Wednesday, February 17, 2010

அவன் உலகு





















அரை நிர்வாணம் தான் அவன் அரைக்கால் சட்டை கிடையாது. ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று பிளாஸ்டிக் சேர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஒன்றரை வயது இருக்கும் அந்த சிறுவனுக்கு விளையாட தேவை ஒரு பிளாஸ்டிக் சேர் மட்டும் தான். அடுக்கியிருந்த மூன்றில் ஒன்றை எடுப்பதற்கு அதனுடன் போராட்டம் நடத்தி கொண்டிருந்தான்.

நகர்த்தினான் மூன்றும் சேர்ந்து நகர்ந்தது. அவனுக்கு எட்டும் தூரம் ஒரு சேரை தூக்கினான் சிறிது மேல் எழும்பியது. அதற்கு மேல் தூக்க உயரம் இடையூறாக இருக்க அப்படியே திரும்பவும் வைத்தான்.

சிறிதுநேரம் மௌனமாய் நின்றான். பலம் கொண்டு கிழே தள்ளினான். தள்ளப்பட்ட சேரில் ஒன்றை உருவினான்.

அதன் பிறகு அந்த சேர் அவனுடைய வாகனமாக மாறியது. தள்ளி கொண்டே அவன் வீட்டு வாசலிருந்து குறிப்பிட்ட தூரம் போய் திரும்புவதுமாக இருந்தான்.

தள்ளி கொண்டே சென்றவன் திடீரென நின்றான் . சேரை அப்படியே விட்டு விட்டு வீட்டு வாசலுக்கு ஓட்டம் பிடித்தான். வேகத்துடன் அவனது சேரை ஆட்டோ ஒன்று கடந்து சென்றது.

எனக்கு ஆட்டோ அவன் எப்படி அதனை உருவகப்படுத்தி வைத்திருந்தான் என்று தெரியவில்லை. சைக்கிள் இரு சக்கர வாகனங்களை அவன் மதிக்கவேயில்லை. அதைப்பற்றி அவன் தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். ஆனாலும் அதைப்பற்றிய கவலை இல்லாமல் அவனுடைய விளையாட்டு தொடர்ந்தபடி இருக்க அவனுடைய உலகமும் சமுதாயத்தின் போக்கும் வெவ்வேறாக இருந்தது.

அவன் உலகில் அவன்தான் எல்லாமுமாக இருந்தான்.

இப்பொழுது சிறுவன் முழுநிர்வாணமாகி இருந்தான். சேர் அவனிடமிருந்து காணாமல் போயிருந்தது. வெற்றுடம்புடன் ஓடுவதும் திரும்பவும் ஒடியாரதுமாக இருந்தான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails