Saturday, April 03, 2010

நேர்மை அங்காடி

தமிழ்நாடு  திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாடு மேல்நிலைபள்ளியின் தலைமைஆசிரியர் திரு.இரா.மணிவண்ணன் அவர்க ள் ஓர் புதுமுயற்சியை மேற்கொண்டார்.

மாணவர்களுக்கு தேவையான  எழுதுபொருட்கள்மற்றும் தின்பண்டங்கள்  சகிதம் விற்பனைக்குபள்ளியின் ஓர் அறை  ஒதுக்கப்பட்டு நேர்மை அங்காடி என்று பெயர் வைக்கபட்டது.

விற்பனை செய்பவர் யாரும் அங்கே கிடையாது. பொருட்கள் இருக்கும் காசு அடங்கிய கல்லாப்பெட்டி ஒன்று இதுதான் நேர்மை அங்காடி.

மாணவர்கள் தங்களுக்கு தேவையான தின்பண்டங்கள் அல்லது எழுதுபொருளோ  தாங்களே எடுத்துகொண்டு அதற்குரிய தொகையினை  கல்லாப்பெட்டியில் போட்டுவிடவேண்டியது தான்.

அன்றைக்கு நடந்த காலைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது.   முதல்நாள்மிகநேர்மையாக விற்பனைசெய்பவர் யாரும் இல்லாமல் ரூபாய் இருநூற்றி தொன்னூறுக்கு வியாபாரம் ஆனது. இரண்டாவது நாள் இருநூற்றி எண்பது என விற்பனை படு ஜோர்.

மூன்றாவதுநாள்  முன்னூறுக்கு பொருட்கள் விற்பனை ஆகியிருந்தது. கல்லாப்பெட்டியில் இருந்த காசு ரூபாய் எண்பது மட்டுமே தலைமையாசிரியர் விடாது நான்காவது நாளும் முயற்சித்துபார்க்க  மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்  விற்பனை ஆகியிருந்த பொருட்கள் படு அதிகம் ஆனால் கல்லாப்பெட்டியில் இருப்பு ரூபாய்  ஐம்பது தான்.

ஐந்தாவது நாள் விற்பனை செய்யபொருட்கள் இல்லாததால் நேர்மை அங்காடி நிறுத்தபட்டு தற்காலிமாக மூடப்பட்டது.

தலைமையாசிரியர் அவர்கள் வெப் கேமரா அமைத்து நேர்மை அங்காடி தொடச்சியாக நடத்த  நினைத்திருக்கிறார் போலும் அவருடைய முயற்சிகளுக்கு வாழ்த்துகள் கூறி மாணவர்களுடைய  நேர்மைக்கு என்ன சொல்ல யோசியுங்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails