Friday, November 26, 2010

தேடுதலில் தொலையும் வாழ்க்கை

தேடுதலில்
தொலைகிறது
வாழ்க்கை
காலையில்
தொடங்கிய
மழை  விடாது
பெய்தது
பசிக்க தவறாத
உடல்
உணர்த்திய அறிவு
பையில் காசு
உணவு தேடுகையில்
எரிய
மறுந்துப்போன
அடுப்புகள்
கடையில் தூங்கிய
பூனை
மழை பெய்கிறது
விட்டு விட்டு
வந்த மின்சாரம்
வராது நிற்க
இருளில் ழுழ்கிய
வீடு
தீக்குச்சிகள்
எரிந்த ஒலியில்
சிமில் விளக்கின்
தேடல்
வெளிச்சத்தில்
தூங்கிய குழந்தை
இருளில் முழித்து
வீறிட
பசியா…
பயமா…
உண   ர்வு தேடலில்
தாய்பரிதவிக்க
தந்தை
சிமில் விளக்கின்
தேடுதலில்…

4 comments:

KANA VARO said...

கவிதை நன்றாக இருக்கின்றது

Rathi said...

வாழ்க்கையை கூட தொலைத்தவர்கள் இருக்கிறார்களே!!!

தவறு said...

நன்றிங்க வரோ.

தவறு said...

தொலைத்தவர்களை விட இப்பொழுது தொலைத்து கொண்டிருப்பவர்கள் அதிகம் ரதி.

நன்றி..!

LinkWithin

Related Posts with Thumbnails