Tuesday, November 23, 2010

குடி மறப்போம் குடி காப்போம்.

எங்கள் ஊருக்கு குடிவந்து பத்துவருடங்கள் இருக்கும். வெள்ளை வெளேரென்ற  தலைமுடியுடன் நல்ல திடகாத்திரமான உடல்வாகு.  எங்கள் ஊரின் உமர் முக்தார் என்று செல்லமாககூப்பிடுவார்கள். கிட்ட தட்ட எண்பதை நெருங்கி கொண்டிருந்தார்.  சோகங்களை  வெளியில் காட்டமாட்டார். எல்லோரிடமும் ஜாலியாக வம்பளத்தப்படி இருப்பார். பழையப் பாடல்கள் அத்துப்படி குரல் இனிமை.



இரு பையன்கள் மூத்தது அரசாங்க கூலி  இளையது சுமைதூக்கும் கூலி.

இளையது அன்றைய கூலியில் குடிப்பது போக  மீதம் தான் வீட்டிற்க்கு.  இளையதுக்கு இருபையன்கள்  கஷ்டம் தான்.

வேலை பார்த்து குடித்தது போக மூன்று வேலையும் குடிப்பதே வேலை ஆகி விட அப்பா (உமர்முக்தார்)கொடுத்த
நிலங்களும் அடமானம் ஆகிவிட்டது.

குடிப்பது குறைந்த பாடில்லை. 

என்ன கஷ்டமோ   தானாகவே பேசி  ரொம்பவும் குழம்பி கடைசியில் வயலுக்கு அடிக்கும்   பூச்சி மருந்தை வாங்கி குடித்து  நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர்துறந்தார்.

இனி அவரை நம்பியவர்களின் நிலைமை. எதிர்கால சந்ததியினர் நிலைமை ?

எனக்கு அவன் கொள்ளி போடுவான்னு நினைச்சேன் அவனுக்கு கொள்ளி போட்டாச்சு...
என்று தெரிந்தவர்களிடம் அவர்கள் கேட்கிறார்களோ    இல்லையோ    இவராக போய் சொல்லி ஆறுதல் தேடுவது தெரிந்தது.

4 comments:

தமிழ் உதயம் said...

மனது கணத்தது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வயதான பெற்றோர் இக்கொடுமைகளை சுமக்க நேரிடுவது கொடுமையிலும் கொடுமை..

குடிப்பதும் ஒருவித மனநோய்..

--------

உங்க வலைப்பூ தலைப்பு அதன் விளக்கம் வித்யாசமாகவும் தாழ்ச்சி , தன்னடக்கமாயும் ..:)

http://thavaru.blogspot.com/ said...

கண்களுக்கு முன்னாடி பலகுடும்பங்களில்
இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நிகழ்கிறது பயணமும் எண்ணங்களும்.

நன்றிங்க தமிழ்உதயம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆமாங்க பரிதாபம்தான் அக்குடும்பங்கள்..:(

LinkWithin

Related Posts with Thumbnails