Sunday, October 03, 2010

அய்யோ சாமி….



நண்பருடைய  உறவினர் துக்கத்திற்கு  மாயவரம் வரை  சென்று குடந்தை வழியாக  திரும்பி கொண்டிருந்தோம்.
குடந்தையின் உள்ளே சொந்த வேலையின் காரணமாக  நகரின்
பல  வீதிகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை.

ராமசாமி கோவில்  வீதியில் அமைந்து்ள்ள  பஞ்சலோக சிலை தயாரிப்பு கடையில்  சுவாமி சிலைகள்  கண்காட்சியில் வைப்பது போல் வரிசையாக வைந்திருந்தார்கள்.

ஒவ்வொரு சிலையாக  பார்வையிட்டு கொண்டே நகர்ந்தேன்.  கடையின் உட்புறம் கண்களை  நகர்த்த   அய்யோ…சுவாமி..
மனசு கத்தியது.

அந்த மனிதன் கால்களுக்கிடையே  நடராஜர்  அல்லாடி கொண்டிருந்தார். ரம்பம் வைத்து  நடராஜரின் தோல்புறம் சரிசெய்து கொண்டிருந்தார்.

வண்டி நகர்ந்தது அடுத்தகடை யையும் உள்நோக்க    அங்கே  பிள்ளையார் சிறு  உளி வைத்து சுத்தியலால் அடிக்கப்பட்டு கொண்டிருந்தார்.

எலுமிச்சை  , தயிர் , பன்னீர், இளநீர் , மஞ்சள் தூள் மேலும் திருநீறு  ஆகியவற்றால் அபிசேகம் செய்யும் திருமேனியா இது.

ஆயிரம் ஆயிரம் ஜோடி கைகள் ஆண்டவனே …ஆண்டவனே..மனமுருகி வணக்கம் செய்யும் திருமேனியா  ஒரு மனிதனின் கால்களுக்குள் அகப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த மனிதன் பிள்ளையாரை   தூர வைத்து கண்களால் அளவிட்டான். ஏதோ முனுகினான்…

திரும்பவும் அவனது கால்களுக்கிடையே   பிள்ளையார் உட்கார்ந்து கொள்ள..

உளியால் செதுக்க ஆரம்பித்தான். அய்யோ   சாமி….

1 comment:

ப.கந்தசாமி said...

இதைப்பற்றி ஒரு பத்திரிக்கையில் படித்த ஞாபகம். ஒரு ஆன்மீகவாதி பதில் கூறியிருந்தார். இது தவிர்க்க முடியாதது. சிலை முற்றுப்பெற்று அதற்குச்செய்யவேண்டிய பூஜைகள் முடிந்த பிறகுதான் அந்த சிலைக்கு தெய்வீக சான்னித்யம் வருகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails