Wednesday, August 25, 2010

அத்தனையும் பணமா?

நாலு மடிப்பாய்  வெள்ளை  சிகப்பு தாள் ஒன்று மடித்து  கிடந்தது.   என்ன அது என்ற வினாவுடனே கீழே குனிந்து அதை எடுத்தான்.

எடுத்தவுடனே   முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி யை மறைக்கமுடியாது தடுமாறினான்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு  பையில் தினித்தவாறு நடந்தான்.

அப்பா…… இன்னய செலவுக்கு ஆண்டவன் கொடுத்துட்டுடான். நினைத்தவாறு மேற்கொண்டு முன்னேறினான்   ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து  கண்களால்  அங்குல அங்குலமாய்  மிகக் கவனமாக    தேடியப்படி யே நடந்தான் இன்னும் ஏதாவது   பணம்  கிடைக்குமா  என்ற தேடுதலுடன் நடந் தான் .

நடக்கும் போதே கற்பனை  வேறு ..இந்த  ஐம்பதுக்கு பதிலா  ஆயிரம் பத்தாயிரன்னு கிடைக்க கூடாதா இறைவா.

நடந்தான்….

முகம் தெரிந்தவர்களை கூட  அவன் கண்டுகொள்ளவில்லை   கண்கள் தரைப்பார்க்க  கிடக்கும்  வண்ண  காகிதங்கள்  அத்தனையும் பணமாக இருக்க மா  என்ற  எதிர்பார்ப்பில்    ஒவ்வொரு  காகிதத்தின் அருகில்   நின்று உற்றுபார்த்தவாறு நடந்தான்.

அவனுடைய  தேவையா  அல்லது அவனுடைய  ஆசையாக இருக்கலாம். அந்த   நிமிடம் முதல்  அவனுடைய  நடவடிக்கைகள்  மாறுபட்டு  இயல்பை தொலைத்த முகமாய்  நடந்தான்.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails