Thursday, October 07, 2010

வரலாறு பொய்யாகலாம்.

வண்ணான் துறைக்கு பக்கத்தில் புதியதாக  துறை  உங்களுக்கு  தனியாக உருவாக்கி கொள்ளுங்கள். உங்க சமூகத்தவர் அங்கு தான் குளிக்கவேண்டும்.

கல் ஒன்று   வாங்கி போட்டு கொள்ளுங்கள் என்று கிராமத்தில் உள்ள  பெரிய தலைகளால் ஊருக்கு புதிததாக  வந்து குடியமர்ந்த ராஜகம்பளத்தார் எனப்படும் ஜோஸ்யகாரர்களுக்கு கட்டளை  இடப்பட்டது.

ஏரியும் குளமும் சேர்ந்த எங்களது புத்தூரில் பொது படித்துறை  கருமாதி படித்துறை  வண்ணான் படித்துறை  என பலப்படித்துறைகள் பயன்பாட்டில் உண்டு.

புதிததாக வந்த ராஜகம்பளத்தார்கள்  பொதுப்படித்துறையில்  பழைய துணிகளை   போட்டு  துறையை  அசிங்கமாக்கி   மற்ற பொதுமக்கள் குளிக்க முடியாதப்படி பழைய துணிகள் காலில் மாட்டுகிறது என்ற பொதுவான  குற்றசாட்டின் பேரில்  கிராமத்து பெரிய தலைகளால் ராஜகம்பளத்தார்களுக்கு கட்டளை இடப்பட்டது.

மறுநாளே  குளத்தில் புதியத்துறை உருவாக்கி  நாலைந்து பேர் சேர்ந்து ஒருகல் தூக்கி வந்து போட்டார்கள்.

இது நடந்தது ஆறு வருடத்திற்கு முன்.

இன்று  நான் குளித்து  கொண்டிருக்கும்போது  ஒரு ராஜகம்பளத்தார் ஒருவர் குளிக்க வந்தார்.

அண்ண  ..இங்க கடந்த பழைய கல் எங்க...

எந்த கல்லு?

சொரியான் கல்லு....

ஓ...அதுவா...ஏரி முடுக்கு போயிடுச்சி...

நீங்க   துணிக்கு சோப்பு போடுற கல்லு நாங்க வாங்கி போட்டதுங்க..

மேலும் அவரே..  மொத்தம் மூணு கல்லு வாங்கியாந்து  அதே அந்த கருமாதி படித்துறையில ஒண்ணு  எதிர்புறம்   ரெண்டுகரையிலும் ரெண்டு கல்லு....

வரலாறு பொய்ததால் மௌனமாய்  நான்.

ரெண்டு கல்லு மறுநாள் காலையிலே தூக்கிட்டு போயிட்டாங்க...

இந்த  ஒரு கல்லுதான் பாக்கி... என்றார்.

சாதாரண  இச்செய்தியே  ஆறுவருடங்களுக்குள்  அதன் ஆதியே மாறி  வந்துள்ளது. நூற்றாண்டுகள் முன் நடந்த   நிகழ்வுகளின் உண்மை    என்பது எது?  படித்தவை கள் சரியாக இருக்கமா என்ற சந்தேகம் மனதில் ஓடியது.

வரலாறு  பொய்யாகலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails