Friday, November 12, 2010

காசு சிரித்தது.

பூப்பெய்தினாள் அந்தப்பெண். அவளுடைய அப்பா வெளிநாட்டில் வேலைப்பார்த்து கொண்டு இருந்தார்.
வீட்டோடு  மாப்பிள்ளை அவர்.

ஆரம்பகாலங்களில்   காசுக்காய்  பட்ட கஷ்டம் அதிகம். அந்த பெண்  குடும்பம். சகோதரர்களால் நல்லமுன்னேற்றம் ஏற்பட காசு பத்திய கவலை  இல்லாமல் போனது.

காசு தான் உலகம் என்று ஆனது அந்த குடும்பத்தினுடைய பெண்களுக்கு….

சகோதரனின்  நிதிபலத்தால்  புகுந்தகம் செல்லாமல்  பிறந்த ஊரிலியே  வீடு கட்டி கொண்டு தங்கிவிட்டார்கள்.
கணவன்மார்களும்பொண்டாட்டி  சொல் தட்டாது பிறந்தகத்தை விட்டு புகுந்தகம் வந்தார்கள்.

பொண்டாட்டிகளிடம் மதிப்பு கம்மி தான். என்ன செய்வது ? பிரச்சனை இல்லா குடும்ப நிர்வாகத்திற்கு ஆம்பிள்ளை சகித்து போகவேண்டும் என்கிற பாணி அவர்கள்.  கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள்.

காசு கண்ணை மறைக்க தன் பெண்ணின் சடங்கு போது  கணவன் வீட்டிற்கோ  கணவருடைய உறவினர் வீட்டுக்கோ சொல்லாமல் சடங்கு செய்தார்கள்.

கணவன் அப்பொழுது வெளிநாட்டில் இருந்தார். கோபம் அடைந்த கணவன் புகுந்த வீட்டிற்கு வராமல் பிறந்த   வீட்டிற்கு சென்று பெட்டியை இறக்கி அங்கேயே தங்கிவிட்டார்.

காசு போகுதே காசு.

பொண்டாட்டி கூப்பிட்டாள்  பதில் இல்லை.  சகோதரர்கள் முயற்சிக்க பலன் இல்லை.

அந்த ஊர் பெரியமனிதர்களை வைத்து பேச  அவர்களிடமும் பிடிவாதமாய் என் பெண்ணுடைய  தேவைக்கு என் வீட்டாரை  அழைக்கவில்லை யென்றால் நான் அவளுக்கு கணவனாக இருந்து என்ன பயன் ? என்று வாதம் செய்து  விவாகரத்து செய்யவும் தயார் என்று பிடிவாதம் பிடிக்க    காசு சிரித்தது.

பஞ்சாயத்தார்கள்  ஒருவழியாக பேசி அவரை சமாதானப்படுத்தி  புகுந்தவீட்டிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

அவர் கொண்டு வந்த  பெட்டி காசு சிரித்தது.

இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய பிறந்த வீடு சென்று பெட்டிகளை எடுந்துவந்து புகுந்த  வீட்டில் வைத்தார்.
அங்கு என்ன நடந்ததோ தெரியவில்லை   முகம் சரியில்லை.

பெட்டிகளை  இறக்கி வைத்து டீ குடித்தார். ஏதோ பலகாரம் சாப்பிட்டார்.

அய்யோ   வலிக்குதே…. சாய்ந்தார்... சாய்ந்தே   விட்டார்.

காசு சிரித்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails