Saturday, June 12, 2010

வேதனை

அவனுடைய நடுமனது அரித்து என்னமோ செய்தது.  நடந்து கொண்டிருந்த திருமண விழாவில் அவனுடைய மனது செல்லவில்லை.

நம்ம வீட்டிலும் எப்பொழுது இம்மாதிரியான திருமணவிழா நடைபெறும்? இன்னும் நடவாமல் இருப்பது எதனால் ஏன் ? என்ற எண்ணமே தலைதூக்கி நிற்க. கண்களில் கண்ணீர் வராத குறைதான் .

அவனால் முடிந்த அவனது பங்களிப்பை தன்வீட்டில் கொடுத்துநிறைவேற்றிவிட்டான்.  அவனது வீடும் விழாவினை சீரும் சிறப்புமாய் நடத்தகாத்திருந்தது.

அவர்களும் பார்க்காத ஜாதகங்கள் இல்லை  நாடாத புரோக்கர்கள் இல்லை. பார்த்தஇடங்கள்ஒன்று , இரண்டு , மூன்று ......என நீண்டு செல்ல அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் நெடிய பயணத்தின் களைப்பு காணப்பட்டது.

நண்பர்கள்  பேசினார்கள் ஏதோ பேசினான் உள்ளுக்குள் இனம்புரியாத குமுறல் நிகழ்ந்தது. நடுத்தரகுடும்பம் ஆடி ஓடி எறும்பாய் ஒன்று சேர்த்து இந்த திருமணத்தை செய்துவிடலாம் என்ற தகுதி வந்தவுடன் தங்களுடைய வீட்டு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். 


நிகழ்வு வேறாக இருக்க இவனின் உள்வேதனையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. திருமணவிழாவில் பாதியில் வெளி கிளம்பினான். நெருங்கியவர்களுக்கு மட்டும் அர்த்தம் புரிதிருக்கும்.

2 comments:

Ragavachari B said...

தங்களுடைய ஆரம்பகால பதிவுகளை படித்தேன்.

http://thavaru.blogspot.com/2008_07_01_archive.html

திருக்குறள் போல் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வரிகளில் தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள். மிகவும் நன்றாக உள்ளது.

என்றும் அன்புடன்
ராகவன்.

அன்புடன் நான் said...

உண்மையிலேயே வேதனைத்தான்.

LinkWithin

Related Posts with Thumbnails