Tuesday, February 16, 2010

தேநீர் வேளை

கண்விழித்து சிறிது நாழியில் டீக்கடை நோக்கி ஓடும் எனது மிதிவண்டியில் எனது பயணம் தெரிந்த முகங்களின் தலையாட்டலுக்கு புன்னகையுடன் பதிலுக்கு தலையாட்டியப்படியே தொடரும் பயணம் முடிவுறு விதமாய் வழக்கமாக டீக்குடிக்கும் டீக்கடை.

அன்று குளிர் அதிகமாய் இருக்க டீ வாளியை தூக்கிகொண்டு வரும் சிறுவனின் அசைவுகள் என்னவோ முன் வீசி பின் இறங்க பின் வீசி முன் இறங்க ஒரு அமைப்புக்குள் உட்பட்டதாய் இருந்தது.

சிவப்பு குல்லாய் உடம்பு மறைக்க ஓர் துணியும் தன்னுடைய மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பெரியவர்.

முல்லெ..கனகாம்பரம்…மல்லி …யம்மோவ் பூ…

காலை வெயில் கதகதப்பில் நடுரோட்டில் படுத்திருந்தஆடு. துணைக்கு அதன் பங்காளிகள் நின்றப்படி குளிர்காய்ந்து கொண்டிருக்க மணல் ஏற்றி வந்த வண்டிகாரன் சத்தம் போட்டதும் எழுந்து ஓடவேண்டிய நிர்பந்தம்.

பேருந்தைப் பிடிக்க வேகமாக நடைப்போட்ட இளம்பெண்ணுடைய விழிகளின் அலைதல் தான் யாரை பார்க்கிறோம் தன்னை யார் பார்க்கிறார்கள் என்றப்படியே நடந்தாள்.

டேய் ..சார் வந்துருவாருடா..வாடா மேல போயிருவோம்.. நண்பனை கூப்பிட்டப்படியே விரைந்து மாடி படியேறிய சிறுவன்.

திரும்பி பார்க்க பத்தாம் வகுப்பு தேர்வெழுத அணுகவும் வீனஸ் கல்வி நிலையம் என்ற விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அய்யா வணக்கம் என்று குரல்வந்த திசையில் திரும்ப. வாங்கண்ணா..வாங்க..எண்ணா டீ..

இல்ல வேணாம்..இப்பதான்..

சரிண்ண... நான் கிளம்புறேன்.

சரி வாங்கய்யா..

1 comment:

Ashok D said...

அட! கவித மாதிரியே எழுதிறீங்க :)

LinkWithin

Related Posts with Thumbnails