Friday, May 07, 2010

நீங்க சாமிய பாத்துருகீங்களா.

ஓரே இடத்தில் உழன்று கொண்டிருந்ததால் மனதுக்கு சிறிது மாற்றம் தேவைப்பட்டது. நண்பர்களுடன் முடிவு செய்து எங்கள் ஊர் பக்கத்து ஊரில் இருக்கும்  பெரியவர் ஒருவரின் ஜீவசமாதிக்கு சென்றுவருவோம் என்று முடிவு செய்து அந்த ஊருக்கு சென்றோம்.          

முதல்தடவை சென்றபோது அந்தஇடத்தின் அமைதி  மிகுந்த மனநிம்மதியை கொடுக்க அடுத்த பத்துநாட்கள்  கழித்து திரும்பவும் அதே இடத்திற்கு சென்றோம்.

இந்தமுறை முக்தி அடைந்த பெரியவரின்  கதையை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அந்த ஊர்  முதியவர் ஒருவரை
அணுகினோம்.

தம்பி எனக்கு வயசு எண்பத்தஞ்சு…

அய்யா நீங்க  சாமிய பாத்துருகீங்களா.

நல்லா பாத்துருக்கேன் பெப்பர் மி்ட்டாய் இல்ல அப்ப டின்லு தான் வரும்  அத வாங்கிட்டு பாக்கறவங்களுக்கு ஒரு கைப்பிடி கொடுக்கும் தம்பி.

அய்யா இங்க வந்தவரா  பொறந்தவரா

இல்ல தம்பீ பக்கத்து ஊருல மாடு மேய்ச்சுகிட்டு இருந்திச்சு ஒரு நாள் ரொம்ப நேரம் தூக்கிட்டுன்னு
வேலைக்கு வைச்சிருத்தவன் அடிச்சான் .

அந்தநேரம் பாத்து எங்க ஊரு லேந்து போனவங்க  ஏம்பா அடிக்கிறேன்னு கேட்டு அத அழச்சிட்டு வந்துட்டாங்க  அதிலேந்து அது இங்கதான்.

அது தான்  அந்தா இருக்கு பாருங்க அந்த முருகன் கோயில கட்டிச்சு அப்புறம் கிராமத்துல சேந்து பெரிசா கட்டினாங்க.

இங்க ரெண்டு குடும்பம் இருந்தீச்சு  எனக்கு தெரிஞ்சு பத்துவேலி நெலம்   அவுங்களுக்கு சாமிய பாத்து சாமியாவது   பூதமாவுது  ரொம்ப கடுப்பு ஏத்திகிட்டே இருந்தாங்க..

சாமி  போறப்ப  …நீங்க உருப்புடமா போவீங்க சொன்னிச்சு இன்னிக்கு  பத்து மா நெலம் கூட இல்ல தம்பீ.

அப்புறம் எங்கபோச்சு ங்க சாமி..

சாமியா அப்படி சொல்லும் சந்தேகம் எங்களுக்கு ஆனாலும் கேட்கவில்லை.

இந்த ஊரு கொடுத்து வைக்க ல  எங்கேயோ மெட்ராசுக்கு பேறவழியாம் அங்க போயி சமாதி ஆயிடுச்சு.

அது வாழ்ந்தது இங்க சமாதி அங்க தான் தம்பி.

வெளியூர் ஆளுங்க வந்து என்ன என்னம்மோ செய்யுறாங்க தம்பி  எல்லா பெரிய ஆளுங்க..

அத நல்லபடியா கவனிச்சு வைச்சிருந்தா இந்தஊரு  இன்னநேரம் எங்கேயோ தம்பி .

வர்றேங்க என்று விடைபெற்று
நிறைய சந்தேகங்களுடன் அந்த இடம் அகன்றோம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails