் உயரமோ குட்டையோ என்று சொல்ல இயலாதபடி நடுத்தரமாக விளங்கும் தோற்றமும் சுருக்கமாக உண்ணும் இயல்பும் இனிமையான சுவைப் பண்டங்களை விரும்பும் விருப்பமும் சித்திர வேலைப்பாடுகளில் நிறைந்த ஆடைகளை விரும்பும் தன்மையும் உடையவள்.

இது சித்தினி வகை.

Tuesday, October 27, 2009

பெண் -1- பத்மினி

பெண்களில் நான்கு வகை பத்மினி , சித்தினி , சங்கினி , அத்தினி என்று வகைப்படுத்தபட்டுள்ளனர்.

செண்பக மலரோ என்று சொல்லும்படியான சிவந்த மேனி வண்ணமும் பண்பட்ட சொற்களையே பேசும் இயல்பும் எப்போதும் பொய்மையே கலவாத வாய்மையும் பிறர் கண்பார்வையிலே வீழ்ந்தரியாத கானகத்து மானைப்போன்ற மிரண்ட சுபாவமும் உடைய மாதர்கள்.

அறிவழகு உடையவரான சான்றோரையும் வேதசாஸ்திர விற்பன்னர்களையும் பல பல தேவர்களையும் உள்ளத்து அன்புடன் பணிந்து போற்றும் பக்தியும் எள்ளுச் செடியிலே விளங்கும் புத்தம்புது மலர் போன்று விளங்கும் மூக்கினையும் நடைபழகும் பிள்ளைப்போல வெள்ளையன்னம் போன்று தளர்ந்தசையும் நடையும் வெண்மையான மெல்லிய ஆடைகளிலும் வெண்மையான மலர்களிலும் விருப்பம் தூயதும் இனிய சுவை நிறைந்ததுமான உணவினைச் சிறுகவே உண்ணும் இயல்பும் ஒளிரும் வாள் போன்ற ஒளி வீசும் நெற்றியுடையவள்.

இது பத்மினி வகை.

அவனின் நினைவுகளால் அவள் …




















சொன்னவன் சொல்லி சென்றவன் அவன் நினைவுகளை என்னோடு விட்டு சென்றவன். அவனின் நினைவுகளால் அவன் இல்லா நேரங்களை சமன் செய்ய தூரம் சென்றவனின் முகம் வாட்டி வதைக்க வாடிநின்றவளின் முகம் வேதனைகளை வெளிப்படுத்தியது.

அவனோடு உரையாட எதிர்பார்த்தவளின் பரிதவிப்பு ஒற்றைகால் கொக்காய் அவனின் வருகை நோக்கி என்னுடைய எதிர்பார்ப்பு.

வந்தவன் வரும்போதே கண்களால் பேச அர்த்தங்களை அகராதியில் தேடியப்படியே என்னிடம்அவனதுஉரையாடல் நேரங்களால் நிரம்பிபோன மனது.

நிரம்பியமனது உரையாட வார்த்தைகள் இல்லாது பிரிய எத்தனிக்க பிரிந்து போய் திரும்பவும் பேச எத்தனித்த என் மனது. அவனின் மனதும் .

தனிமையின் இருப்புகளில் ஒருவரோடு ஒருவர் மனதுகளில் உரையாடியப்படியே செயல்கள்பைத்தியம் .

அவனின் நினைவுகளால் நான் …

Friday, October 23, 2009

அவனுக்கு ஆள் இல்லாமல்

மனமலர்ச்சியை முகம் காட்டதவறியது. முகம் இறுக்கமடைந்து காணப்பட்டது. எந்த விதமான உணர்ச்சியும்பிரதிபலிக்காது ஓர் உயிர்ப்புக்கான இலக்கணம் இல்லாமல் இருந்தான்.

சிடுமூஞ்சி , அவன் பேச சிரிக்ககாசு கேட்பான்டா என்பார்கள். அவனுடைய மன இறுக்கத்துக்கு அவனுக்கு மட்டுமே தெரிந்த காரணமாக விசயங்கள் இருக்கவே செய்தது. இவர்கள் வாழ்க்கையில் நடந்தது அவனுடைய வாழ்க்கையில் நடக்காதது தான் காரணம். எல்லோர் போலவும் சிரிப்பான் அழுவான் கோபம் கொள்வான் அவனும் உயிர்ப்பு தான்.

அவனுடைய வாழ்க்கையில் நடந்தவைகள் சுற்றமும் உறவுகளும் அவனை நடத்திய விதம் ஏன் நமக்கு மட்டும் இப்படி ? என்ற கேள்வியே அவனை சிரிக்க விடாமல் செய்தது.

வழிநடத்த அவனுக்கு ஆள் இல்லாமல் போனதால் அவனுடைய அறிவுக்கு அவன் விசயங்களை எடுத்து கொண்டவிதம் ஒரு நூறு சதவீதம் உண்மையானதாகவே இருந்தது.

Sunday, October 18, 2009

“ முயற்சிகள் தோற்கலாம் முயற்சிக்கத் தவறலாமோ? ”


அன்றைய தினம் அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். விசயம் என்னவென்று விசாரிக்க அவனுக்கு முப்பதாயிரம் பணம் தேவை. திடீர் தேவைக்கு அணுகிய இடத்தில் தருகிறேன் என்று சொல்லி தரமுடியாமல் போய்விட்டது.

இவன் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றம் அடைந்தான். மனதில் சோர்வும் வந்தது. அடுத்த முயற்சியை

ஆர்வம் இல்லாமல் மேற்கொண்டான். அதுவும் தவறிபோக அடுத்த முயற்சி்க்கான செயலை செய்ய துணிவில்லாமல் இருந்தான்.

ஒரு நாள் காலை கோவிலுக்கு போயிருந்தான் அங்கு துண்டு வாசகம் அச்சடித்து ஒட்டியிருந்தார்கள். “ முயற்சிகள் தோற்கலாம் முயற்சிக்கத் தவறலாமோ? ” என்று இவனுக்குள் சிறிய மாறுதல்.

அந்த வாசகத்தை ஏற்றுகொண்டதாய் அவன் முகம் உணர்த்தியது.

Tuesday, October 13, 2009

இயல்பாய் மாற்றம்

















பார்த்த வரை

இருள்

கேட்ட சத்தமாய்

குயில் கூவல்

பூக்க தயாரான

மொட்டு

இருப்பிடம்

விட்டு அகலும்

உயிர்ப்புகள்

விலகிய இருள்

சூரிய வருகை

காந்திருந்த பூமி

இயக்கம் மாற்றம்

தோற்றம்அழிவாகி

அழிவு தோற்றமாக

இயல்பாய் மாற்றம்

பிரபஞ்சம்.





Monday, October 12, 2009

சமுதாயத்தின் கோரபிடிக்களுக்குள்

கண்முன் விரிதிருந்த இயற்கையின் நீண்ட பரப்பு மறையும் சூரியன் வயலின் மேற்பரப்பில் பறந்த நூற்றுகணக்கான தட்டான்கள் எதிர் எதிர் திசையில் தன் இருப்பிடம் திரும்பும் காக்கையும் கொக்கும் அங்கும் இங்குமாய் வெள்ளைமேகங்கள் வானத்தில் நகர என் மனது மட்டும் வாழ்க்கை நிகழ்வுகளின் பிடியில்சிக்கி வெளிவர மறுத்தது.

தட்டான்களின் சுதந்திரம் பறவைகளின் சுதந்திரம் என் மனதை சிறிது அசைக்க பார்வைகள் நிலை குத்தி மனது அப்படியே இருக்க இயற்கையோட ஒன்றினைந்தேன். கால அளவு தெரியாமிக சிறிய நேரம் இணைந்து வெளிவந்து நான் மனிதன் அது இயற்கை என்று ஆனேன்.

திரும்பவும் மனிதன் வளர்த்த சமுதாயத்தின் கோரபிடிக்களுக்குள் சிக்கி கொள்ள பயணமானேன்.

Saturday, October 10, 2009

தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்

ஈழத்தமிழர் நிலையை நேரில் கணடறிய தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம். அதுவும் அதிபர் ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கைக்கு பயணம்.

தமிழக எம்.பி.க்கள் குழு பயணத்தினால் துயரப்படும் இலங்கை தமிழர்களுக்கான தீர்வுஎன்ன கிடைத்துவிடும்.

இலங்கை தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தாத ஊடகங்கள் இல்லை எழுதாத பத்திரிக்கைகள் இல்லை.

அரசாங்க ரீதியான இந்த தமிழக எம்.பி.க்கள் குழு என்ன செய்து விட முடியும்.

மூடியிருந்த கண்களை மேலும் கருப்பு துணியை கட்டி தன்னுடைய இன துஷ்பிரயோகங்களை காணவிடாதபடி தடுக்கதான் தமிழக எம்.பி.க்கள் குழுவை ராஜபக்சே அழைத்துள்ளார் போலும்.

அனுப்பிய முதல்வருக்கு வெளிச்சம் அழைத்த ராஜபக்சேவுக்கு வெளிச்சம்.

Thursday, October 08, 2009

குடும்பம் சுமப்பவன்




















குடும்பம்

சுமப்பவனுக்கு

கோபம் கிடையாது

குடும்பம்

சுமப்பவனுக்கு

உணர்வுகள் கிடையாது

குடும்பம்

சுமப்பவனுக்கு

ஆசைகள் கிடையாது

குடும்பம் சுமப்பவனுக்கு

குடும்பமே கிடையாது

காசு இல்லா

நடுத்தர குடும்பம்

சுமப்பவனுக்கு..

Tuesday, October 06, 2009

ஆளக்கொரு பக்கம்



மிகுந்த சிரமமத்திற்கு இடையே குடும்பத்தை வழி நடத்தினான். ஆகா..ஓஹே..என்று இல்லாவிட்டாலும் பிற மனிதர்கள் குறை சொல்லாத அளவிற்கு குடும்ப நிர்வாகம் செய்தான்.

ஆளக்கொரு பக்கம் வசை பாடவே செய்தார்கள் இவன்பொறுத்துகொள்வான். ஆனால் வந்தவள் உள்ளுக்குள் கோபபட்டாள் இரவானதும் இவர்கள் திட்டினார்கள் உங்களை எப்படி திட்டலாம் என்று கேட்க அவன் படும் சிரமங்கள் அவனுக்கு தெரியும். அதனாலயே இவனுக்கு உள்ளுக்குள் கோபம் கிளம்பும்.

மனைவி மீது எரிந்து விழுவான் ஆமா..நான் எத சொல்ல வந்தாலும் ஏன் என்னகிட்ட பாய்றீங்க..எனக்கு நேரா உங்கள சொல்லறது பொறுத்து கொள்ள முடியல அதனால தான் உங்ககிட்ட சொல்றேன்.

நீ சொல்வது சரிதான் அந்தமாதிரி சொல்லாத புள்ள. நீ சொல்ல சொல்ல அவங்க மேல கோபதான் அதிகம் வரும். குடும்ப உறவுல இதெல்லாம் சகஜம் என்பான். நீ ஊமையா இருந்துக்க வேண்டியது தான் என்று அவள் வாயை மூடினான்.

Friday, October 02, 2009

படைத்தவனா… ? படைப்புகளா…?


படைப்பவன் யாராயிருந்தால் என்ன? படைப்புகள் எதுவாயிருந்தால் என்ன? சராசரி மனிதன் உருவாக்கிய படைப்புகளாகட்டும் அல்லது கடவுள் ஆகட்டும் (இது அவர் அவர்களின் நிலைப்பாட்டுக்குட்பட்டது) வெளிவரும் அல்லது உருவாக்கப்படும் படைப்புகளுக்கு உண்டான மரியாதை என்பது அதை போற்றி பாதுகாக்கும்பொழுதேபடைத்தவனை நினைக்கிறோம்.

எடுத்துகாட்டாக மகாகவியின் படைப்புகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால்தான் மகாகவி பாரதி இன்னமும் நாம் நினைவுப்படுத்தி கொள்கிறோம்.

அதுபோல் கடவுள் படைத்த படைப்பு எதுவாக இருந்தாலும் அதன் விதிகளுக்குட்பட்டு அதை பாதுகாக்கும்பொழுதே கடவுளை வணங்குவதற்குரிய தகுதியை நாம் பெறுகிறோம்.

படைத்தவனா… ? படைப்புகளா…?

அன்பிலும் தோற்கிறேன்




















அன்பிலும் தோற்கிறேன்

யாரிடமும் நெருங்காது

இருக்க..

நெருங்கியதால் நெருங்க

எதிர்பார்ப்பு என்பது

அன்பு

உண்மையான அன்பாய்

நான் இருந்தேனா காலம்

சொல்லும்

அன்பு கிடைத்ததாய்

நான் உணர என்னில்

பிரதிபலிப்பு

மிக உண்மையாய்

அன்பிலும் தோற்கிறேன்

என் காதலனே…

Thursday, October 01, 2009

“படைத்தவனை வணங்கு படைப்புகளை வணங்காதே….”


“படைத்தவனை வணங்கு படைப்புகளை வணங்காதே….” படித்த வாசகம். இது எந்தளவிற்கு உண்மை மிகவும் முரணான வாக்கியமாக தென்பட்டது.

படைப்புகளை வணங்கதாவர்கள் படைத்தவனை வணங்க முடியுமா. படைப்புகளின் முக்கியதுவம் உணர்ந்து போற்றுபவர்கள் படைத்தவர்களை வணங்க முடியும் அவர்களின் படைப்புகளை பாதுகாக்கும் தகுதியும் அப்பொழுது தான் உருவாகும்.

படைப்புகளின்அவசியத்தையும் முக்கியதுவத்தையும் உணராது படைப்பவர்களை மட்டுமே பார்ப்பவர்களால் அந்தநேரம் அவர்களை பாராட்டலாம் எந்த காலமும் அவர்களின் படைப்புகளை பாதுகாப்பவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.

இந்த வாக்கியத்தையே “ படைப்புகளை ஆராய்ந்து அறி படைத்தவர்களை நினை ..” மாற்றி அமைத்து கொள்ளலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails