Sunday, October 17, 2010

மணக்கால் ஜோஸ்யன்.

வெற்றிலை காவி ஏறியபல் , ஒட்டிய குழி விழுந்த முகம்   கையில் போட்டிருந்த கடிகாரம் எப்பொழுது வேண்டுமானாலும்   கீழே விழுந்து விடலாம் அவருடைய  கை ஆட்டி ஆட்டி பேசும் பழக்கத்தால் தப்பித்து கொண்டிருந்து.

கஷ்டங்கள் மனிதனை  சித்ரவதைக்கு உள்ளாக்க  அவன் நாடும் அடுத்த வழிகோவில் ,  ஜாதகம், மது  .

என்னுடைய கஷ்டங்களுக்கு என்ன காரணம்   நேரம் சரியாக  இல்லை போலும் ஜாதகத்தை பார்ப்போம் என்று  நண்பரிடம் விசாரிக்கையில்  அவர் அறிமுகம் செய்து வைத்தவர் தான்
மணக்கால் ஜோஸ்யன்.

வாங்க தம்பி... தம்பி சொன்னாரு..

ஒரு இருபது ரூபா இருக்கமா...கட்டிங் போட்டா கரெக்டா சொல்வேன் தம்பி.

தப்பா நெனைக்கவேணாம். நீங்க கொடுக்கறப்ப கொறைச்சுக்கலாம்.

நாய் வேசம் கட்டியாச்சு குலைச்சுதான் ஆகனும்.

பையிலிருந்து இருபது ரூபாயை  எடுத்து நீட்ட..

அஞ்சு நிமிசம் தம்பி..இதோ வந்துடுறேன்.

இவரு  என்ன கஷ்டத்த கொண்டுவரப்போறாரு தெரியலை யே   என்று நினைத்தவாறு அமர்ந்திருக்க..

கனைப்புடன் உள் நுழைந்தார்.

சுயப்புராணம் ஆரம்பித்தது.

முடியும் தருவாயில் தம்பி நான் பி.ஏ. ஆஙகிலம்..

 நான் உங்களுக்கு சொல்லறது ஆங்கிலமா...தமிழா...

தமிழ்ல  சொல்லுங்க...

சொல்ல ஆரம்பித்தார் ..என்ன புரியுதா….

நான் சொல்லிறேன் அப்புறம் கேளுங்க….

ஏதோ  சொன்னார் .ஏதோ  புரிந்து கொண்டேன்.

அந்த  இருபது கழிச்சி பாக்கி கொடுங்க தம்பி.

கணக்குல கரெக்டா இருக்குனும் தம்பி.

பத்து  நாட்கள் கழித்து வரும் வழியில்  எதிர்பாராமல் சந்திக்க…

தம்பி பரிகாரம் செய்ய சொன்னேன் செஞ் சீங்களா..

இல்லையே…

நான் சொன்னமாதிரி செய்ங்க.. ஒரு இருபது இருக்குமா…. என்றார்.

ஒரு வாரம் கழித்தது.

எதிர்பராத சந்திப்பில் ரொம்பவும் பழக்கப்பட்டவராய்
தம்பி நில்லுங்க என்றார்.

சனிபெயர்ச்சி ...பாத்துங்க  என்றார்.

மனசு சலனமுற்றது. என்ன ஆவும்.

சொல்ல ஆரம்பித்தவுடன் என் தலை  சுத்தியது.

எப்பா ஆள வுடுடா சாமி...அன்றைய கட்டிங்க்கு இருபது செட்டில் செய்து விட்டு நகர...

அவர் சொன்னமாதிரி ஒன்றும் நடக்கவில்லை.

இன்றும் சுற்றி கொண்டிருக்கிறான் அந்த ஆள். பார்த்தும் பார்க்காமல் தவிர்த்து  நான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails