Wednesday, September 01, 2010

இக்கரைக்கு அக்கரை



குழப்பங்களுடன் நகரும் வாழ்வு இக்கரைக்கு  அக்கரை பச்சைக்காக அலையும் வாழ்வு வாழ்க்கையின் குறிகோள் இதுவென்று அடைந்தவர் எத்தனை பேர்?

அவன்  சம்பாதிக்கிறான்  இவன்  வீடு கட்டிவிட்டான்  நாள்தோறும் மற்றவர்களை    ஒப்பிட்டு  செல்லும் வாழ்வில் கிடைக்கும் ஒன்றிரண்டு  மகிழ்ச்சிகளை  இழந்து விடும் அவலம்.

எங்கு  புத்தி போயினும்  இல்லாதவை   பற்றியே நினைக்கும் உடும்பு பிடி வாழ்வு. முகமும்  உர்ரென்று…

சமூகத்தின் அவமானங்களை    சந்தித்து  மனம்  கூனி குறுகி நம்முடைய வாழ்விற்காக மற்றவர்களை  குறைகூறும் பண்பு.
வாய்ப்புகள் இன்மையால்  வீணாகும்   திறமை. தேவை   வினை  ஊக்கி  வெந்த   புண்ணில்  ஊசி குத்த பலப்போ்  ஆனால் ஊக்குவிப்பிற்கு….

இதையெல்லாம் தாண்டிதான் வரனும் தன்னம்பிக்கை பேசும். பின்னனியில்   தூக்கி விடும்ஏணிகளுடன்
நிறைய பேரின் பேச்சுதன்னபிக்கை.

ஒவ்வொரு செயலும்   நபரும் வள்ளுவனின்  வாக்கு ப்படி தகுந்த சந்தர்ப்பம்     காலம்  வரும் வரை   செயலின் வெற்றியோ  அல்லது நபரின் வெற்றியோ   பல்வேறு  வலிகளுக்கும் விமர்சனங்களுக்கு  உள்ளாக வேண்டிய ஒன்றே..

அதுவரை இக்கரைக்கு அக்கரை பச்சையே.

1 comment:

Ragavachari B said...

நல்ல பதிவு.

LinkWithin

Related Posts with Thumbnails