Sunday, November 29, 2009

உன்னோடு என் கோபம்





















உன்னோடு கோபம் கொண்ட நாள்முதலாய் என்னுடைய எண்ணங்களை ஆராய்கிறேன். செயல்களில் தடங்கல்கள் இல்லை. ஆனாலும் மகிழ்ச்சியாகசிரிக்க முடியாது தடுக்கும் உனது எண்ணங்கள்.

உனைவிட்டு விலகி நிற்க முற்ப்பட்டு உன்னுடைய நினைவுகளினால் உண்டான தாக்கம் களையமுடியாது தவிப்பது உண்மை.

உனது செயல்கள் உனது விருப்படியே அமைய வேண்டும் என்பதற்காக உனது வாதம் அது தவறாக இருந்தும் அதை முடிக்க வேண்டும் என்று நினைக்கும் உன் மனதை என்னவென்று சொல்வது.

நான் நானாய் இருக்க நல்ல உறவு அவசியம். சீர் கெட்ட உறவுகளில் எங்கே அமைதி?

நீயாய் புரிந்து கொள்ளும் வரை உன்னோடு என் கோபம் நிரந்தரமானது.

Saturday, November 28, 2009

உடலின் உள்ளே...

Tongue with taste bud

Human egg with coronal cells

Villi of small intestine


Blood clot

Lung cancer cells

Wednesday, November 25, 2009

பொருள் இல்லா பொருள் தேடுபவர்கள்



















நன்மையில்

லாப நோக்கு

பொருள் இல்லா

பொருள் தேடுபவர்கள்

சேர்த்த பொருள்

வியாபார தந்திரமாய்

வார்த்தைகள்

வறுமை போயிடும்

வளமை வந்திடும்

போட்ட பொருள்

அனுபவம் இல்லா

அனுபவத்தில் உள்ளவர்கள்

சொன்ன வார்த்தைகள்

நம்பிக்கை

நம்பிய மனது

எண்ணிய எண்ணம்

பொருள் போனது

வளமை போனது

வறுமை வந்தது

நம்பிக்கையே

வாழ்வாய்..

நம்பியும் நம்பாமலும்


பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது. அறுவை செய்து குழந்தை பிரசவிக்கபட்டது. பிறந்த குழந்தை பசி தாய்பாலுக்கு அழுதது.

தாய்க்கு தெரியவில்லை. வீறி்ட்டு அழுதப்படியே இருந்தது சிசு. சில மணி நேரங்கள் ஆனது எதற்காக அழுதது என்று கண்டுபிடிக்க அதற்குள் நிலைமை அபாயத்தை தொட்டிருந்தது.

தொடர்ந்து அழுததால் பிள்ளை தொண்டை கட்டி போயிருந்தது. சுவாசம் சரியி்ல்லாமல் போய் காலையில் பிறந்த குழந்தை மாலை இறந்தது.

உடனே தாய்பால் கொடுக்க வேண்டியது தானே என்று தாயிடம் கேட்டால் டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை அதனால் கொடுக்கவி்ல்லை என்று காரணம் சொல்லப்பட்டது.

ஆனால் தன்னுடைய அழகு கெட்டு போய்விட கூடாது என்பதற்காக அவள் தாய்பால் கொடுக்கவி்ல்லை என்று வெளியில் பேசப்பட்ட காரணமாக இருந்தது.

சிசு இறந்தது உண்மை ஆனால் காரணம்….

Friday, November 20, 2009

புது மாப்பிள்ளை மிடுக்கு

அவர் போட்டிருந்த வெள்ளைசட்டையின் மேல் பட்டன்கள் நெஞ்சு தெரியும் வரை அவிழ்த்து விடப்பட்டிருந்தது.

இதுவரை அவர் அணிந்த சட்டைகளின் மேல் பட்டன்களை அவிழ்த்து விட்டதில்லை. அன்றைக்கு அவரினுடைய அந்த செய்கை மிகவும் விகாரமாய் பட்டது.

அவரை தினமும் பார்த்த கண்களுக்கு இன்றைக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறார் தெரியவில்லை? என்ற கேள்வியினை தடுக்க முடியவில்லை.

அதற்கு பிறகு வந்த நாட்களிலும் மேல் பட்டன்களை அவிழ்த்து விடாது சட்டை அணியவில்லை. பேச்சினுடைய தொனியும் மாறியது.

என்னடா இவருக்குவந்த வாழ்வு...கல்யாணம் பண்ணியவுடன் ஆள் மாறிவி்ட்டாரே ...

நீ வேற புது வண்டி கழுத்துல மின்னுது பாத்தியா நாலு பவுன் செயின் அதான் காரணம் அவரு மாற என்று நண்பன் சொல்லியது காதில் ஒலித்தது.

Sunday, November 15, 2009

இல்லாமல் இருந்தபொழுது


கஷ்டபட்ட குடும்பம் கால சுழற்சியில் மேல் எழுந்தது. மற்ற குடும்பங்களை தாண்டி முன்னோக்கி சென்றது.

மனிதர்களின் குணமும் மாறத் தொடங்கியது. மற்றவர்களுக்கு உண்டான மரியாதை உறவுகளுக்கான மதிப்பு குறையத் தொடங்க முடிந்தவர்கள் தாங்கி கொண்டார்கள். முடியாதவர்கள் உள்ளுக்குள் குமைந்தார்கள்.

அவர்களின் காலம் இருப்பவர்கள் அள்ளி முடியலாம் அள்ளி முடிந்து கொண்டார்கள்.

இல்லாது இருப்பவர்களை பார்த்து எள்ளினார்கள்.

இது அவர்களின் காலம்.

இல்லாமல் இருந்தபொழுது இருப்பவர்களால் இவர்களும் எள்ளி நகையாடப்பட்டவர்கள் தான்…….

Saturday, November 14, 2009

எனை கடந்து















பின்னோக்கி

இழுக்கபட்ட மனது

மழை பெய்த

மாலை

வீடு திரும்பும்

பள்ளி சிறுவர்கள்

மழையில் நனைந்தப்படி

வரும் திசை

நோக்கிய கண்கள்

நான் நிற்கையில்

வாடிக்கையாய்

எனை கடந்து

செல்பவர்களின் நினைவு

வளர்ச்சியை நோக்கிய

மாற்றங்களில்

வேறு இடம் நகர்ந்து

காணாமல் போனவர்கள்

நான் நிற்கிறேன்

புதியவர்கள்

எனை கடந்து செல்கிறார்கள்.

Sunday, November 08, 2009

பெண்-4- அத்தினி


கால்களை உதறி உதறி நடக்கின்ற நடையினையும் மேலுயர்ந்து வளைந்து தடித்த நீண்ட விரல்கள் பொருந்தியுள்ள பாதங்களையும் நடுக்கம் அமைந்த பேச்சினையும் குட்டையான கழுத்தினையும் அடர்த்தியற்று சிதறிய செம்பட்டை மயிரோடு தோன்றும் கூந்தலையும் உடையவள் தீமைபயக்கின்ற இயல்புகளையுடையதான தொழில்களையே எப்போதும் செய்கின்ற வழக்கமும் நாக்குக்கு எரிப்பும் துவர்ப்பும் பெரிதும் விருப்பந்தருவதாயிருக்கின்ற தன்மையும் அவள் உண்பதைகாணும் பிறபாவையர் எல்லாம் அச்சங்கொள்ளுமாறு உண்ணும் இயல்பும் உடையவள். நாணத்தை அறவே கைவிட்ட இயல்பும் உடையவள்.

இது அத்தினி வகை.

Wednesday, November 04, 2009

இருந்தும் நிகழ்வுகள் இல்லாமல்




















சகமனிதன்

ஒருவனின் திருமணம்

இரண்டு மூன்று

நாட்களாய்

மீதம் இருக்கையில்

திருமணத்திற்கான

இறுதி வேலைகள்

ஆளக்கொரு பக்கமாய்

விரைவாய் வந்த

செய்தி

திருமண பெண்

ஓடினாள்

தன் காதலனுடன்

வாழ்த்துகள்

வாங்க கொடுக்கபட்ட

அழைப்பிதழ்கள்

வெறும் காகிதமாய்

நிகழ்ச்சிகள்

இருந்தும் நிகழ்வுகள்

இல்லாமல்

அவரவர்களின் மனவேதனை

சுகமாய் நினைக்க

சோகம் தன்னை

வெளிப்படுத்திய விளைவாய்..

பெண்-3- சங்கினி


உயரமும் பருமனும் என்றில்லாமல் நடத்தரமாக விளங்குகின்ற அழகுடன் எல்லா உறுப்புகளும் சம நிலையிலே அமைந்து கவர்ச்சி மிகுந்த உடலமைப்பும் நடந்து போகின்ற போது பூமியிலே பதிக்கின்ற காலடிதடங்கள் அகன்று பதியுமாறு செல்லும் நடையும் சிறப்பு மிகுந்த நரம்புகள் புடைத்த மேனியிலே தோன்றுகிற வளமான கட்டுடல் அமைப்பும் கொண்டவள். சமைத்த உணவுகளைக் கூடுதல் குறைதல் இன்றி சம்மாக அருந்தும் தன்மையும் அமைந்தவள்.

சிவந்த மலர்களால் தொடுக்கபட்ட மலர்களையும் சிவந்த நிறம் பொருந்திய ஆடைகளையும்தன் மனத்திலே ஆர்வமுடன் விரும்புகின்ற தன்மையும் கோபப்பட வேண்டாததற்கெல்லாம் அடிக்கடி கோபப்படும் இயல்பும் பொய்ம்மையும் கோட் சொல்லுகையும் கொருந்தியிருக்கின்ற நாவும் உடையவள். வஞ்சகம் பொருந்திய மனத்தினையும் நாளுக்கு நாள் பித்தம் வளர்த்து பெருகும் உடலும் வெஞ்சினகொண்ட கழுதையினைப்போல உரத்துக் கொடூரமாக கத்துகின்ற கடுஞ்சொல்லும் அச்சம் என்பதே சற்றுமில்லாது உள்ளமும் சமூக மரபுகளை மதியாது நடக்கும் தன்மையும் உடையவள்.

இது சங்கினிவகை.

LinkWithin

Related Posts with Thumbnails