Wednesday, October 13, 2010

காணாமல் போன மந்திரம்.



தியானம் செய்யதயாரனான். கண்கள் மூடினான் .குருவருள் போற்றி…திருவருள் போற்றி என சொல்லிகொண்டான். நாசி பார்த்தான் திரும்பவும் கண்கள் மூடினான்.

அவனுக்கு பிடித்த  “ஓம்”  மந்திரத்தை விடாமல் மனதுக்குள் சொல்ல ஆரம்பித்தான். அன்றைய  தினம் ஊரில் உள்ள ரவிஇவனுக்கு தரவேண்டிய பண ம்  ஞாபகத்திற்கு வர இவன் அன்று கட்டாயம் கொடுக்க வேண்டிய பணம்  எண்ணங்களாய் சுழன்றது.

அந்த பணத்தை எப்படி புரட்டலாம் வேறு யாரிடம் கடன் வாங்கலாம். வேறு ஏதாவது வழி உண்டா  என்ற விசாரணை ப்படம் மனதில் ஓடி கொண்டிருந்தது.

தொடக்கத்தில் மந்திரம் மட்டுமே ஓங்கி ஒலித்தது மனதில்    மிகக்குறைந்த காலஅளவில் மந்திரம் பின்னுக்கு தள்ளப்பட்டு எண்ணங்கள்    திரைப்படமாய் ஓட ஆரம்பிக்க  கண்கள்மூடிய  இருளில் எண்ணங்களின் திரைப்படத்தில் லயித்தது.

எல்லாவிமான   உணர்வுகளுக்கு உட்பட்டு படம் ஓடியது.
மந்திரம் காணாமல் போனது.

திடீரென்று விழிப்பு தட்டியது.  இன்றைக்கு இதுபோதும் என்ற மனது உட்கார்ந்த இடத்தை விட்டு  உடல் எழுந்திருக்க…

என்னப்பாரொம்பநாளியா தியானத்தில இருந்த போலிருக்கு..

சிரித்து கொண்டே நகர்ந்தான்.

தியானம்?

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails