Sunday, March 21, 2010

இலக்குகள் இல்லா நடைபயணம்
















என்னை விட்டு என்னில் ஆழம்பார்க்க தொடங்கினேன். எல்லாம் பூச்சாண்டி வேலை தான். எந்த ஒன்றையும் முழுமை அடையாமல் முழுமை அடைந்துவிட்டதாக நினைவுகளால் நிரம்பி மீண்டும் ஓர் முறை திரும்பி பார்க்க அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது ஒன்றும் இல்லை.

என்னதான் அறிந்தோம் என்பதை விடவும் நினைவுகளை நெஞ்சில் நிரப்பி கற்பனை விமானத்தில் ஒலி வேகத்தில் பயணம் செய்து என்னையே நான் ஏமாற்றி கொண்டதுதான் ஹைலைட்.

ஏதோ ஒன்றை நான் அறிந்ததாக நினைத்த கொண்டிருக்கும் வேளையில் நம்மைவிடவும் நன்றாக உணர்ந்தவர்கள் அதிகம் என்பதையும் உணர்ந்தேன். எல்லா விசயங்களிலும் நடந்தது இதுதான்.

என்னுள் அறிவு அடக்கமாய் முட்டாள்தனம் முன்னேறிகொண்டே இருக்க விளைவு வித்தியாசமான மனப்போக்குகள் விபரீதமான எண்ணங்கள் தேவையில்லா ஆவல்கள் எதை விடுவது? எதை விரும்புவது?

இலக்குகள் இல்லா நடைபயணத்தில் ஒவ்வொன்றும் ஆச்சரியமாய் வாழ்வும் அர்த்தமுள்ளதாய் தெரிவதாக ஓர் பாவனை.

பயணங்கள் தொடர்ந்தப்படியே இருக்க இலக்குகள் தான் எங்கே?

1 comment:

Ragavachari B said...

நீங்க சொல்றது ரொம்ப சரி.
நானும் நமக்கு ஒரு விஷயம் நல்லா தெரியம்னு நெனைச்சிகிட்டா அது தப்பாத்தான் முடியுது. நமக்கு எல்லாம் தெரியம்னு நினைக்கிறது ரொம்ப தப்பு.
இது எல்லாம் தெரிஞ்சாலும் மறுபடியும் மறுபடியும் நம்ம அறிவு பழையபடித்தான் யோசிக்குது, என்ன செய்ய...

LinkWithin

Related Posts with Thumbnails