Wednesday, April 14, 2010

பிடி அரிசி அம்மன்


ஆடி மாதம் வரும் ஆடி பெருக்கின்போது சாமி கும்பிட அம்மன் தேவை. வாய்க்கால் ஓரம் அம்மன் கோவில் சிறிதாக கட்டப்பட்டது.

வழக்கமாக விளக்கேற்றுவார்கள் அம்மனுக்கு வேண்டிகொண்டவர்கள் பூசை செய்வார்கள். எல்லோருடைய நிதி உதவியும் பெற்று அம்மன் கோவில் பெரிதாக்கப்பட்டது.

பெரிதாக்கபட்டதால்  அதனுடைய நிர்வாகசெலவும் அதிகரிக்க வருமானம் பெருக்கவேண்டுமே என்ன செய்ய.. அதனை நிர்வாகம் செய்தவர் தன்னுடைய மூளையை கசக்கி  அம்மனுக்கு பெயர்மாற்றம் செய்தார்.

மகமாயி “பிடி அரிசி அம்மன் ”  ஆனது.  பிடி அரிசி அம்மனுக்கு என்று தனியாக ஒரு கதை உருவாக்கப்பட்டது.

ஆயிரகணக்கானசுற்றுபுற கிராமமக்கள்  கூடியிருந்த பங்குனி திருவிழாவில் அந்தகோவிலை நிர்வாகம் செய்தவரால் கதை  அளந்துவிடப்பட்டது.

எங்கிருந்தோ ஒரு பெண் இந்த மகமாயி கோவிலை விசாரித்து  வந்து வேண்டிகொண்டது  நிறைவேறியதாம். பிடி அரிசியை வைத்து துணியில் முடிந்து வேண்டியதால் வேண்டியது நடந்ததாம்.

அதனால் வேண்டும் வரம் பலிக்க பிடி அரிசி அம்மன் ஆலயத்திற்கு வந்து  பிடி அரிசி யை  அதற்குரிய தொகை கொடுத்து பெற்று செல்லவும் என்று ஒலிப்பெருக்கியில்  அறிவித்து கொண்டே இருந்தார்.

மக்களுக்கு சொல்லவா வேண்டும் அந்த ஏரியாவிற்கு இது புது டிரெண்ட். விற்பனை ஜோர்.

வரும் காலங்களில் இந்தகதைவரலாறு ஆகலாம்  இந்து சமயத்தின் மிகப்பெரிய சாபகேடு உண்மையல்லாதவைகள் உண்மையென கிளம்புவது தான்.

முழுக்க முழுக்க பக்தி என்பது ஒருவிதமான மனத்தின் போக்கு  ,போக்கின் முடிவு தன்னையறிதல்  .

அறிந்து கொள்ளும்வரையில் தெருவிற்கு ஒரு கோவில்   அந்த கோவில் சொல்லும் ஓர் பொய் கதை  என்பது தொடர் நிகழ்வு.

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல கருத்துக்கள்

அருமை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts with Thumbnails