Monday, January 04, 2010

மனிதரை நேசியுங்கள் நெருங்காதீர்கள்.



அதைச் சாதிக்கிறேன் இதை சாதிக்கிறேன் என்று போவதும் நான் தான் செய்யவேண்டும் என்று பொறுப்பைத் தலையில் சுமக்க நினைப்பதும் பிறர்கடமைகளை செய்யபுகுவதும் நிம்மதியை குழிதோண்டி புதைத்துவிடும்.

நன்றிகாட்டலாம் நன்றியை பிறர் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

கடமையை செய்து விடுங்கள் பிறர் கடமையை உணர்த்த போகதீர்கள். துடுக்குதனமும் திருட்டுதனமுமாய் சில சுகங்கள் அடைவதும் சக்தியாகவும் சமார்த்தியமாகவும் எண்ணி சிலரால் செய்யப்படும் அப்புறம் அதன் விளைவாய் அவர்கள் அடைவதை நம்மால் காணமுடியாது.அதனால் அவை நம்மையும் அப்படி நடக்க தூண்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

வெல்லத்தின் மீது ஈ எப்போதும் உண்டு

இன்பத்தின் பின் துன்பம் கட்டாயம் உண்டு.

நாளைக்கு நடப்பதை நினைத்து இன்றே குழம்பாதீர்கள் நமக்கென தேடும் நன்மைக்காக பிறரை கெடுக்காதீர்கள்.

இழப்பே கூடாது என்று எண்ணாதீர்கள் இழப்பு வந்தால் அதையே நினைத்து கொண்டிருக்காதீர்கள்.

சூழ்நிலைகேற்ப வளைந்து கொடுத்து மிக கவனமாக இருங்கள் சந்தேகத்திலேயே இல்லாமல் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுங்கள்.

மனிதரை நேசியுங்கள் நெருங்காதீர்கள்.

---ஸ்வாமி----

1 comment:

Chittoor Murugesan said...

"எட்ட இருந்தால் நிகள உறவு கிட்ட வந்தால் முட்டப்பகை என்ற பழமொழியை அறிந்து எழுதினீர்களோ இல்லை கோ இன்சிடென்ஸோ தெரியலை ஹ்யூமன் ரிலேஷன்ஸ்க்கு சூப்பர் டிப்

LinkWithin

Related Posts with Thumbnails