Sunday, March 28, 2010

பங்குனி உத்திர திருவிழா




















ஊரின் ஒதுக்குபுறமாய் உள்ள அந்த முருகன்கோவிலில்

பங்குனி உத்திர திருவிழா நாளைக்கு நடக்கவிருக்கிறது.

ராட்டினகாரர்கள் ஊரினுடைய சிறுவர் ,சிறுமியர்களின் காசை காலிபண்ணி கொண்டிருந்தார்கள்.

கடைவிரிப்பவர்கள் தனக்கான இடத்தைகம்புகள் கட்டி பதிவு செய்தார்கள்.வளையல் விற்பனை வண்டியும் காரம் இனிப்பும் விற்பனைவண்டியும் தன்வருகையை பதிவு செய்தது.

திருவிழா பிரசித்தம் இனிப்பு கலர் பானமும் கலர் பாயசமும் விற்பதற்கான மேசை அதற்குரிய இடத்தில் தன் இருப்பை பதிவுசெய்ய திருவிழாவின் காலையை எதிர்பார்த்து கொண்டிருந்தது.

நான்கு ஆண்கள் ஐந்து பெண்கள் நான்கு சிறுவர்கள் என நறிகுறவர் பட்டாளம் வந்திறங்கியது. வந்தவுடன் தன் உடைமைகளை இறக்கி வைத்து குழுவாய் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.

திறந்தவெளி சமையல் முடிந்தவுடன் வட்டமாய் உட்கார்ந்து ஆடு-புலி ஆட்டம் தொடங்கியது.

ஏ...அஞ்சு கேளு....

தாயக்கட்டை உருட்டியவர் அஞ்சு...அஞ்சு... என சொல்லியவாறு கட்டைகளை தரையில் உருட்ட எல்லோருடைய பார்வையும் கட்டைகளின் மேல்

நான்கு என்று சொல்ல....

அய்யோ..

ஒரு சேர குரல் உயர்ந்து அந்த இடத்தை கலகலப்பாக்கி கொண்டிருக்க சமுதாயத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காக வெள்ளையும் சொல்லையும் அணிந்திருந்தவர்கள் இவர்களின் சந்தோசத்தை பார்த்து பொறமைபட..

வாழ்க்கையின்னா இப்படிதான் இருக்கனும்என அங்கலாயத்து கொண்டார்கள்.

பல்வேறு மனிதர்கள் பல்வேறுவிதமான சிந்தனைகள் என

அந்தஇடம் அல்லகோலப்பட திருவிழாவின் நாயகன் முருகனுக்கு என்ன சிந்தனையோ தெரியவில்லை அவர்மட்டும் மௌனமாய் அமர்ந்திருந்தார்.

கோவிலின் அய்யர் மட்டும் அவ்வப்போது அவருடைய இடத்திற்கு போய்வந்தார்.

3 comments:

துபாய் ராஜா said...

நாளைக்கு பங்குனி உத்திரம்ல்லா...

கையேடு said...

ம்ம்.. எத்தனை வருசம் ஆயிடுச்சு திருவிழா பாத்து..
கொண்டாடுங்கள். :)

Ragavachari B said...

பழைய நினைவுகளை அசைபோடவைத்த பதிவு.

LinkWithin

Related Posts with Thumbnails